நிமோனியா.
முதியோர்களுக்கு வரும் இருமல் சளித் தொல்லைகளில் நிமோனியா முக்கியப் பங்கு வகிக்கிறது. இது ஒரு பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று நோய் இந்நோய் உள்ளவர்கள் இருமும்போது காற்றின் மூலம் மற்றவர்களுக்குப் பரவும். இந்நோயின் முதல் அறிகுறி காய்ச்சல், உடல்வலி மற்றும் வாந்தி, இதைத் தொடர்ந்து இருமல், சளி, மூச்சுத் திணறுதல் போன்றவை தோன்றும். இருமல் அதிகரிக்கும் பொழுது சிலருக்கு சளியில் ரத்தமும் கலந்திருக்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்நோய் காது, தலை (சைனஸ்) மற்றும் மூளையைப் பாதித்து உயிருக்கேகூட ஆபத்தை விளைவிக்கும். மிகவும் வயதானவர்களுக்கு இந்நோய் மனக்குழப்பம், கீழே விழுதல் மற்றும் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலையைக்கூடஏற்படுத்தும்.
நிமோனியா வர வாய்ப்புள்ளவர்கள்
மிகவும் வயதானவர்கள்.
நீரிழிவு நோய்.
இதய நோய்.
சிறுநீரக நோய்.
தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள்.
அதிகமாக மது அருந்துபவர்கள்.
ஸ்டீராய்டு மருந்தைத் தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்கள்.
சமீபத்தில் ப்ளூ ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.
ஆஸ்துமா, நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
தூசி நிறைந்த இருப்பிடம்.
புற்றுநோய்
மாற்று உறுப்பு பெற்றிருப்பவர்கள்
எய்ட்ஸ் நோய்
முதுமையில் நோயின் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்நோய் மரணத்தைக்கூட விளைவிக்கும். ஆகையால் இந்நோய் வராமல் தடுப்பதே நல்லது. இதற்கும் தடுப்பூசி உண்டு. சுமார் 50 வயதைக் கடந்தவர்கள் ஆயுளுக்கு ஒரே ஒருமுறை இந்த ஊசியை எடுத்துக்கொண்டால் போதும், ஒருசிலருக்கு, முக்கியமாக இணை நோய் உள்ளவர்கள் மட்டும் ஓராண்டு கழித்து இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம்.இந்த தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் எதுமில்லை, தேவைப்படுவோர் இன்புளூயன்ஸா தடுப்பூசியையும் ஒரே நேரத்தில் போட்டுக் கொள்ளலாம்.
0
Leave a Reply