விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (25.07.2024) ராஜபாளையம் ரமணா சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 40 பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களின் திறமைகளை பாராட்டும் விதமாகவும் நடைபெற்ற Coffee With Collector” என்ற 87-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உள்ள அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி, பொதுஅறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மாணவ, மாணவியர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 87-வது முறையாக பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது,அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்ற பல்வேறு காரணங்கள் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு இந்த காரணங்கள் ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில் (25.07.2024) மாவட்ட நிர்வாகம், ROAR மற்றும் ATREE தன்னார்வ அமைப்புகள் இணைந்து மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் இளம் பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான 4 நாட்கள் நடைபெறும் உண்டு, உறைவிட திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கலந்து கொண்டு இயற்கையையும், சுற்றுச்சுழலையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்து உரையாற்றினார்உலகம் முழுவதும் மக்கள் தொகை பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சிகள், பருவநிலை, தட்பவெப்பநிலை முரண்பாடுகள், உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இயற்கை மாசுபாடு அடைந்து சுற்றுசூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பொதுமக்களுக்கு சுற்றுசூழல் பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை வலியுறுத்தும் வகையிலும், இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அரசும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களுக்கும், அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.அதனடிப்படையில், நமது விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என அனைவருக்கும் காடு சூழல், பறவைகள் மற்றும் பூச்சியினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி சூற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்திலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாவட்ட நிர்வாகமும், ROAR மற்றும் ATREE ஆகிய தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து காடுகளைப் பற்றியும், வன உயிரினங்களை பற்றியும் அது சூழலுக்கும், மனித வாழ்வியலுக்கும் ஆற்றும் பங்குகளையும் எடுத்துரைத்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இளம் பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் புதிய திட்டம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில், தேர்ந்தெடுக்கப்பட்ட 40 ஆசிரியர்களுக்கு இயற்கை விழிப்புணர்வு, மரம் வளர்த்தல், நீர்வளம் காத்தல் சார்ந்த பயிற்சி வகுப்பு 24.07.2024 முதல் 27.07.2024 வரை நடைபெறுகிறது.இன்று சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. நெகிழி ஒழிப்பு என்பது மிக முக்கியம். அதனை சரிசெய்வதற்காக தமிழ்நாடு அரசு மீண்டும் மஞ்சப்பை இயக்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. சுற்றுசூழல் முக்கியத்துவத்தை பற்றி நம் அனைவரிடமும் தெரிய படுத்த வேண்டும். அது ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். மேலும், 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையை விட தற்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகும்.நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும், திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்தல், தினசரி பயன்பாடுகளில் இருந்து நெகிழியினை எவ்வாறு குறைப்பது உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்கள் பயிற்சி பெற்று, அது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக இது பற்றி பயிற்சி வழங்குவதன் மூலமும், சுற்றுச்சூழல் மாசுப்பாட்டினால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆண்டுக்கு சுமார் பத்தாயிரம் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து மக்கள் இயக்கமாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இப்பயிற்சியில் முதல் கட்டமாக பல்லுயிர் பரவுதல் என்ற தலைப்பிலும், இரண்டாவது கட்டமாக சூழயியல் மாற்றம் என்ற தலைப்பிலும், இறுதியாக ஐந்திணைகள் பற்றி அறிவோம் என்ற தலைப்பில் களப்பயணம் நடைபெற உள்ளது.இந்த வகுப்பில் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் இளம் பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் ஒரு இலட்சம் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பயிற்சிகள் வழங்க உள்ளனர்.