25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 03, 2024

283 நீர்நிலைகளில் வண்டல் மண் / களிமண் எடுக்க அனுமதி அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளிலிருந்து கட்டணம் இல்லாமல் வண்டல் மண்/ களிமண் எடுப்பது தொடர்பாக அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் (01.07.2024)அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.தமிழ்நாடு அரசால் சிறுகனிம விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களிலிருந்து கட்டணம் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்ட தொழில் செய்வதற்கும் வண்டல் மண் / களிமண் எடுக்க சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களே இணைய வழியில் அனுமதி வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது,அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளிலிருந்து கட்டணமில்லாமல் வண்டல் மண் எடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 01.07.2024 நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் 283 நீர் நிலைகளில் வண்டல் / களிமண் எடுக்க விருதுநகர் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.4, நாள்:29.06.2024 மற்றும் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.5, நாள்:01.07.2024-ன்படி அனுமதி அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு வட்டத்தில் 49 நீர்நிலைகளும், சிவகாசி வட்டத்தில் 11 நீர்நிலைகளும், இராஜபாளையம் வட்டத்தில் 44 நீர்நிலைகளும், காரியாபட்டி வட்டத்தில் 16 நீர்நிலைகளும், திருச்சுழி வட்டத்தில் 47 நீர்நிலைகளும்;, விருதுநகர் வட்டத்தில் 13 நீர்நிலைகளும்;, சாத்தூர் வட்டத்தில் 28 நீர்நிலைகளும்;, திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 46 நீர்நிலைகளும்;, அருப்புக்கோட்டை வட்டத்தில் 17 நீர்நிலைகளும்;, வெம்பக்கோட்டை வட்டத்தில் 12 நீர்நிலைகளும்; என மொத்தம் 283 நீர் நிலைகள் இனம் கண்டறியப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலான நீர்நிலைகளில் வண்டல் மண்ஃகளிமண் எடுக்க அனுமதி அளித்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வண்டல் மண் / களிமண் தேவைப்படும் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் தாம் வசிக்கும் வட்டத்தின் அருகாமையில் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளிலிருந்து எடுத்திட இணைய வழியில் விண்ணப்பம் செய்து, சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதி பெற்று, தங்களது சொந்த செலவில் வண்டல் மண் /களிமண் வெட்டி எடுத்து தமது வயல்களை வளம் பெறச் செய்வதோடு, மண்பாண்டத் தொழிலாளர்களும் தங்களது தொழிலை மேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.விவசாய பயன்பாட்டிற்காக வண்டல்மண் /களிமண் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் தங்களது நில ஆவணங்களை இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இவ்விண்ணப்பங்கள் வருவாய்த் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இணைய தரவுகளின் கீழ் நில ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தொடர்புடைய வட்டாட்சியரால் வண்டல் மண்/களிமண் எடுக்க 30 நாட்களுக்கு மிகாமல் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படும்.விவசாய பயன்பாட்டிற்கென நஞ்சை நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது ஒரு ஹெக்டேருக்கு 185 கன மீட்டர் அளவிலும், புஞ்சை நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் அல்லது ஒரு ஹெக்டேருக்கு 222 கன மீட்டர் அளவிலும், மண்பாண்டம் தயாரித்திட 60 கன மீட்டர் அளவிலும் மற்றும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டர் அளவிலும் கட்டணமில்லாமல் வண்டல்மண்/களிமண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இவ்வாய்பினைப் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும், களிமண் மற்றும் வண்டல் மண் எடுப்பதை கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் துணை ஆட்சியர் நிலையில் திரு.தி.வெ.ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் வட்டாட்சியர் நிலையில் திரு.சீனிவாசன், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ஆகிய அலுவலர்கள் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்கள் அல்லது புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை துறையிலும், கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா அலைபேசி எண்.1077-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.மண் எடுக்க அனுமதி பெற்று முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 03, 2024

மாவட்ட கலைக்கல்லூரிகளில் காலிப்பணியிடம் இருப்பதால் கல்லூரிக் கல்வி இயக்ககம், இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தேதியினை நீட்டித்துள்ளது

