25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Apr 28, 2025

28 TH APRIL விளையாட்டு போட்டிகள்

டேபிள் டென்னிஸ்  தெற்காசிய யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன் ஷிப்நேபாள தலைநகர் காத்மாண்டுவில்,19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான பைனலில் இந்தியா, நேபாளம் மோதின.பிரிதா, அனன்யா, ஹர்தீ படேல், தியா இடம் பெற்ற இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.பெண்கள் 15 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான பைனலில் பிரீத்தி பால், ஆருஷி நந்தி,ஆத்விகா அராவல், தன்மயி சஹா இடம் பெற்ற இந்திய அணி 3-0 என இலங்கையை வீழ்த்தி தங்கத்தை வென்றது. 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தனிநபர் பைனலில் இந்தியாவின் சோப்தா 3-1 வீரர் குஷால் என சக பாலமுருகனை வென்றார். 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தனிநபர் பைனலில் இந்தியாவின் அனன்யா 3-1 என பிரிதாவை  வீழ்த்தி தங்கம் வென்றார்.இரட்டையரில் (15, 19 வயது) ஆதிக்கம் செலுத்திய இந்திய நட்சத்திரங்கள் 6 தங்கத்தையும் தட்டிச் சென்றனர்.இந்தியாவுக்கு 13 தங்கம், 3 வெள்ளி என, மொத்தம் 16 பதக்கம் கிடைத்தது.  குத்து சண்டை 17, 15, வயதுக்குட்பட் டோருக்கானஆசியகுத்துச் சண்டை சாம்பியன்ஷிப் ஜோர்டானில், நேற்று, 17 வயதுக்குட்பட்டோருக் கான அரையிறுதி போட்டிகள் நடந்தன.பெண்களுக்கான 46 கிலோ பிரிவு அரையிறுதி யில் இந்தியாவின் குஷி சந்த், உக்ரைனின் ஒலெக் சாண்ட்ரா செரெவாடா மோதினர். இதில் குஷி சந்த் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.  ஆசிய பேஸ்பால்: இந்தியா தகுதி பெண்களுக்கான ஆசிய கோப்பை பேஸ்பால் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்தியா, இலங்கை, ஈரான் அணிகளை வீழ்த்தி முதலிடம்பிடித்தது. அடுத்து நடந்த 'சூப்பர் ரவுண்டு சுற்றில் இந்தோ னேஷியாவிடம் வீழ்ந்தஇந்தியா, தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முடிவில் முதலிரண்டு இடம் பிடித்த இந்தோனேஷியா, இந்தியா அணிகள் பைனலுக்கு (ஏப். 29) முன்னேறின.இவ்விரு அணிகள், ஆசிய கோப்பை பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றன. இந்திய அணி, தொடர்ந்து 4வது முறையாக (2017, 2019, 2023, 2025) ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது.

Apr 27, 2025

27TH APRIL IPL MATCH.

27TH APRIL IPL MUMBAI - LUCKNOW TEAMAPRIL27ம் தேதி மும்பையில், லக்னோ, மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 215/7 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய லக்னோ அணி 161/10 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக WILL JACKS தேர்ந்தெடுக்கப்பட்டார். APRIL 27ம் தேதி  பெங்களுர், டெல்லி அணிAPRIL 27ம் தேதி டெல்லியில், பெங்களுர், டெல்லி அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 162/8 ரன்கள் எடுத்தது.,அடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணி 165/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக KIRUNAL PANDYA தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Apr 27, 2025

மஹாராஷ் டிராவின் ஷாம்பவி, துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

  குமார் சுரேந்திர சிங் நினைவு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் டில்லியில், பெண்களுக்கான 10 மீ., ''ஏர் ரைபிள்' பிரிவு தகு திச் சுற்றில் மஹாராஷ் டிராவின் ஷாம்பவி, 633.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித் தார். அடுத்து நடந்த பைனலில் 16 வயது வீராங்கனை ஷாம்பவி, 252.9 புள் ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் பைனல் வரை சென்ற ஹரியானாவின் ரமிதா (252.1 புள்ளி) வெள்ளி வென் றார். உலக சாம்பியன்ஷிப்பில் 'வெண்கலம் வென்ற மேற்கு வங் கத்தின் மெஹுலி கோஷ் (231.0) வெண்கலத்தை கைப்பற்றினார். ஜூனியர் பெண்கள் பிரிவு (10 மீ., 'ஏர் ரைபிள்') பைனலில் ரமிதா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.ஷாம்பவி வெள்ளி, வெண்கல பதக்கத்தை, மன்யா மிட்டல் (உ.பி.,) வென்றனர். 

