ஆரோக்கியமான வாழ்வுக்கு துளசி
பாரம்பரிய வைத்திய முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஒன்றான துளசிஎனும் மூலிகை .2 கப் தண்ணீருடன்10 துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். பின் இந்த நீரில் சுவைக்கு தேன் சேர்த்து கசாயம் போல் பருகி வர சளி, காய்ச்சல், தொண்டை வலி பிரச்சனைகளை விரட்டலாம். ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த துளசி இலைகளை அழற்சி எதிர்ப்பு கொண்ட தேனுடன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிப்பில் இந்த துளசி இலைகளை அப்படியே மென்று சாறு விழுங்க, செரிமான செயல்பாடு மேம்படும்.
துளசி இலைகளை சேர்த்து தேநீர் வடிவில் எடுத்துக்கொள்ள, ஆற்றல் இழப்பை தடுப்பதோடு நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்ஒரு கிளாஸ் தண்ணீரில்5to6 துளசி இலைகளை சேர்த்து, ஒரு நாள் இரவு முழுவதும் நன்கு ஊற வைக்கவும். பின் இந்த நீரினை வெறும் வயிற்றில் பருக செரிமான சிக்கல் நீங்குவதோடு ஆரோக்கிய உடல் எடையை பராமரிக்கலாம். துளசி இலைகளுடன் புதினா இலைகளை சேர்த்து அரைத்து சாறு பிரித்து பின் சிறிதளவு எலுமிச்சை சாறு, கசப்பு நீங்கும் அளவு தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் வடிவில் பருக குடல் இயக்கம் மேம்படும். 2-3 துளசி இலைகளை கிராம்பு ஒன்றுடன் சேர்த்து வாயில் மோட்டு மென்று சாற்றை மட்டும் விழுங்கிவிட, சளி - தொண்டை எரிச்சல் பிரச்சனையில் இருந்து சற்று நிவாரணம் காணலாம்செடியில் இருந்துfreshஆக பறித்த துளசி இலைகளையே பயன்படுத்த வேண்டும். பதப்படுத்தப்பட்ட/ குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட துளசி இலைகளை பயன்படுத்துவது கூடாது! .
0
Leave a Reply