விருதுநகர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2023 - 24ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 17,448. தேர்ச்சி பெற்ற மாணவர்களில் இதுவரை மொத்தம் 17,198 பேர் (98.6%) (கலந்தாய்வில் கலந்து கொள்ள காத்திருக்கும் மாணவர்களையும் சேர்த்து) உயர்கல்விக்கு செல்கிறார்கள். மீதம் உள்ள 308 மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  முதற்கட்ட சேர்க்கை நடந்து முடிந்த நிலையில் மேற்கண்ட பாடப்பிரிவில் காலிப்பணியிடம் இருப்பதால் கல்லூரிக் கல்வி இயக்ககம், இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தேதியினை நீட்டித்துள்ளது. TNGASA  இணையதளத்தில் விண்ணப்பிக்காத மாணவர்கள் 03.07.2024 முதல் 05.07.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.அரசு கலைக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் ரூ.1000/- வீதம் கல்வித் தொகை கிடைக்கும்.பாடப்பிரிவு காலியிட விவரம்1 அரசு கலைக்கல்லூரி, சாத்தூர்.பி.ஏ., தமிழ் 21பி.ஏ., ஆங்கிலம் 43பி.எஸ்.சி., கணிதம் 55பி.காம்., 172 அரசு கலைக்கல்லூரி, திருச்சுழி.பி.ஏ., தமிழ் 04பி.ஏ., ஆங்கிலம் 44பி.காம்., 26பி.எஸ்.சி., வேதியியல் 21பி.எஸ்.சி., கணினி அறிவியல் 143.அரசு கலைக்கல்லூரி, அருப்புக்கோட்டைபி.ஏ., தமிழ் 30பி.ஏ., ஆங்கிலம் 48பி.எஸ்.சி., கணிதம் 48பி.காம்., 154.அரசு கலைக்கல்லூரி, திருவில்லிபுத்தூர்பி.ஏ., ஆங்கிலம் 14பி.எஸ்.சி., கணிதம் 455.  அரசு கலைக்கல்லூரி, சிவகாசிபி.ஏ., தமிழ் 02பி.ஏ., ஆங்கிலம் 04பி.எஸ்.சி., கணிதம் 19பி.காம்., 01பி.எஸ்.சி., கணினி அறிவியல் 02பி.எஸ்.சி., தாவரவியல் 08பி.எஸ்.சி., விலங்கியல் 02பி.எஸ்.சி., வேதியியல் 02பி.எஸ்.சி., இயற்பியல் 06பி.பி.ஏ., 04பி.ஏ., வரலாறு 12பி.ஏ., பொருளாதாரம் 05எனவே விருதுநகர் மாவட்டத்தில் இது வரை கல்லூரிகளில் சேராத மாணவர்கள் உடனடியாக சேருவதற்கும், இதற்கு முந்தைய ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களும் இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து படித்து பட்டம் பெறுவதற்கு முன் வரவேண்டும்.பெற்றோர்களும், உறவினர்களும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கக் கூடிய உயர்கல்வி ஆலோசனை மையத்தில் வந்தும் விண்ணப்பித்தும் கொள்ளலாம். இதற்காக உயர்கல்வி சேர்க்கைக்காக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை 05.07.2024 அன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 03, 2024

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது குறித்து மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு

தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்களை தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்த 7 குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளிலும் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள்  விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.       கடந்த  01-01-2024 முதல்  22-06-2024 முடிய உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும்  குழுவாக இணைந்து  427 முறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்ட 165 கடைகள்  மற்றும் 10 வாகனங்களில் 729 கிலோ 500 கிராம் எடையிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 165 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும், 165 கடைகள் மற்றும் 10 வாகனங்களுக்கும்;;  ரூ.38,60,000 ( ரூபாய் முப்பத்து எட்டு இலட்சத்து அறுபதாயிரம்)  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   கடந்த 23-06-2024 முதல் 29-06-2024 முடிய ஒரு வாரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், காவல் துறையினரும்  இணைந்து  மேற்கொள்ளப்பட்ட 21 குழு ஆய்வுகளில்        13 கடைகள் மற்றும் 3 வாகனங்களில்; 121 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 13 கடைகள் சீல் வைக்கப்பட்டன. 13 கடைகள் மற்றும்  3 வாகனங்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால்  ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2வது முறையாக  தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரை  கடை மூடி சீல் வைக்கப்படும.; 3வது முறையும் தவறு செய்தால்  ரூ.1 லட்சம் அபராதம், மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். இம்மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு  வைப்பது  கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 03, 2024

