25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jan 09, 2026

கதர் மற்றும் கிராமப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (08.01.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு கிராம தொழில் வாரியம் தலைமைச் செயல் அலுவலர் திரு.வ.சம்பத்,I A S., அவர்கள்  தலைமையில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராம பொருள்கள் விற்பனையை மேம்படுத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கதர் வாரியத்தில் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் மற்றும் பனை சார்ந்த பொருட்கள் விற்பனையை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்குவது குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.மேலும் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்குவது தொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் உள்ளிட்ட அலுவலருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.முன்னதாக திருவில்லிபுத்தூர் மாரியம்மன் எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், எழுது பொருள் மற்றும் அச்சு தொழிற் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை தமிழ்நாடு கிராம தொழில் வாரியம் தலைமைச் செயல் அலுவலர்  அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, மண்டல துணை இயக்குநர்(கதர் கிராமத் தொழில்கள்) திருமதி சே.பாரதி, உதவி இயக்குநர்(மதுரை, கதர் கிராம தொழில்கள்) திரு.எபனேசர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Jan 09, 2026

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக, 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள், விருதுநகர், தேசப்பந்து திடலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது .

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், சென்னையில் சங்கமம், நம்ம ஊரு திருவிழா 14.01.2026 அன்று தொடங்கி வைக்கப்பட்டு சென்னையில் மக்கள் கூடும் 20 இடங்களில் 15.01.2026 முதல் 18.01.2026 வரை பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.அதனைத் தொடர்ந்து பொங்கல் விழாவினை கலை பண்பாட்டுத் துறை, திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக, 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள், விருதுநகர், தேசப்பந்து திடலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.இவ்விழாவில் மக்கள் விரும்பும்  வகையில் பாரம்பரியமிக்க கிராமியக் கலை நிகழ்ச்சிகள் சுமார் 100 கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. பொங்கல் விடுமுறை நாட்களில் நடைபெறும் இவ்விழாவினை பொதுமக்கள் கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jan 09, 2026

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – “இது நம்ம ஆட்டம்-2026”

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளையதலை முறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்-மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் 22.1.2026  முதல்  8.2.2026 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் “முதலமைச்சர்  இளைஞர் விளையாட்டு  திருவிழா – ‘இது  நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தினைச் சார்ந்த அனைத்து (11தொகுதிகள்) ஊராட்சி ஒன்றிய அளவில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.3,000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம்பெறுபவருக்கு தலா ரூ.2,000/- மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலாரூ.1,000/- பரிசுத்தொகையும், மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.6,000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.4,000/- மற்றும் மூன்றாம் இடம்பெறுபவருக்கு தலா ரூ.2,000/- பரிசுத் தொகையும், மாநில அளவில், அணிபிரிவில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.75,000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.50,000/- மற்றும் மூன்றாம் இடம்பெறுபவர்களுக்கு தலா ரூ.25,000/- பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து (11) ஊராட்சி ஒன்றியங்களிலும் 16 வயது முதல் 35 வயது வரையிலான தகுதியுடைய அனைத்து இளைஞர்களும் பங்கேற்கும் வகையில் ஒன்றிய அளவிலான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் முதல் இடம் பெறும் வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவர். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் முதல் இடம் பெறும்வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில்  கலந்து கொள்ள  தகுதி பெறுவர்.ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் தடகளம் - 100 மீட்டர் மற்றும் குண்டு எறிதல், கபாடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல் போட்டி, ஸ்ட்ரீட் கிரிக்கெட் மற்றும் எறிபந்து ஆகியபோட்டிகள் நடத்தப்படவுள்ளது. மேலும் மாவட்ட அளவில் ஓவியம், கோலப்போட்டிகள் மற்றும் உடல்சார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும், பார்வைசார் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டியும், அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும் அதே போன்று செவிசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும் என மாற்றுத்திறனாளிகளுக்கு 4 பிரிவுகளாகவும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மாவட்ட அளவில் முதலிடத்தினை பெறும் பெண்களுக்கான கபாடி அணி மற்றும் ஆண்களுக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட் அணியினர்களுக்கு மட்டும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – “இது நம்ம ஆட்டம்-2026” போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் 16 வயது முதல் 35 வயதுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான http://cmyouthfestival.sdat.in மற்றும் http://sdat.tn.gov.in வாயிலாக 06.01.2026 முதல் முன்பதிவு செய்து தனி நபர்  மற்றும் குழுப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். முன்பதிவு செய்திட கடைசி நாள். 21.01.2026 ஆகும். மேலும், விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை 04562-225947 என்ற அலைபேசி எண்ணிலோ அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிட தங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தகுந்த விளையாட்டு சீருடை அணிந்து வர வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Jan 08, 2026

