பங்குனி உத்திரம்
பங்குனி மாதத்தில் வரும் முக்கியம் விசேஷ நாட்களில்பங்குனி உத்திரம் மிகவும் முக்கியமானது. இறை வழிபாடுகள் செய்வதற்கு உரிய மாதமாக பங்குனி மாதமும் திகழ்கின்றது.தமிழ் மாதங்களில் 12ஆவது மாதம் பங்குனி, 27 நட்சத்திரங்களில் 12ஆவது உத்திரம் நட்சத்திரம் இந்த 12, என்ற எண் முருகனுடைய திருக்கரங்களின் எண்ணிக்கையை குறிக்கும். எனவேதான் பன்னிரு கை வேலவனுக்கு உகந்த நாளாக பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவ ஆலயங்களிலும் முருகப்பெருமான் ஆலயங்களிலும் பங்குனி உத்திர திருவிழா 12 நாட்கள் பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படுகிறது.
மீனாட்சி-சொக்கநாதர் , ராமர் -சீதைக்கும் பங்குனி உத்திர நாளன்று தான் திருமணம் நடைபெற்றது. தெய்வீக திருமணங்கள் நிகழ்ந்த நாள் பங்குனி உத்திர நன்னாள்.இதனை கல்யாண விரதம் எனவும் சொல்வார்கள். இந்த நன்னாளில் திருமணத்தடை இருப்பவர்கள் விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்தால் திருமணம் கைகூடும்.கன்னிப் பெண்களுக்கு நினைத்த வரன் அமைய பங்குனி உத்திர விரதத்தை கடைப்பிடிப்பது யோகத்தைக் கொடுக்கும்.. பங்குனி உத்திர விரதத்தால் கிடைக்கும். அரசு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும், அரசு சார்ந்த காரியங்கள் நடக்கும். சிலருக்கு பணியிடத்தில் இழுபறியாக இருக்கும் பதவி உயர்வு கிடைக்கும்.வட மாநிலங்களில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் சகோதரத்துவத்தை வலியுறுத்தவும் எப்படி ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதோ, அது போலவே நம் தமிழகத்தில் பங்குனி உத்திரப் பெருவிழாவாகக் கொண்டாடி வருகிறோம்.
0
Leave a Reply