விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கன்னிச்சேரி புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துணை சுகாதார நிலைய புதிய மையங்கள், வட்டார சுகாதார அலகு, அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம் என மொத்தம் ரூ.5.95 கோடி மதிப்பிலான 14 புதிய மருத்துவ கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் (17.07.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி) முதுகலைத் தமிழ்த்துறை மற்றும் தமிழாய்வு மையம், இணைந்து நடத்தும் கரிசல் நிலம் சார்ந்த இரண்டு நாட்கள் நடைபெறும் நாடகப் பயிலரங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா ,I A S ,அவர்கள் (17.07.2025) துவக்கி வைத்து உரையாற்றினார்.
ஏழாவது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2-வது நீர்நிலைக் கணக்கெடுப்பு மத்திய அரசின் 100 சதவீத நிதி உதவியுடன் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் மத்திய அரசின் ஆளுமைக்குட்டபட்ட கூட்டாட்சி பிரதேசங்களிலும் (All States and UTs) ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இக்கணக்கெடுப்பு தற்போது கிராம அளவில் கிராம நிர்வாக அலுவலர்களாலும் நகர்ப்புறங்களில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் களப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தின் சீரிய நோக்கம் சிறுபாசனப்பிரிவு சார்ந்த தெளிவான நம்பகத்தன்மையுடைய புள்ளி விவரத் தொகுப்பு உருவாக்கப்பட்டு, அவை நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த அடித்தளமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே ஆகும். இத்திட்டத்தின் முக்கிய செயல்பாடானது அனைத்து நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர்த் திட்டங்களை உள்ளடக்கிய (பெரும்பாலும் 2000 ஹெக்டேர் வரை -தனியார் உட்பட) சிறுபாசனத் திட்டங்களின் கணக்கெடுப்பு ஆகும்.முதல் சிறுபாசனக் கணக்கெடுப்பு 1986-87ஆம் ஆண்டை மேற்கோளாகக் கொண்டு அகில இந்திய அளவில் நடத்தப்பட்டு அதன் தகவல் தொகுப்பு 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதுவரை ஆறு சிறுபாசனக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆறாவது சிறுபாசனக் கணக்கெடுப்பு 2017-18ஆம் ஆண்டை மேற்கோளாகக் கொண்டு நடத்தப்பட்டு, சிறுபாசனக் கணக்கெடுப்பு நோக்கம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, நீர்நிலைக் கணக்கெடுப்பு சேர்த்து நடத்தப்பட்டு மே - 2023 ஆம் ஆண்டு தகவல் தொகுத்து வெளியிடப்பட்டது. தற்போது 2023-24 ஆம் ஆண்டை மேற்கோளாகக் கொண்டு 7-வது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2-வது நீர்நிலை கணக்கெடுப்பு, முதல் பெரிய மற்றும் நடுத்தர நீர்பாசனத் திட்டங்கள் கணக்கெடுப்பு மற்றும் முதல் நீருற்று கணக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.மேலும் இவ்விவரங்கள் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் நிலத்தடி நீர் வளங்களை மதிப்பிட பயன்படுத்தப்படுவதுடன் நீர்வள அமைச்சகத்தில் உள்ள பலபிரிவுகளில் இக்கணக்கெடுப்பு விவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.தமிழ்நாடு மாநிலம் முழுவதும், விருதுநகர் மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களால் இப்பணி காகிதங்களை பயன்படுத்தாமல் கைப்பேசி மூலமாக தேசிய தகவல் மையம் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், பெத்துரெட்டியாபட்டி கிராமத்தில் வசிக்கும் திருமதி முனீஸ்வரி என்பவர் வீடு கட்டுவதற்காக மனு அளித்ததன் பேரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடுகட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் (16.07.2025) பயனாளியின் வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார்.கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது மக்களுக்கு சொந்த வீடற்ற நிலை எனும் சூழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.தமிழ்நாடு அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030-க்குள் 8 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு திட்டங்களை வகுத்து வருகிறது.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024 - 2025 -ஆம் ஆண்டில் 11 வட்டாரங்களில், 1011 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 910 வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலும், 2025-2026 - ஆம் ஆண்டில் 2237 வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2025-26 ஆம் ஆண்டில் இது வரை மொத்தம் 189 பயனாளிகளுக்கு வீடுகட்டுதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3.50 இலட்சம் மானியத்தில் கட்டப்பட்டுவரும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியை சேர்ந்த, திருமதி முனீஸ்வரி க/பெ. விநாயகராஜ் என்பவர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வீடு கட்டுவதற்காக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்ததன் பேரில், அதனை பரிசீலனை செய்து அந்த பயனாளிக்கு இல்லம் தேடி சென்று கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பயன்பெற்ற திருமதி முனீஸ்வரி என்ற பயனாளி, கூலி வேலை செய்து வரும் நாங்கள், சொந்த வீடு கட்டுவற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில், தனது சிரமத்தை அறிந்து சரியான நேரத்தில், என் குடும்பத்திற்கு வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கியமைக்காகவும், வீடு கட்டுவதற்கான எங்கள் கனவை நனவாக்கிய முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் தனது உணர்ச்சி பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், இ.