சாலைப்பாதுகாப்பு மாதம் -2026 முன்னிட்டு,இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் போக்குவரத்துத்துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதம் -2026 (01.01.2026 முதல் 31.01.2026 வரை) முன்னிட்டு, இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், எடுத்துரைக்கும் விதமாக நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (07.01.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மேலும், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைக்கவசம் வழங்கி, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், தேசிய சாலை பாதுகாப்பு மாதம் -2026 முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இப்பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் காவலர்கள், போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணி மூலம் தலைக்கவசம் அணிவதன் பயன்கள், வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசக்கூடாது, அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனங்களில் பயணிக்க கூடாது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது, இரண்டு பேரை தவிர அதிகமான நபர்களை இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லக்கூடாது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் தொடங்கி,  முக்கிய சாலைகள், வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி விருதுநகர்புதியபேருந்துநிலையம்வரைசென்றுநிறைவடைந்தது.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உட்பட மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Jan 08, 2026

சட்டமன்றத் தேர்தல்-2026-னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு(Mock Poll) பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வைப்பு அறையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026-னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு(Mock Poll) பணிகளை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  (07.01.2026)  தொடங்கி வைத்தார்.எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது பயன்படுத்துவதற்காக வாக்குப் பதிவு இயந்திரங்களை முதற்கட்டமாக சரிபார்க்கும் பணியானது விருதுநகர் மாவட்டத்தில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்களால் கடந்த 11.12.2025 முதல் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது.இந்த சரிபார்க்கும் பணியானது நேற்றுடன்(06.01.2026) முடிவடைந்தது. இதனையடுத்து, சரிபார்க்கப்பட்ட இயந்திரங்களில் 1 சதவீத இயந்திரங்களில் தலா 1200 வாக்குகளும், 2 சதவீத இயந்திரங்களில் தலா 1000 வாக்குகளும், 2 சதவீத இயந்திரங்களில் தலா 500 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டு கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் விவிபேட் இயந்திரத்தில் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுக்களின் எண்ணிக்கை ஒப்பிட்டு சரிபார்க்கப்படும்.எந்தெந்த இயந்திரங்களில் இந்த மாதிரி வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளே இயந்திரங்களைத் தேர்வு செய்தனர். இந்த மாதிரி வாக்குப்பதிவு இன்று(07.01.2025) காலை 9.30 மணிக்குத் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இது நாளை(08.01.2026) வரை நடைபெறும்.மாதிரி வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் எதிர்வரும் தேர்தலில் பயன்படுத்துவதற்கென பாதுகாப்பறையில் வைத்து சீலிடப்படும். இவ்வாறு சரிபார்த்து பாதுகாப்பில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படும். சரிபார்க்கும் பணியின் போது பழுதடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் பெங்க;ருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.சட்டமன்றத் தேர்தல்-2026-னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு(Mock Poll) பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தொடங்கி வைத்தார்.

Jan 08, 2026

பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு  முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பொங்கல் பரிசுத்தொகுப்பு 08.01.2026 முதல்  வழங்கப்படவுள்ளது.