2023-2024- ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புரப்பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றிற்கு மணிமேகலை விருது வழங்குவதற்கு  அரசாணை(நிலை) எண் : 76, நாள்:15.03.2024-இன்படி ரூ.3.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மணிமேகலை விருது பெறுவதற்கு சமுதாய அமைப்புகளை தேர்வு செய்வதற்கான தகுதி வரம்புகள் குறித்து இவ்வரசாணையில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.  மேலும் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கும் சமுதாய அமைப்புகளை கீழ்க்காணும் 6 காரணிகளின் அடிப்படையில் தேர்வு செய்திட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1. கூட்டம் தொடர்ந்து முறையாக நடத்தப்பட்டிருக்க வேண்டும்.2. சேமிப்புத் தொகையினை பயனுள்ளதாக பயன்படுத்திருக்க வேண்டும்.3. வங்கிக்கடன் பெற்றிருக்க வேண்டும்.4. குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைந்திருக்க வேண்டும்.5. திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.6. சமூக நல நடவடிக்கைகளில் பங்கெடுத்திருக்க வேண்டும்.    அதன்படி, விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக  வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புரப்பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றிற்கு 2023-24-ம் நிதி ஆண்டிற்கு மணிமேகலை விருது வழங்குவதற்கு உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி தகுதியுடைய சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 03, 2024

தமிழ்நாடு நாளையொட்டி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன

தாய்த் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 (18.07.1967) ஆம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள்  ”தமிழ்நாடு நாளாகக்” கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பெற்றது.இவ்வறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 09.07.2024 ஆம் நாள்  முற்பகலில்  விருதுநகர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்திலுள்ள மாவட்ட நூலக அலுவலகக் கட்டடத்தில் நடைபெற உள்ளது.அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் இப்போட்டிகளில்  பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள்  முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.கட்டுரைப் போட்டி “ஆட்சி மொழி தமிழ்” என்ற தலைப்பிலும்,  பேச்சுப்போட்டிகள் குமரித் தந்தை மார்சல் நேசமணி, தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி என்ற தலைப்புகளிலும் நடைபெறும்.மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10,000/-,  இரண்டாம் பரிசு ரூ.7000/- ,  மூன்றாம் பரிசு ரூ.5000/-   என்ற  வீதத்தில்  வழங்கப்பெறவுள்ளன.  மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் மட்டும் 12.07.2024 அன்று சென்னை மாநில  மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மாநில அளவிலான  போட்டியில் கலந்து கொள்ள  அனுமதிக்கப்படுவர்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 02, 2024

மாவட்ட வேலைவாய்ப்பபு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -2 தேர்விற்கான ஒருங்கிணைந்த குறுகியகால அடிப்படை பயிற்சி வகுப்பு

