25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


ரூ.6.44 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள்  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு  திறந்து வைத்தனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரூ.6.44 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

விருதுநகர் வட்டம், கன்னிச்சேரி புதூர்  அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் ரூ.6.44 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கட்டடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை இயக்குநர் மரு.தி.சி.செல்வவிநாயகம் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்,  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் இன்று (30.07.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கான மருந்து பெட்டகம், பிரசவித்த தாய்மார்களுக்கு தாய் மற்றும் சேயுடன் கூடிய புகைப்படத்துடன் தாய் சேய் நலப்பெட்டகம், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்; அவர்கள் வழங்கினார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் மூலம் சிறந்த மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்கி, அதன் மூலம் பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் வழங்கும் நோக்கில் எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி செயலபடுத்தி வருகிறது.தமிழ்நாட்டில் உள்ள வருவாய் மாவட்டங்களில் விருதுநகரில் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய மருத்துவ திட்டங்கள் போல் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதிக அளவில் திட்டங்கள் மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதன்படி, கன்னிசேரி புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பில் புற நோயாளிகள் பிரிவு கட்டடம், வச்சக்காரபட்டியில் ரூ.35 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய புதிய கட்டடம், அல்லம்பட்டியில் ரூ.35 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் புதிய கட்டடம், விருதுநகரில் ரூ.45 இலட்சம் மதிப்பில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கூடுதல் கட்டடம், பந்தல்குடியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், ம.புதுப்பட்டியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மல்லியில் ரூ.20 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார மையம் புதிய கட்டடம், இடையன்குளத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார மைய கட்டடம், குன்னூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், இராஜபாளையம் பி.எஸ்.கே.மாலையாபுரத்தில் ரூ.36 இலட்சம் மதிப்பில் துணை சுகாதார மையம் புதிய கட்டடம் மற்றும் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.243 இலட்சம் மதிப்பில் சிடி ஸ்கேன் மையம் என மொத்தம் ரூ.6.44 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமப்புறங்களில், மலை கிராமங்கள் மற்றும் குக்கிரமங்களில் இருக்கும் மக்களுக்கு நாய்க்கடி, பாம்பு கடி என்றால், பெரிய நகரங்களில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளுக்கு சென்று தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களில், நாய்க்கடி, பாம்புக்கடிக்கான மருந்துகள் உள்ளன. இதயம் காப்போம் திட்டம்  மூலம் மாரடைப்பு அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு முதற்கட்ட சிகிச்சை அள்க்கும் வகையில் 14 மாத்திரைகள் கொண்ட பெட்டகத்தை அனைத்து மருத்துவமனைகளிலும் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்திட்டம் மூலம் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 9,166 நபர்களும், துணை சுகாதார நிலையத்தில் 570 நபர்களும் பயனடைந்துள்ளனர். இதுபோன்ற திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

விருதுநகர் மாவட்டத்தில், சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.3.71 கோடி மதிப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவும், அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.30 கோடி கூடுதல் கட்டடங்களும், இராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த ரூ.40 கோடி மதிப்பில் கட்டடங்களும், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.54 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடமும் கட்டும் பணிகளும்,
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாயில்பட்டியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார அலகும், இராஜபாளையம்  மாடசாமி கோவில் தெருவில் ரூ.60 இலட்சம் மதிப்பில் நகர ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடமும், ஜமீன்கொல்லன்கொண்டானில் ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார அலகும்,  நரிக்குடியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார அலகும், ம.ரெட்டியபட்டியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார அலகும், பரளச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடமும், வீரசோழன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.20 கோடி  மதிப்பில்  கூடுதல்   கட்டடமும்,   ம.புதுப்பட்டி   ஆரம்ப  சுகாதார    நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு கட்டமும், மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு கட்டமும், சாத்தூரில் ரூ.1.20 கோடி மதிப்பில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடமும்,நாலூர், பட்டம்புதூர், டி.செட்டிகுளம், தொப்பலாக்கரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, கரிசல்பட்டி, கீழகோடாங்கிபட்டி, கிருஷ்ணாபுரம், நல்லமுத்தன்பட்டி, பள்ளபட்டி, பெரியார் நகர், ஸ்டாண்டர்டு காலனி ஆகிய துணை சுகாதார நிலையங்கள் தலா ரூ.30 இலட்சம் மதிப்பிலும், எதிர்கோட்டை, கொங்கன்குளம் ஆகிய துணை சுகாதார நிலையங்கள் தலா ரூ.35 இலட்சம் மதிப்பிலும் என ஆக மொத்தம் ரூ.119.45 கோடி செலவில் 29 மருத்துவ கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு விருதுநகர் மாவட்டத்தில், ரூ.5.25 கோடி  மதிப்பில்  23 துணை சுகாதார நிலைய கட்டிடங்கள்,ரூ.4.75 கோடி மதிப்பில் 13 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டார பொது சுகாதார அலகு, மருத்துவ அலுவலர் குடியிருப்பு, செவிலியர் குடியிருப்பு, புறநோயாளிகள் பிரிவு, பிரசவ பின் கவனிப்பு வார்டு மற்றும் தாய் சேய் நலக் கட்டிடம், ரூ.6.89 கோடி மதிப்பில் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு கட்டிடம், ரூ.380.2 கோடி மதிப்பில் விருதுநகர் அரசு மருத்துவக்  கல்லூரி கட்டிடம், மருத்துவமனை கட்டிடம், தீக்காய சிகிச்சை பிரிவு படுக்கை புண்சிகிச்சை பிரிவு, தீவிர நுரையீரல் சிகிச்சை பிரிவு ஆகிய வசதிகள் தொடங்கி வைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்பு என்பது மிகப் பெரிய அளவில் உண்டாயிருக்கிறது. எனவே, பொதுமக்கள் ஒரு வளமான சமுதாயத்தை உருவாக்க, இந்த மருத்துவக் கட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News