இருவரும் ஒருவராக..
புதுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது வாராப்பூர் அகத்தீஸ்வரர் கோயில்.இங்கு ராகு, கேதுஇருவரும் இணைந்துஒரே வடிவில்அருள்புரிகின்றனர்.சிவனின் ஆணைக்குகட்டுப்பட்டுகைகட்டிய நிலையில்உள்ளனர்.கைலாயத்தில் இருந்து பொதிகை மலைக்கு செல்லும் வழி எங்கும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார் அகத்தியர். அதில் இக்கோயிலும் ஒன்றாகும். அம்மனின் திருநாமம் சவுந்தராம்பிகை. 1300 ஆண்டுகள் பழமையான திருத்தலம்.ராகுவும், கேதுவும் கைகளை கட்டியபடி சிவபெருமானின் நேரடி பார்வையில் இங்கு உள்ளனர்.
காளஹஸ்திக்கு நிகரான இங்கு வழிபடுவோருக்கு திருமணத்தடை விலகும்.
குழந்தைப்பேறு கிடைக்கும்.நோய்கள் தீரும். காலசர்ப்ப தோஷம், நாக தோஷத்திற்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
0
Leave a Reply