சிறுநீரகங்கள்
நம் ரத்தத்தில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் மிகமுக்கியமான பணியைச் செய்கின்றன சிறுநீரகங்கள். உடலில் இருக்கும்அதிகப்படியான நீரை அகற்றும் இயற்கை வடிகட்டியாகவும் சிறுநீரகங்களே செயல்படுகின்றன.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குத் தாமதமின்றி உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது.
போதுமான அளவு தண்ணீரை அதிகம் பருக வேண்டும். வயது வந்தவர்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவது அவசியம். முதுமையில் தாக உணர்ச்சி சற்றுக் குறையும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமே என்ற கவலையும் இருக்கும். இதுபோன்ற காரணங்களால் தண்ணீர் அருந்துவதைத்தவிர்த்துவிடக்கூடாது.
இதய நோயாளிகள் மற்றும் சிறுநீரகத் தொல்லை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீர் குடிக்கலாம்.
நமது உணவுமுறையில் உப்பின் அளவு அதிகமாகவே உள்ளது. ஒருநாளில் சராசரியாக 10 முதல் 15 கிராம் உப்பைச் சேர்த்துக்கொள்கிறோம்.
உலக சுகாதார நிறுவனம் ஒரு நாளில் 5 கிராம் பயன்படுத்தினால் போதும் என்று பரிந்துரைத்துள்ளது. எனவே, நம் உணவில் உப்பின் அளவைப் பாதியாகக் குறைத்தாலே சிறுநீரகம் பல ஆண்டுகள் பழுதின்றி உழைக்கும்.
முக்கியமாக உப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். ஊறுகாய், அப்பளம், வடகம், உப்பு அதிகம் உள்ள பிஸ்கட் வெண்ணெய், சீஸ், இறைச்சி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றில் உப்பு அதிகம்.
சிறுநீரில் நோய்த்தொற்று ஏற்பட்டால் தாமதிக்காமல் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
சிறுநீர்த்தாரையில் அடைப்பு போன்ற தொல்லைகள் ஏதும் இருப்பின் (உதாரணம்: சிறுநீரகம் மற்றும் சிறுநீர்த் தாரையில் இருக்கும் கட்டிகள், கற்கள், புராஸ்டேட் சுரப்பியின் வீக்கம்) அவை நாளடைவில் சிறுநீரகத்தைச் செயலிழக்கச் செய்யும்.
காலம் தாழ்த்தாமல் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனை பெற வேண்டும்.
புகையிலையை நிறுத்த வேண்டும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யும்போது சிறுநீரகம் சார்ந்த பரிசோதனைகளை (ரத்தத்தில் யூரியா, க்ரியாடினின், சிறுநீரில் புரதம்) அவசியம் செய்துகொள்ள வேண்டும்.
0
Leave a Reply