விருதுநகர் மாவட்டம், சூலக்கரை மாவட்ட வேலைவாய்ப்பபு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -2 தேர்விற்கான ஒருங்கிணைந்த குறுகியகால அடிப்படை பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S, அவர்கள்(01.07.2024) தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2327 காலிப்பணியிடங்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-2 தேர்வு வரும்  14.07.2024  அன்று  நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால்  ஒருங்கிணைந்த குறுகிய கால அடிப்படை பயிற்சி வகுப்புகள் 01.07.2024 முதல் 05.07.2024 வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரையில்  நடைபெறுகிறது.இவ்வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படுகிறது. இக்குறுகிய கால அடிப்படை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.அதன்படி, இந்த குரூப் -2 தேர்விற்கான ஒருங்கிணைந்த குறுகியகால அடிப்படை பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆடசித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.போட்டித் தேர்வு என்பது பயிற்சி பெற்றவர்களுக்கும், மற்றவர்களுக்குமான ஒரு போட்டியாகும். வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெறாதவர்களுக்கும் இடையில் உழைப்பு, படிப்பு ஆகியவற்றில் பெரியதாக வேறுபாடுகள் இருக்காது. ஆனால் அவர்கள் பெற்றிருக்கக் கூடிய மதிப்பெண்களில்  சிறு இடைவெளி தான் இருக்கின்றன.ஆனால் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு உள்ள தனித்தன்மை என்ன என்று எடுத்து பார்த்தால், சில நுணுக்கங்களை அவர்கள் கற்றுக் கொண்டிருப்பார்கள். அந்த நுணுக்கங்களை கற்றுக் கொள்ளவில்லை என்றால் மறுபடியும் அந்த தேர்வு எழுதுவதற்கு ஓராண்டு ஆகிவிடும். இதனால் கால தாமதமாகும். கல்லூரி படித்தவர்களில் அவர்களுடைய மிக முக்கியமான வாழ்க்கை காலகட்டத்தில் ஓராண்டு என்பது மிகவும் முக்கியமானதாகும்.சில நேரங்களில் அடுத்து அதற்காக தயார் செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் கூட போகலாம். அதனால் தான் எந்த ஒரு இது மாதிரியான சிறப்பு வேலைக்கு சென்றாலும் ஒரு உயர் கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும் என்றாலும், போட்டித் தேர்வுகள் தயார் செய்யக்கூடிய மாணவர்களுக்கு பயிற்சி மிக முக்கியமானது. விளையாட்டு, படிப்பு என எந்த ஒரு போட்டிக்கும் சிறப்பான நுணுக்கங்கள் இருக்கும். அந்த நுணுக்கங்களை தாங்களாகவே தவறுகள் மூலம் கற்றுக் கொண்டு, தேர்ச்சி பெறுவதற்கு காலம் ஆகும்.அதற்கான கால விரையத்தை குறைக்க வேண்டும். இந்த பயிற்சியின் மூலம் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இப்பயிற்சிகள் மூலம் கவனக் குறைவு, தவறுகளை தவிர்த்தல் போன்றவைகள் பற்றி பயிற்சி அளிக்கும் போது அவர்கள் நல்ல முறையாக தேர்வு எழுத முடியும் என்பதற்கான தான் இந்த பயிற்சி.பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், கல்லூரி முடித்து போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கும் நான் முதல்வன் என்ற முக்கியமான திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சிகளை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. அதில் குறிப்பாக இத்திட்டத்தில் போட்டித் தேர்வுக்கு என்று தனி ஒரு அமைப்பு மூலமாக நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவில் நிறைய பயிற்சிகள் வழங்குகின்றார்கள். இந்தியா முழுவதும் டிஎன்பிசி மூலம் வருடத்திற்கு சுமார் 15 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.அதே போல இந்தியா முழுவதும் ஏறத்தாழ 2 இலட்சம் வேலை வாய்ப்புகள் ரயில்வே, எஸ்.எஸ்.சி, வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன.இதில் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் நிறைய பேர் ஆங்கிலம் கணிதம் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். இந்த இடைவெளியை நாம் நீக்க வேண்டும் என்ற நோக்கில் இணையதள பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.குறிப்பாக தமிழ்நாடு அரசினுடைய வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, நான் முதல்வன் இணையதளம், அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ஆகியவற்றின் இணையதளம் மற்றும் யூ-டியூப் மூலம் நடத்தப்படும் 20 மணி நேர ஆங்கிலம், திறனறிவு உள்ளிட்ட வகுப்புகளில் பயிற்சி செய்யும் போது நீங்கள் நிறைய கற்றுக் கொள்ளலாம்.

Jul 02, 2024

வயிற்றுப் போக்கு தடுப்பு முகாம் -2024 மற்றும் வைட்டமின் - A சிரப் வழங்கும் முகாமில், 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் பொடி மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கும் பணி

