25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


கேட்டதையெல்லாம் தரும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கேட்டதையெல்லாம் தரும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ளபிள்ளையார்பட்டியில்இருப்பதுதான்புகழ்பெற்றஸ்ரீகற்பகவிநாயகர்திருக்கோவில். தேவலோகத்தில் இருக்கும் கற்பக மரத்தின் அடியில் நின்று நாம் என்ன வரம் வேண்டினாலும் அது கிடைக்கும். அதைப்போல தான் கற்பக விநாயகரிடம் நாம் மனதில் என்ன நினைத்து வேண்டினாலும் அது உடனேயே நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் தான் இவருக்கு கற்பக விநாயகர் என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கோவில் 2500 வருட பழமையான குடைவரைக் கோவிலாகும்.

குன்றைக்குடைந்து கோவிலாகவும், ஸ்ரீ கற்பக விநாயகரின் சிற்பத்தையும், ஸ்ரீ திருவீசர் என்ற லிங்கத்தையும் பாண்டியர்கள் வடிவமைத்துள்ளனர்.இங்குள்ள கற்பக விநாயகருக்கு இரண்டு கைகள் மட்டுமே உள்ளன. விநாயகர் கையிலே தனக்கு பிடித்த மோதகம் இல்லை. அதற்கு பதிலாக யோகநிலையில் உலக நன்மைக்காக கையிலே லிங்கத்தை வைத்து ஞான தவம் புரியும் யோக விநாயகராக இருப்பதால், இவரிடம் கேட்ட வரங்களெல்லாம் எளிதிலே கிடைத்துவிடும். வடக்கு திசையை நோக்கியிருக்கும் வலம்புரி விநாயகரே பிள்ளையார்பட்டி விநாயகர். வலம்புரி விநாயகரை வணங்குபவருக்கு வாழ்வில் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.

விநாயகர் ஆவணி மாதம் வளர்பிறை சதூர்த்தி திதியில் அவதரித்தார். அதனால் தான் ஆவணி மாதம் வருகின்ற வளர்பிறை சதூர்த்தி திதியை விநாயகர் சதூர்த்தியாக கொண்டாடுகின்றோம். மாட்டு சாணம், களிமண், மஞ்சள், சந்தனம் இதில் ஒன்றை பிள்ளையாராக பிடித்து வைத்து இரண்டு அருகம்புல்லை வைத்தாலே போதும் நம் குறைகளை கேட்க ஓடோடி வரும் எளிமையான கடவுள் தான் பிள்ளையார்.

பிள்ளையாரை இந்து மதத்தில் மட்டும் கடவுளாக வழிப்படவில்லை. பௌத்த மதத்திலும் ‘விநாயகா’ என்ற பெயரில் வழிப்படப்படுகிறார். திபெத், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் விநாயகருக்கு எண்ணற்ற பக்தர்கள் இருக்கிறார்கள் . 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *