ஆஸ்துமா நோயாளிகள் அவசியம் செய்யக்கூடாதவை,செய்யக்கூடியவை
செய்யக்கூடாதவை
சுயமாக மருந்து, மாத்திரை உட்கொள்வது கூடாது.
.புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் விடவும்.
அலர்ஜி, ஆஸ்துமாவைத் தூண்டும் உணவுப் பொருட்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும்.
மூச்சுத் திணறல், இருமல் (பக்கவாட்டு விலா எலும்பு வலி), தூக்கமின்மை, காய்ச்சல் ஆகியவை வந்தால் தள்ளிப்போடாமல் மருத்துவரை அணுகவும்.
வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதைத் தவிர்க்கவும். உதாரணம்: பூனை, நாய், புறா, கிளி.
தூசு, குப்பை,அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தவும்.
படுக்கை, மெத்தை, தலையணை ஆகியவற்றில் ஆஸ்துமாவை உண்டாக்கும் பூச்சிகள் குடியேற வாய்ப்பு இருப்பதால் அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்.
நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்படும் போது பயப்படக்கூடாது.
வீட்டு உபயோக ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கத் தயங்கக்கூடாது. ஆக்சிஜன் சிலிண்டர் உபயோகப்படுத்தும் போது புகைப்பிடிக்ககூடாது, வெடித்துவிடும்.
தனிமை தவிர்க்கப்பட வேண்டும்.
மன அழுத்தம் வராமல் இருக்க மருத்துவமும் பயிற்சியும் தேவை.
மார்பு பிசியோதெரபி தேவைப்படும்போது அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் (உள்ளிருக்கும் சளியை வெளிக்கொணர)
சாப்பிட்டவுடன் படுக்கக்கூடாது.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு அவசியம் செய்யக்கூடியவை.
முறையாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு அவசியம்.
வாகனம் ஒட்டும் போதும், சமையல் செய்யும் போதும், ஒட்டடை அடிக்கும் போதும் துணியால் முகத்தை மூடிக்கொள்வது அவசியம்.
ஆஸ்துமா நோயாளிகள் மருத்துவரிடம், தாங்கள் பிறநோய்களுக்கு உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளைக் காட்டுவது மிக முக்கியம்.
யோகா பயிற்சி அவசியம்.
சரியாக உட்காரும், உறங்கும் முறைகள் தெரிய வேண்டும்.
தொப்பை, உடல் பருமனைக் குறைக்கவும்.
மன தைரியம், உற்சாகம், ஊக்கம் ஆகியவற்றை ஆலோசனை மூலம் அதிகரித்தல் வேண்டும்.
ஆஸ்துமா சிகிச்சையை மருத்துவரின் அனுமதியோடு மட்டுமே தொடங்க வேண்டும்.
தேவைப்படும் போது நீராவி பிடித்தல்.
சைனஸ், வயிறு எரிச்சல் போன்றவை தீர்க்கப்பட வேண்டும்.
இன்ப்ளுயன்சா, நிமோனியா தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.
மருந்துப் பம்புகள் உபயோகிக்கும் முறையைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தேவையெனில் சக்கர நாற்காலியை உபயோகிக்கத் தயங்கக்கூடாது.
காற்றோட்டமான அறை, வீடு அவசியம்.
வீட்டில் அவசர உதவிக்கு அழைப்பு மணி (Alarm) தேவை.
0
Leave a Reply