நாக தோஷம் போக்கும் ஆதிகேது ஆலயம் .
சோழவள நாட்டில் எண்ணற்ற சிறப்புவாய்ந்த ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றாக செம்பங்குடி ஆலயமும் திகழ்கிறது. இக்கோவிலின் இறை வன் நாகநாத சுவாமி, அம்பாள் கற்பூரவல்லி தயார். இங்கு ஆதிகேது தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக் கின்றார். தோஷங்களில் இருந்து விடுபட சிறந்த தலம்.
அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கட லைக் கடைந்தனர். அதில் கிடைத்த அமிர்தத்தை தேவர் களுக்கு பகிர்ந்தளித்தார், மகாவிஷ்ணு.விப்ரசக்தி என்னும் அசுரனுக்கும், இரணியனின் தங்கை சிம்ஹிக்கும் பிறந்த வன் ஸ்வபானு. அசுர குலத்தவனான ஸ்வபானு, தேவ வடிவம் பூண்டு அமிர்தத்தை உண்டான். இதை குறிப்பால் உணர்ந்த சந்திர-சூரியர்கள், அந்த அசுரனின் தலையி ஓங்கி அடித்தனர். இதனால் அவனது தலை சிரபுரம் என்னும் சீர்காழியிலும், உடல் செம்பாம்பினன்குடி என் னும் செம்பங்குடியிலும் விழுந்தது.
அமுதுண்டதால் அந்த இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாக மாறின. அவை, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, ஈசனை நோக்கி கடும் தவமிருந்தன. அவர்கள் முன் எழுந்தருளிய சிவனிடம், "அகில உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் வரமும், சந்திர - சூரியரை விழுங்கும் பலமும்" வேண்டும் என வேண்டினர். ஈச சூரிய - சந்திரர்கள் உலக உயிர்களுக்கு இன்றியமை யாதவர்கள். அவர்கள் இன்றி உலகம் தத்தளிக்கும் என் றார். இருப்பினும், கிரகண காலங்களிலும், அமாவாசை யிலும் அவர்களை விழுங்கும் திறன் பெற அருள்பாலித்தார். மேலும் இருவருக்கும் கிரக பதவியும் வழங்கினார். அவர்களே ராகு - கேது ஆவர்.
சிவந்த மனித உடலும், பாம்பின் தலையும் கொண்ட கேதுவின் வடிவம், இங்கு குடி கொண்டதால் இத்தலம் செம்பாம்பினன்குடி ஆனது. இதுவே மருவி செம்பங்குடி என்றாகி உள்ளது. இந்த ஆலயமே ஆதி கேது தலமாக போற்றப்படுகிறது. அருணாசலக் கவிராயரின் சீர்காழி தலபுராணத்தில் இப்பகுதி செம்பாம்பினன்குடி என்றும் கேதுபுரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசர் அருளிய ஆறாம் திருமுறையில், மனித இடர்களைப் போக்கும் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தலத்தை வைப்புத்தலமாக போற்றியுள்ளார்.
0
Leave a Reply