குமாரலிங்கபுரம் ஊராட்சியில் (16.07.2025) மாவட்டத்தில் வெவ்வேறு வெடி விபத்துக்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கும், நீரில் மூழ்கி மரணமடைந்தவருக்கும் என மொத்தம் 18 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.48.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, , அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் மற்றும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கும் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, விருதுநகர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமம், மெ/ஸ்.பொம்மி பயர் ஒர்க்ஸ் பேக்டரி என்ற பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 29.01.2022 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த திரு.ஆறுமுகம் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி நீதிமொழி என்பவருக்கும், நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த திரு.குபேரன் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி சசிதேவி மற்றும் (தாயார்) திருமதி சரஸ்வதி என்பவருக்கும், விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்த திரு.தேவேந்திரன் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி சர்மிளாதேவி என்பவருக்கும் என உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.9 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும், வெடிவிபத்தில் காயமடைந்த நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த திரு.கணேஷ்பாண்டி என்பவருக்கு ரூ.1,00,000/-த்திற்கான காசோலையினையும்,விருதுநகர் வட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் இயங்கி வந்த மெ/ஸ்.சுப்ரீம் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 07.06.2025 அன்று வெடிவிபத்தில் உயிரிழந்த அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தையை சேர்ந்த திரு.சங்கிலி என்பவரின் (மனைவி) திருமதி முத்து என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4,00,000-த்திற்கான நிவாரணத்தொகைக்கான காசோலையினையும்,சாத்தூர் வட்டம், சின்னகாமன்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த மெ/ஸ்.கோகுலேஸ் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் 01.07.2025 அன்று வெடி விபத்தில் உயிரிழந்த சிவகாசி வட்டம் மீனம்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு.மகாலிங்கம் என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி மகாலெட்சுமி என்பவருக்கும், அருப்புக்கோட்டை வட்டம், சூலக்கரையை சேர்ந்த திரு.வைரமணி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) முனிஸ்வரி என்பவருக்கும், சிவகாசி வட்டம், மத்தியசேனை கிராமத்தை சேர்ந்த திருமதி லட்சுமி என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.கருப்பசாமி என்பவருக்கும், சிவகாசி வட்டம், அனுப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த திரு.செல்லப்பாண்டி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி வேல்மணி என்பவருக்கும், ஓ.கோவில்பட்டியை சேர்ந்த திரு.ராமமூர்த்தி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி கலா என்பவருக்கும், சிவகாசி வட்டம், சேர்வைகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு.ராமஜெயம் என்பவரின் வாரிசுதாரரான (தாயார்) திருமதி மகாலட்சுமி என்;பவருக்கும், சேர்வைகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்த திரு.நாகபாண்டி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி அழகு சித்ரா என்பவருக்கும், விருதுநகர் வட்டத்தை சேர்ந்த திரு.புண்ணியமூர்;த்தி என்பவரின் வாரிசுதாரரான (மனைவி) திருமதி காளீஸ்வரி என்பவருக்கும் என 8 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.32 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும்,வெடி விபத்தில் காயமடைந்த சிவகாசி வட்டம், மத்திய சேனை கிராமத்தை சேர்ந்த திரு.கருப்பசாமி என்பவருக்கும், விருதுநகர் வட்டம், கன்னிசேரி கிராமத்தை சேர்ந்த திரு.மணிகண்டன் என்பவருக்கும், சூலக்கரை கிராமத்தை சேர்ந்த திருமதி முருகலட்சுமி என்பவருக்கும் என 3 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50,000 /-வீதம் மொத்தம் ரூ.1.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும் என மூன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.47.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.மேலும், திருவில்லிபுத்தூர் வட்டம், அச்சம்தவிழ்ந்தான் கிராமத்தில் வசிக்கும் திரு.சிவஞானபாண்டியன் என்பவரின் மகன் செல்வன்.விஜயகுமார் (வயது -15) என்பவர் கடந்த 31.03.2024 அன்று நீரில் மூழ்கி இறந்ததற்கு அவரின் வாரிசுதாரரான தந்தைக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1,00,000/-த்திற்கான காசோலையினையும்,என ஆக மொத்தம் 18 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.48.50 இலட்சத்திற்கான நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (16.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில் அருங்காட்சியகங்கள் துறை சார்பில், புதிய அருங்காட்சியகம் ரூ.6.