25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


முற்றிலும் நினைவிழந்த நிலை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முற்றிலும் நினைவிழந்த நிலை.

முற்றிலும் நினைவிழந்த நிலையில் (Coma) இருப்பவருக்கு தனது நிலையைப் பற்றி எதுவும் தெரியாதது மட்டுமல்ல, வெளியிலிருந்து வரும் எவ்விதத் தூண்டுதல்களையும் அறியாத ஒரு நிலையில் இருப்பார். ஆனால் இதயத்துடிப்பு, சுவாச நிலை, சிறுநீரகத்தின் செயல் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாடு ஓரளவிற்கு ஒரு காலகட்டம் வரை சரியாகவே இயங்கிக் கொண்டிருக்கும். மூச்சு அடிக்கடி விடுதல் அல்லது மெதுவாக விடுதல் போன்ற நிலை ஏற்படும். பொதுவாக காய்ச்சலும் கூடவே இருக்கும்.

காரணங்கள்

நுரையீரல் செயலிழப்பு, இதயம் வலிமை இழத்தல்,சிறுநீரகம் செயலிழப்பு,கல்லீரல் செயலிழப்பு,

அளவிற்கு அதிகமான ரத்தப்போக்கு, உ.ம்.: விபத்து, அறுவை சிகிச்சை,

அளவிற்கு அதிகமான தூக்க மாத்திரை,மதுவின் விளைவு,

ரத்தத்தில் மிகக்குறைந்த அல்லது அதிகமாக உள்ள சர்க்கரையின் அளவு

தைராய்டு குறைவாகச் சுரத்தல்,

தயாமின் வைட்டமின் குறைவு,

வலிப்பு நோய்,

அதீத நீர் வறட்சி,

உப்பின் அளவு மிகக்குறைந்த நிலை,

நோய்த்தொற்று, உ.ம்.ஃபேக்ட்டீரியா, வைரஸ் கிருமிகளின் தாக்கம்,

மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவு (Brain haemorrhage),

கபாலத்திற்கு உள்ளே மற்றும் மூளைக்கு வெளியே உள்ள இடைவெளியில் ஏற்படும் ரத்தக்கட்டி  (Sub dural haematoma),

மூளையில் ஏற்படும் சாதாரண கட்டி அல்லது புற்றுநோய்,

தலைக்காயம்.

மருத்துவர், இந்நிலையில் உள்ளவரின் நெருங்கிய உறவினரிடம் இந்நிலை எவ்வாறு ஏற்பட்டது என்று முழுமையாகக் கேட்டறிவது மிகவும் அவசியம். 

உதாரணம்: திடீரென்று கீழே விழுதல், விபத்திற்கு உள்ளாவது, மருந்தை அளவிற்கு அதிகமாக உண்ணுதல்.நோயாளியை மருத்துவர் முழுமையாகப் பரிசோதனை செய்து முற்றிலும் நினைவிழந்தநிலைக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சிப்பார்.

முற்றிலும் நினைவிழந்த நிலைக்கான காரணத்தைக் கண்டறிந்து விரைவில் சிகிச்சை அளிக்க முயற்சிக்க வேண்டும். இதற்கான காரணத்தைக் கண்டறிய உறவினர்களின் பங்கு மிகவும் அவசியம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News