தமிழர் திருநாளாம்  பொங்கல் திருநாளைத் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில்   பொங்கல்-2026-க்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு  முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் ஆகியோருக்கு, தலா 1கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு, ரூ.3000/- ரொக்கப்பரிசு மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியன அடங்கிய பரிசுத்தொகுப்பு நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் பரிசுத்தொகுப்பு 08.01.2026 முதல்  வழங்கப்படவுள்ளது.            முதல் நாள் முற்பகல்  100 குடும்ப அட்டைதாரர்களுக்கும்  பிற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும்,  இரண்டாம் நாள் முதல் தினந்தோறும்  முற்பகல் 150 முதல் 200 பேர் வரை மற்றும்  பிற்பகல்  150 முதல் 200 பேர் வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு  விநியோகம்   செய்வதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.   மேற்படி டோக்கன்களில் குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல்  பரிசுத்தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசுப்பொருட்கள் பெறுவதில் புகார்கள்/குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறையின் 04562-252397 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.        அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் அனைவருக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளதால், குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் நியாய விலைக்கடைக்குச் சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.  

Jan 07, 2026

திருவில்லிபுத்தூர் வட்டாரப்பகுதிகளில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.

 விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டாரப்பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (06.01.2026) நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, திருவில்லிபுத்தூர் வட்டம், மல்லி ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பில், ரூ.3 இலட்சம் மானியம் மற்றும் வங்கிக்கடன் நிதியுதவியாக ரூ.10 இலட்சத்தில் அமைக்கப்பட்ட முதலமைச்சரின் உழவர் நல சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, உழவர் நல சேவை மைய செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.          பின்னர் மல்லி கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில், 2025-26ஆம் ஆண்டு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் மானியத்தில் அமைக்கப்பட்ட மக்காச்சோள சிறப்பு தொகுப்பு செயல் விளக்கத்திடலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, விவசாயிடம் மகசூல் குறித்து கேட்டறிந்தார்.அதனைத்தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் வட்டம், முத்துவெங்கட்ராயபுரம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில், வேளாண் இயந்திரமாக்குதல் – துணை இயக்கத்திட்டத்தில் ரூ.46 ஆயிரம் மானியத்தில் விவசாயிக்கு சுழல் கலப்பையினையும், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தில் ரூ.1,360/- மானியத்தில் விவசாயிக்கு தார்பாலினையும், மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.          தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் வட்டம், மல்லி ஊராட்சி மற்றும் முத்துவெங்கட்ராயபுரம் ஊராட்சிகளில் எண்மய பயிர் கணக்கெடுப்பு பணிகள் (Digital Crop Survery) நில உடைமை பதிவுகள் (Farmers Registery) மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், திருவில்லிபுத்தூர் வட்டம், விழுப்பனூர் ஊராட்சியில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், தென்னை பரப்பு விரிவாக்கம் இனத்தில் ஒரு ஹெக்டர் பரப்பளவிற்கு குட்டை/நெட்டை தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு நடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், இத்திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் ரூ.12,000/-மதிப்புள்ள தென்னங்கன்றுகள் மற்றும் இடுபொருட்களை விவசாயிக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில் வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், வேளாண்மை துணை இயக்குநர் / மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வி) திருமதி அம்சவேணி, வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) திருமதி முத்துலெட்சுமி, தோட்டக்கலைத் துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, வட்டார உதவி இயக்குநர்கள் திருமதி தனலெட்சுமி, திருமதி திலகவதி, வேளாண் உதவி இயக்குநர் திரு.சக்தி கணேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர். 