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவியல் பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ரூ.46.63 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகளின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியில், கனிமவள நிதியின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தினையும்,பின்னர், பெத்துரெட்டியாபட்டி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.75 இலட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை புதிதாக கட்டப்பட்டு வருதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.அதனை தொடர்ந்து, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், ஊராட்சி அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (15.07.2025) உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், ஆலடிப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.நவாஸ்கனி அவர்கள் முன்னிலையில்நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்கக்கூடியவர்கள், மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கக்கூடியவர்கள், முதலில் நீங்கள் மக்களிடத்தில் செல்லுங்கள். மக்களிடத்தில் இருந்து துவங்குங்கள். மக்கள் என்ன வைத்திருக்கிறார்களோ அவர்களிடத்தில் இருந்து உங்கள் திட்டங்களை தீட்டுங்கள். அவர்களோடு இணைந்து பயணம் செய்யுங்கள்.அவர்களுடைய குறைகளை கேளுங்கள் என்று கூறினார்கள்.அந்த வழியில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மக்களுடைய பிரச்சினைகளை ஒவ்வொரு ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் இருக்கக்கூடிய கிராமங்களில் உங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை நேரடியாக அரசினுடைய அத்தனை துறைகளும் ஒரே இடத்திற்கு வந்து உங்கள் குறைகளை கேட்டு அவற்றை தீர்க்கக்கூடிய முகம்களை தமிழ்நாடு முழுவதும் இன்று நடத்திக் கொண்டிருக்கிறது.தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெற உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மக்களின் கருத்துக்களை எல்லாம் உள்வாங்கி கொண்டு, அவர்களின் குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து, தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ ஒரு லட்சம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் முகாம் நடைபெறும் பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் துண்டுப்பிரசுரம் (Pயஅphடநவள) மற்றும் விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான மற்றும் தேவைப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து முகாமில் கலந்து கொண்டு பயனடைய உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.ஆலடிப்பட்டியை சுற்றியுள்ள ஊர்கள் அனைத்தும் சேர்ந்து சுமார் ஏறத்தாழ 1500 குடும்பங்கள் இருக்கின்றன. இந்த குடும்பங்கள் எல்லாம் அவர்களுடைய கோரிக்கையை ஒரே இடத்தில் தருவதற்காக தான் இந்த முகாம் நடைபெறுகிறது.மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இம்முகாமிற்கு சென்று விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். மேலும், மக்கள் அனைவரும் தங்களுடைய குறைகளை இந்த முகாமில் தெரிவித்து பயன்பெறலாம். இந்த முகாமில் நீங்கள் நன்றாக உபயோகப்படுத்தும்படி நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமானது இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நகராட்சியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த மகத்தான திட்டத்தின் முன்னாடியாக மக்களுடன் முதல்வர் முகாம் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, மக்கள் இருக்கும் இடத்திற்கு சென்று குறைகளை கேட்டறிந்து அதனை சரிசெய்யும் அளவிற்கான சிறப்பான திட்டமாக உள்ளது.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாம்கள் ஜீலை 15 ஆம் தேதி முதல் துவங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை 349 முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் வரும் விண்ணப்பங்களை சரியான முறையில் விசாரணை செய்து தீர்வுகாண உள்ளனர். இதில் முக்கிய சிறப்பு என்னவென்றால் தன்னார்வலர்கள் இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் பற்றிய கருத்துக்களையும், முகாமில் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை முகாம் நடைபெறுவருதற்கு முன்பாகவே வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து விண்ணப்பங்களை கொடுத்துள்ளார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெண்கள் விண்ணப்பங்களை அளித்து பயன்பெற வேண்டும் எனவும்,இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (15.07.2025) உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆமணக்குநத்தம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களைத் தேடி அரசு அதிகாரிகள் சென்று அவர்களுடைய குறைகளை கேட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் மக்களுக்கு உரிய தீர்வை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.அதனடிப்படையில், இன்று தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெற உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இம்முகாமிற்கு சென்று விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இம்முகாம்களில் வழங்கப்படும் மனுக்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். பின்னர், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும்.