ஆடி மாதம் 'ஆயிரம் கண்ணுடையாள்' அம்மன் மாதம்.
தெய்வீகம் மிக்க ஆடி, அம்மனுக்கு உரிய மாதமாக போற்றப்பட்டு, ஆடி மாதம் வந்தாலே ஊரெங்கும் அம்பிகை வழிபாடு களைகட்டும். பூமிதேவி ஆண்டாள் நாச்சியாராக அவதரித்ததும் ஆடிப்பூர நன்னாளில் தான். பார்வதியின் தவத்தை மெச்சிய சிவன், ஆடி மாதத்தை அம்பிகை மாதமாக இருக்க வரமளித்தார்.
சிவனுடைய சக்தியை விட, அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் விசேஷமானதாக இருக்கும்.ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி அம்மன் வழிபாட்டுக்குரிய சிறப்பான நாட்களாகும். அம்பிகை எல்லையற்ற சக்தி கொண்ட அம்பிகை, பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது.
ஆயிரம் கண்கள் கொண்டவள் என்பதால் 'ஆயிரம் கண்ணுடையாள்' எனப்படுகிறாள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் கோயில் கொண்ட அம்மனுக்கு, லலிதா சகஸ்ரநாமத்தில் ஆயிரம் திருநாமங்கள் ,வெள்ளி அன்று படிப்பது சிறப்பு. அம்மனுக்கு பிடித்த ஆடி மாதத்தை வழிபாட்டுக்குரிய மாதம் என நம் முன்னோர்கள் போற்றினர்
0
Leave a Reply