விருதுநகர் சூலக்கரை அங்கன்வாடி மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற, வயிற்றுப் போக்கு தடுப்பு முகாம் -2024 மற்றும் வைட்டமின் -A வழங்கும் முகாமில், 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் பொடி மற்றும் வைட்டமின் - யு சிரப், துத்தநாக மாத்திரைகள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள்(01.07.2024) தொடங்கி வைத்தார்.மேலும், ஓ.ஆர்.எஸ் கரைசல் தயாரிக்கும் முறை மற்றும் துத்தநாக மாத்திரை உட்கொள்ளும் முறை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தாய்மார்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.மாவட்டத்தில் வயிற்று போக்கினால் ஏற்படும் குழந்தைகளின் இறப்பை தடுக்க, வயிற்று போக்கை கட்டுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு முகாம் அனைத்து அங்கன்வாடி, துணை சுகாதார, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் ஜூலை 1 முதல் ஆக., 31 வரை நடைபெற உள்ளது.இம்முகாமில், 6-க்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ்., பாக்கெட் வழங்கப்படும். மேலும் தாய்ப்பாலின் மேன்மை, ஓ.ஆர்.எஸ்., கரைசல் தயாரிக்கும் முறை, துத்தநாக மாத்திரை வழங்கும் முறை குறித்து விழிப்புணர்வு வழங்கப்படும்.இம்முகாம்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் 1504 அங்கன்வாடி மையங்கள் வாயிலாக 6 வயதிற்குட்பட்ட 1,28,267 குழந்தைகள் பயனடைய உள்ளார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.யசோதாமணி, மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்) திருமதி தனலெட்சுமி உட்பட அரசுஅலுவலர்கள், தாய்மார்கள், குழந்தைகள், அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jul 02, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களைபெற்றுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் தலைமையில் (01.07.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமணஉதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களைபெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.  அதனை தொடர்ந்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பாக மானியக் கோரிக்கையில் 26 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சார்ந்த 103 நகர்புற பயனாளிகளுக்கு தலா ரூ.4 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.4.12 கோடி மதிப்பிலான மானியத்தில் புதிதாக வீடு கட்டுவதற்கு பணி ஆணை ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, இன்று 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.20 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும் இளைஞர்களுக்கான நெசவுப்பயிற்சி திட்டத்தின் கீழ்  பயிற்சி பெற்ற 20 பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பாக மண்பாண்டங்கள் செய்யும் குடும்பங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு தலா ரூ.21,470 வீதம் 15 பயனாளிகளுக்கு ரூ.3.22 இலட்சம் மதிப்பில் இலவச மின் விசை மண்பாண்ட சக்கரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, உதவி இயக்குநர்(கைத்தறி மற்றும் துணிநூல் துறை) திரு.வெங்கடேசலு, உட்பட பல்வேறுதுறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Jul 02, 2024

சுந்தரராஜபுரம் -ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் காலிபணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் சுந்தரராஜபுரம் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு வேதியியல் பாட முதுகலை பட்டாதாரி ஆசிரியர் பணி காலியிடத்திற்கு மாதம் ரூபாய் 18,000/- என்ற மாத தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியரை நியமித்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியம் அல்லது பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வரை அல்லது 2024-2025 இக்கல்வியாண்டில் எது முன்னரோ அது வரையில் பணியமர்த்தப்படுவர்.பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்யப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு முதுகலைபட்டதாரி ஆசிரியருக்கான தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளில் உள்ளவாறு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன் ஆசிரிய தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவருக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலருக்கும் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணிகளுக்கான தகுதிவாய்ந்த நபர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு மூலம் தேர்வு செய்யப்படுவதுடன் இப்பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானதாகும். தற்காலிக பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 28.06.2024 முதல் 05.07.2024-க்குள் விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 01, 2024

வெடி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் 4 குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமம் குருஸ்டார் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு  தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் வீதம் 4 நபர்களுக்கு மொத்தம் ரூ.12  இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள்  (29.06.2024)  வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியருக்கு  சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் 29.06.2024 அன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 இலட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, வெடிவிபத்தில் உயிரிழந்த வெம்பக்கோட்டை வட்டம், அச்சங்குளத்தை சேர்ந்த திரு.ராஜ்குமார் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி ராஜலட்சுமி என்பவருக்கும்,  சாத்தூர் வட்டம் நடுச்சூரங்குடியை  சேர்ந்த திரு.மாரிச்சாமி  என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி குருவம்மாள் என்பவருக்கும், வெம்பக்கோட்டை வட்டம் V..சத்திரப்பட்டியை சேர்ந்த திரு.செல்வகுமார் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி)         திருமதி ஈஸ்வரி என்பவருக்கும், வெம்பக்கோட்டை வட்டம் V..சத்திரப்பட்டியை சேர்ந்த திரு.மோகன் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி)  திருமதி விஜய மாரிஸ்வரி என்பவருக்கும்  என உயிரிழந்த 4  நபர்களின் வாரிசுதார்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.12  இலட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், வட்டாட்சியர் திரு.லோகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 39 40 41 42 43 44 45 ... 69 70

AD's



More News