எனவே, இம்முகாமினை அனைத்து பொதுமக்களும் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமானது இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நகராட்சியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த மகத்தான திட்டத்தின் முன்னாடியாக மக்களுடன் முதல்வர் முகாம் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, மக்கள் இருக்கும் இடத்திற்கு சென்று குறைகளை கேட்டறிந்து அதனை சரிசெய்யும் அளவிற்கான சிறப்பான திட்டமாக உள்ளது.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாம்கள் ஜீலை 15 ஆம் தேதி முதல் துவங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை 349 முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் வரும் விண்ணப்பங்களை சரியான முறையில் விசாரணை செய்து தீர்வுகாண உள்ளனர். இதில் முக்கிய சிறப்பு என்னவென்றால் தன்னார்வலர்கள் இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் பற்றிய கருத்துக்களையும், முகாமில் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை முகாம் நடைபெறுவருதற்கு முன்பாகவே வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து விண்ணப்பங்களை கொடுத்துள்ளார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெண்கள் விண்ணப்பங்களை அளித்து பயன்பெற வேண்டும் எனவும்,இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, இம்முகாமில் பட்டா வேண்டி விண்ணப்பித்தவருக்கு உடனடியாக மனுவை பரிசீலனை செய்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், நத்தம் பட்டா மாறுதல் உத்தரவினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.மேலும், புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில், விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரம் மற்றும் உயிர் உரங்களையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (14.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப்பணிகள், சேவைகள், நலத்திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு, அப்பணிகள் முறையாகவும், அரசு விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து வருகின்றனர்.அதன்படி, விருதுநகர் அ.ச.ப.சி.சி. நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர், விருதுநகர் அகமது நகரில் அமைந்துள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் தயாரிக்கும் உணவுக்கூடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு உணவுப்பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள், சுற்றுப்புறம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் நகராட்சி அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்டுள்ள மனுக்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.பின்னர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினை சுற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, வளாகத்தை சுற்றி திடக்கழிவு மேலாண்மையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, நகராட்சி அலுவலர்கள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (14.07.2025) “உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,I A S., அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் உரையாடினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, தீர்வு காணும் வகையில் அனைத்து கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்புத் திட்டத்தை 15.07.2025 அன்று தொடங்கி வைக்க உள்ளார்கள்.தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டமானது நாளை 15-ம் தேதி கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.அதனைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர் பெருமக்கள் அவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் துவக்கி வைக்கப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில், இம்முகாம்கள் 15.07.2025 முதல் 07.11.2025 வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளான 15.07.2025 அன்று ஊரகப்பகுதிகளில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆமணக்கு நத்தம், திருச்சூழி ஊராட்சி ஒன்றியம் ஆலடிப்பட்டி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் கீழ கெப்பு லிங்கம்பட்டி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் மறையூர் ஆகிய 4 இடங்களிலும்,நகரப்பகுதிகளான சிவகாசி மாநகராட்சி வார்டு 1 விஜய சுந்தர மஹால், திருவில்லிபுத்தூர் நகராட்சி வார்டு 1 பெருமாள்பட்டி நாடார் திருமண மண்டபம் ஆகிய 2 இடங்களிலும் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் துவங்கி வைக்கப்பட்டு தொடர்ந்து முகாம்கள் நடைபெறவுள்ளது.உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.இம்முகாமிற்கு முன்னோடியாக முகாம் நடைபெறும் பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் துண்டுப்பிரசுரம் (Pamphlets)மற்றும் விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான மற்றும் தேவைப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து முகாமில் கலந்து கொண்டு பயனடைய உரிய விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.இதுவரையில் 36,663 துண்டுப்பிரசுரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும், இம்முகாம்களின் சிறப்பு நிகழ்வாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இம்முகாமிற்கு சென்று விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட பலர் இருந்தனர்.