முருகனின் அறுபடை வீடு
முதல் படை வீடு
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், முருகன் தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.இங்கு மலைவடிவில் சிவபெருமான்அருள் புரிகிறார். அமர்ந்த கோலத்தில் முருகன் காட்சியளிப்பது சிறப்பாகும்.
இரண்டாம் படை வீடு
முருகனின் இரண்டாம் படைவீடானதிருச்செந்தூர் கடலோரத்தில் அமைந்துள்ளதால்திருச்சீரலைவாய் என்றும், ஜயந்திபுரம் என்றும் பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது.
மூன்றாம் படை வீடு
முருகனின் மூன்றாம் படை வீடான பழநி, சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். பழநி முருகர் சிலைபோகர் சித்தரால்
நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.இங்கு, அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும்
நான்காவது வீடு
தன்னைவிட தன் பிள்ளைகள்அறிவுடையவர்களாக இருப்பது தந்தைக்கு மகிழ்ச்சியை தரும். அதையொட்டி, தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்டு பிள்ளை குருவாக இருக்க,' தானே சீடனைப்போல் அமர்ந்து கேட்டார்.
அதனால் சிவகுருநாதன் என்ற பெயரை முருகப்பெருமான் பெற் றார்.
ஐந்தாவது வீடு
திருச்செந்தூரில் , சூரனை வதம் செய்த முருகன் திருத்தணிக்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்ததால் தணிகை என இவ்வூர் பெயர் பெற்றது.வேடர்குலத்தில் பிறந்த வள்ளியை, முருகன் காதல் திருமணம் புரிந்து கொண்ட இடமே திருத்தணியாகும்.
ஆறாவது வீடு
அறுபடை வீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை. ஒளவை பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கே ட்ட முருகன், உலக வாழ்க்கைக்கு கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த திருவிளையாடல் புரிந்த இடம்.
0
Leave a Reply