Jan 07, 2026

குறள் வார விழாவினை முன்னிட்டு, திருப்பூரில் நடைபெறவுள்ள குறள் வினாடி – வினா போட்டி.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற ஐய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோராண்டும் குறள்வாரம் கொண்டாடப்பெறும் என அறிவிக்கப்பெற்றது.  அவ்வறிவிப்பினை செயற்படுத்திடும்வகையில் குறளாசிரியர் மாநாடு, திருக்குறள் நாட்டிய நாடகம், திருக்குறள் இசைநிகழ்ச்சி, திருக்குறள் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்திடுமாறு அரசாணை வெளியிடப்பெற்றுள்ளது. திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் குறள் வார விழாவின் ஒருநிகழ்வாக 21.01.2026 அன்று திருப்பூர், அரசு மருத்துவக் கல்லூரியில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்கும் திருக்குறள் மாநாடு மற்றும் குறள் வினாடி – வினா போட்டி நடைபெறவுள்ளன.  குறள்    வாரவிழாவின்      ஒருநிகழ்வாக    குறள் வினாடி – வினாப் போட்டியில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் / பணியாளர்கள், அரசு அலுவகத்தில் பணியாற்றும் தொகுப்பூதியப் பணியார்களுக்கு மாவட்ட அளவில் முதல்நிலை எழுத்துத்தேர்வு (கொள்குறிவகை) 09.01.2026அன்று   பி.ப.2.00 மணிக்கு விருதுநகர்     மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான்காம் தளத்திலுள்ள கூட்ட அரங்கில்   நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள்   தேர்வு தொடங்கும் ஒரு மணி நேரத்திற்கு   முன்னதாகவே வருகை புரிய வேண்டும். இத்தேர்வில் அதிக   மதிப்பெண்பெறும் 30 பேர்களில் முதல் 9 பேர்கள் 3 பேர் கொண்ட   3 குழுக்களாக குறள் வினாடி-வினாப் போட்டியிலும் ஏனைய 21 பேர் குறள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அனுமதிக்கப்பெறுவார்கள். அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் போட்டிகளுக்கான நெறிமுறைகள் சுற்றறிக்கையாக அனுப்பப்பெற்றுள்ளன. மேலும் கூடுதல் விவரங்களை அறிந்துகொள்வதற்கு உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர்   என்ற முகவரியிலும் 04562-225596 என்ற அலைப்பேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறள்வினாடி வினாப் போட்டியில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.                                                                                                                     

Jan 07, 2026

தலைமுடி உதிர்வதைத் தடுக்க .....

செம்பருத்திப்பூ10, நெல்லிக்காய் ஒண்ணு. வேப்ப இலை சிறிதளவு சோற்றுக்கற்றாழை ஜெல் சுத்தம் செய்து, இவற்றை நன்றாக அரைத்து புளித்த தயிரில் அல்லது எலுமிச்சை சாறுடன் கலந்து தலைக்குக் குளித்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.கரிசலாங்கண்ணித் தைலம் தலைக்கு உபயோகித்தால் தலை முடி உதிராது. கருவேப்பிலை, நெல்லிக்காய் இரண்டையும் அரைத்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ,தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

Jan 06, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 29.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்டத் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I  A S., அவர்கள் தலைமையில்  (05.01.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்அறிவுறுத்தினார்கள்.இக்கூட்டத்தில், குடும்பஅட்டைவேண்டிவிண்ணப்பித்த4பயனாளிகளுக்குமின்னணுகுடும்பஅட்டைகளையும்,பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு விபத்துகளில் தாய் தந்தையரை இழந்த 11 மாணவர்களுக்கு தலா ரூ.75,000/- வீதம் மொத்தம் ரூ.8.25  இலட்சம் மதிப்பிலான விபத்து காப்பீட்டு பத்திரங்களையும்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் புதிரை வண்ணார் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 42 உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.6.28 இலட்சம் மதிப்பீட்டில், இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும்,தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில், சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் (CM-ARAISE)  கீழ் 7 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.15.14 இலட்சம் மானியத் தொகையில் ஆட்டோ, கார், டிராக்டர் வாகனங்களையும்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2 நபர்களுக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பில் மூன்று சக்கர மிதிவண்டி  மற்றும் சக்கர நாற்காலிகளையும் என ஆக மொத்தம் 66 பயனாளிகளுக்கு  ரூ.29.92 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 40 41 42 43 44 45 46 ... 138 139

AD's



More News