ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் தல வரலாறு
பூமிதேவியின் அம்சமான ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்துாரிலுள்ள நந்தவனத்தில் அவதரித்தாள். அங்குள்ள, ஒரு துளசிச் செடியின் அடியில்,கலியுகம் பிறந்து 98வதாக நிகழ்ந்த நள வருடம் ஆடிமாதம் வளர்பிறையில் பூர நட்சத்திர நன்னாளில் பெரியாழ்வார், ஆண்டாளைக் கண்டெடுத்தார். தான் பூஜித்து வந்த வடபெருங் கோயிலுடையானிடம் சென்றார்.
பெருமாளும் 'கோதை என்னும் பெயரிட்டு குழந்தையை வளர்த்து வருவீராக' என்று அருள்புரிந்தார். ஆண்டாள் கண்ணன் மீது கொண்ட பக்தி காதலாக மாறியது. அவனையே தன் கணவனாக நினைத்து வாழத் தொடங்கினாள். அவளுடைய அன்பை ஏற்ற கண்ணனும் ஆண்டாளின் பூமாலையையும்,பாமாலையையும் ஏற்று அருள்புரிந்தார். அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் அமைந்துள்ளது.
மார்கழி நோன்பிருந்த ஆண்டாள், திருப்பாவை எனும் பிரபந்தம் பாடினாள்.30 பாசுரங்கள் உடையது இது.கண்ணனை தரிசிக்க தோழியர்களை எழுப்புவது போன்ற பொருளில் இப்பாசுரம் பாடப்பட்டிருக்கும்.தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஸ்ரீவில்லிப்புத்துார் கோயில், ஆண்டாள் சன்னதி விமானத்தில் உள்ளன.இதற்கு, 'திருப்பாவை விமானம்' என்றே பெயர். ஆண்டாளை தரிசிப்பவர்கள் இந்த விமானத்தை அவசியம் தரிசிக்க வேண்டும்.
0
Leave a Reply