இந்நிகழ்ச்சியில், ராம்கோ பொறியியல் மற்றும் இராஜூக்கள் கல்லூரி பேராசிரியர்கள், ROAR மற்றும் ATREE தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகள், இயற்கை ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (25.07.2024) மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகிற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள நம்பிக்கை மைய வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்.இவ்வாகனத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி விருப்பம் உள்ள நபர்களுக்கு எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படும். புதிய எச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டால் அவர்களையும் தொடர் கண்காணிப்பு செய்து பராமரிக்கவும் இவ்வாகனம் பயன்படும்.இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர்/ மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாடு அலுவலர் மரு.யசோதாமணி, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) மரு.பாபுஜி, காசநோய் மற்றும் குடும்ப நலதுறையின் துணை இயக்குனர்கள் மாவட்ட திட்ட மேலாளர் திரு.வேலையா, மாவட்ட மேற்பார்வையாளர் திரு.அய்யனார் உட்பட அரசு அலுவலர் மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றிய 200 மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு வீடு வழங்கிட தகுதியான நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கீழ்கண்ட நிபந்தனைகளுடன் விண்ணப்பம் சொந்த வீடு, நிலம் , காலியிடம் இருக்ககூடாது, வருட வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், விண்ணப்பித்தவர்களில் இராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்தளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இராஜபாளையம் மற்றும் பிற பகுதியை சேர்ந்தவர்கள்;, கண்டிப்பாக புது இருப்பிடத்திற்கு குடிபெயர வேண்டும். குடியிருப்பிற்கான பயனாளிகள் பங்களிப்பு தொகையாக ரூ.89,000 பணம் செலுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும், விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் கிடைக்கப்பெற கடைசி நாள்: 31.07.2024. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்-2, வருமான சான்றிதழ்) மேலும் விவரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்: 04562-252068 -யை தொடர்புக்கொண்டு பயனடையுமாறும், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (24.07.2024) தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் நடத்தப்பட்ட சமுதாய திறன் வளர்ப்பு பயிற்சியை சிறப்பாக முடித்த ராஜபாளையம், காரியாபட்டி, சிவகாசி மற்றும் வட்டாரத்தைச் சார்ந்த நான்கு நபர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S ., அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (24.07.2024) சாத்தூர் சன் இந்தியா மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 40 பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களின் திறமைகளை பாராட்டும் விதமாகவும் நடைபெற்ற ‘‘Coffee With Collector” என்ற 86-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உள்ள அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி,பொதுஅறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மாணவ, மாணவியர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 86-வது முறையாக பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடல் நிகழ்;ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது,அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்ற பல்வேறு காரணங்கள் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு இந்த காரணங்கள் ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களுடைய லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்களுக்கு பிடித்த விளையாட்டு, வீரர்கள், அவர்களுடைய பொழுதுபோக்கு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மாணவர்களும் தங்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மருத்துவம், வழக்கறிஞர், தொழிலதிபர், விளையாட்டு வீரர், இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படிப்பதற்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்தனர்.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது, இப்பொழுது உள்ள சூழ்நிலையில் உங்கள் பெற்றோர்களை காட்டிலும் உங்களுக்கு வாழ்க்கையில் படிப்பதற்கும், உங்கள் இலக்கு, ஆசை, இலட்சியத்தை அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும், அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும், உங்கள் இலட்சியத்தை அடைவதற்கு உங்களுடைய பின்புலமோ, ஏழையா, வசதி படைத்தவரா,நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பது முக்கியமில்லை, நீங்கள் எங்கு போய் சேர்கீர்கள், உங்கள் இலட்சியத்தை எவ்வாறு அடைகிறீர்கள் என்பதுதான் முக்கியம். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். எனவே, வாழ்க்கையில் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் கடினமாக உழைத்தால் வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். வாழ்க்கையில் தோல்வி என்ற ஒன்றை சந்திக்காமல் சாதித்த மனிதரே இங்கே யாரும் இருக்க முடியாது. எனவே வாழ்வில் தோல்வியோ, கஷ்டமோ வரும் போது அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.வாழ்க்கையில் தொடர்ந்து நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், இது உங்களை முழுமைபடுத்தும் என்றும், இந்த திறமைகளை கொண்டு பல நபர்களுக்கு உதவ முடியும் என்றும் கூறினார்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், (24.07.2024) அறிவியல் களப்பயணத்தில் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் பயிலும் 100 அரசுப்பள்ளி மாணவர்கள் திருநெல்வேலி மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகம் மற்றும் திருநெல்வேலி அறிவியல் மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்., மாவட்டத்தில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம், தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஸ்டெம் அறிவியல் பூங்கா, பந்தல்குடியில் உள்ள ராம்கோ சுற்றுசூழலியல், கொடைக்கானலில் சேக்ரட் ஹாட் இயற்கை அறிவியில் அருங்காட்சியகம், கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று 100 அரசுப்பள்ளி மாணவர்கள் திருநெல்வேலியில் உள்ள இஸ்ரோ உந்துவிசை வளாகம் மற்றும் திருநெல்வேலி அறிவியல் மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.அதன்படி, இந்த அறிவியல் பயணத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் காம்ப்ளக்ஸ் (ஐபிஆர்சி) என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மையமாகும்.இந்திய விண்வெளி திட்டத்திற்கான அதிநவீன உந்துவிசை தொழில்நுட்ப தயாரிப்புகளை செயல்படுத்த தேவையான வசதிகளுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.இது இஸ்ரோவின் திரவ உந்து அமைப்பு மையங்களில் உருவாக்கப்படும் உந்துவிசை அமைப்புகள் மற்றும் நிலைகளை சோதனை செய்தல், அசெம்பிள் செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருவது குறித்தும், இஸ்ரோவின் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களின் அனைத்து திரவ, கிரையோஜெனிக் மற்றும் செமிக்ரையோஜெனிக் நிலை மற்றும் இயந்திரம் தொடர்பான சோதனைகள் இங்கு மேற்கொள்ளப்படுவது குறித்தும்,திருநெல்வேலி அறிவியல் மையத்தில் அறிவியல் நிகழ்வுகள், டைனோசர் பார்க், மின்னணுவியல், இயற்பியல் பிரிவு, பல இயற்பியல் சார்ந்த நுணுக்கங்கள், பறவைகள் மற்றும் உயிரினங்கள், பல அறிவியல் சார்ந்த விசயங்கள், எலக்ட்ரானிக்ஸ் பற்றிய அறிவியல் ஜாலங்கள், மாய கண்ணாடி பகுதி, கோளரங்கம் என்ற வானியலை உங்கள் கண் முன்னே கொண்டு வருவது போன்ற அமைப்பு, சூரியன் மற்றும் பிற கோள்களை அருகில் இருந்து பார்ப்பது போன்ற அமைப்பு, திரையில் பார்க்கும் காட்சியை கண்ணுக்கு அருகில் கொண்டு வரும் முப்பரிமாண திரையரங்கம் ஆகியவற்றையும் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள், தொழில் நுட்பங்கள், பயன்கள் குறித்து அறிந்து கொண்டோம்.இந்த அறிவியல் களப்பயணம் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த பல்வேறு தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் எங்களுடைய உயர் கல்வி மற்றும் வாழ்க்கைக்கான இலக்கை நிர்ணயிப்பதற்கான ஒரு தூண்டுகோலாகவும், வழிகாட்டியாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.இந்த அறிவியல் பயணத்தை ஏற்பாடு செய்து, எங்களை அழைத்து வந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் (24.07.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவில்லிபுத்தூர் கூட்டுறவு நூற்பாலையினை பார்வையிட்டு நாற்பாலையின் இயக்கம் நிறுத்தப்பட்டது குறித்தும், தற்போது அதனுடைய நிலை குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர், மல்லி ஊராட்சி உள்;ர்பட்டி கிராமத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.53 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கு பணி ஆணை பெற்ற பயனாளியிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வீடு கட்டுவதற்கான நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, முள்ளிக்குளம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,மல்லிபுதூர் ஊராட்சியில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில், புதிய நூலகம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், இராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் சாரதா வித்யாலயா ஆரம்பப்பள்ளியில் கட்டடத்தின் தரம் மற்றும் மதிய உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) திருமதி ஜெ.உஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திருமதி சா.தேவாசீர்வாதம், வட்டாட்சியர், உதவிப்பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்; “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (24.07.2024) கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் மக்களை சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தினை நகர்ப்புற பகுதிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 11.07.2024 அன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, 12,500 கிராம ஊராட்சிகளில், 2500 முகாம்களின் மூலம் 15 அரசுத்துறைகளின் வாயிலாக 44 சேவைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த "மக்களுடன் முதல்வர்" என்ற இப்புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு முதலமைச்சர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.அனைத்து தரப்பு மக்களுக்கும் மேற்கண்ட 15 அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய பகுதிகளில் 69 முகாம்கள் நடத்தப்பட்டன.இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்” முகாம்கள் நடைபெற்று வருகிறது. தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் 11.07.2024 முதல் 14.08.2024 வரை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, 15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.“மக்களுடன் முதல்வர்” முகாம்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய துறைகளின் வழியாக வழங்கப்படும் பல்வேறு சேவைகள் திட்டங்கள் மக்கள் எளிதில் உடனடியாக பெறும் வகையில் முகாமில் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று உடனடியாக தீர்வு காணப்படும்.எனவே தங்கள் பகுதியில் நடைபெறும் குறிப்பிட்ட முகாம் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் அனைவரும் “மக்களுடன் முதல்வர்” முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.மேலும், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் திருச்சுழி, விருதுநகர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர் ஆகிய வட்டாரங்களில் நாளை (25.07.2024) நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்தார்.இந்த முகாமில், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்., I A S., சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் திரு.விவேகன்ராஜ், வட்டாட்சியர் திரு.வடிவேல், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலை மற்றும் பாலங்களில் நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளை உதவி செயற் பொறியாளர் திரு.செபஸ்டின் பிரிட்டோ ராஜ் (சிறப்பு திட்ட செயலாக்கத்துறையினால் நியமனம் செய்யப்பட்ட அதிகாரி) நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி சாத்தூர், விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் ஆகிய உட்கோட்டங்களில் பாதிப்புக்குள்ளான அண்ணாநகர் - அரிஜன் காலனி - கரிசல்பட்டி சாலை, கன்னிசேரி - மத்தியசேனை சாலை, சங்கரலிங்கபுரம் - ஒண்டிப்புலி சாலை, கொங்கன்குளம் - திருவேங்கிடபுரம் சாலை, சமுசிகாபுரம் - வடகரை சாலை, இராஜபாளையம் - அய்யனார்கோவில் - மருங்காவூர் சாலை, கொத்தன்குளம் - சத்திரப்பட்டி சாலை, லட்சுமியாபுரம் ஒன்றிய எல்கை சாலை, கரிசல்பட்டி - தும்மையாபுரம் சாலை, சுந்தரபாண்டியம் - கோட்டையூர் ஆகிய சாலைகளில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் தடுப்புச்சுவர் பணிகள் மற்றும் பாலப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அதிகாரி/ உதவி செயற் பொறியாளர் திரு.செபஸ்டின் பிரிட்டோ ராஜ்; அவர்கள் நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது விருதுநகர் மாவட்டத்தில் 7 உட்கோட்டங்களில் ரூ.54.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நிரந்திர மற்றும் தற்காலிக வெள்ள பாதிப்பு மறுசீரமைப்பு பணிகளை திட்டமிட்டவாறு விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுத்தினார்.இந்த நெடுஞ்சாலைத்துறை ஆய்வின் போது, கோட்டப் பொறியாளர் திருமதி பாக்கியலட்சுமி மற்றும் அனைத்து உதவிக் கோட்டப் பொறியாளார்கள், உதவிப் பொறியாளர்கள் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.மேற்கண்ட ஆய்வில் சிறப்பு செயலாக்கத்துறையினால் நியமிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட அறிவுரைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.