Apr 27, 2025

போலந்தில் கிராண்ட் செஸ் தொடர்.

 இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர விந்த் சிதம்பரம் உட்பட 10 பேர்  பங்கேற்றபோலந்தில் கிராண்ட் செஸ் தொடர் நேற்று துவங்கியது. முதலில் 'ரேபிட்' செஸ் நடக்கிறது. முதல் போட்டியில் பிரக்ஞானந்தா, பிரான்சின் மேக் சிம் வாசியர் மோதினர்.இதில் விளையாடிய பிரக்ஞானந்தா, முதலில் பின் தங்கினார். பின் வாசியர் செய்த தவறுகளை சரியாக பயன்படுத்திய பிரக்ஞானந்தா, போட்டியின் 45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அரவிந்த் சிதம்பத்தை இரண்டாவது போட்டியில் விளையாடிய பிரக்ஞானந்தா, , 59 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.இரண்டு சுற்றிலும் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 4.0 புள்ளியுடன் முதலிடத்தில்  உள்ளார். அரவிந்த் சிதம் பரம் (1.0) 8வது இடத்தில் உள்ளார். 

Apr 27, 2025

கொழும்பில் ஒருநாள் கிரிக்கெட் தொடர்.

ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்பில் பங்கேற்றுள்ள  இந்தியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் நேற்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத,. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை சந்தித்தது. போட்டிக்கு முன் மழை கொட்டி தீர்த்ததால் ஆட்டம் 39 ஓவர் கொண்டதாக குறைக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இந்திய வீராங்கனைகள் கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி 29.4 ஓவர் களில் ஒரு விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. பிரதிகா ராவல் 50 ரன்களுடனும், ஹர்லீன் தியோல் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஸ்மிர்தி மந்தனா 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.நாளை நடைபெறும் 2-வது லீக்கில் இந் தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் போட்டி நாளை நடைபெறும்.. 

Apr 27, 2025

கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ்,

டபிள்யு. டி.டி., டேபிள் 'கன்டெண்டர்' டென்னிஸ் தொடர் டுனிசியாவில் ,கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா சிட் டாலே ஜோடி, ஜப்பானின் சோரா மட்சுஷிமா, மிவா ஹரிமோடோ ஜோடியை சந்தித்தது. .இந்திய ஜோடி 3-2 (11-9, 5-11, 14-12, 3-11, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. டபிள்யு.டி.டி., 'கன்டெண்டர்' கலப்பு இரட்டையரில் பட்டம் வென்ற 2வது இந்திய ஜோடியானது.இந்தியாவின் மனுஷ் ஷா, மானவ் தாக்கர் ஜோடி, 2-3  (11-8, 7-11, 11-8, 9-11, 10-12) என்ற கணக்கில் ஜெர்மனியின் பெனடிக்ட் டுடா, ஆன்ட்ரி பெர் டெல்ஸ்மியர் ஜோடியி டம்  .ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.  குத்து சண்டை 15,17 வயதுக்குட்பட்டோருக் கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்ஜோர்டானில் நடக்கிறது. நேற்று, 17 வயதுக்குட் பட்டோருக்கான காலிறுதி போட்டி நடந்தது.பெண்களுக்கான 60 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர், ஜோர்டானின் அயா அல்ஹாசனாத் மோதினர். சிம்ரன் ஜீத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.பின், 70 கிலோ பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை ஹிமான்ஷி, பாலஸ்தீனத்தின் பராஹ் அபூ லைலாவை வென்றார்.ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் அமன் சிவாச் (63 கிலோ), தேவன்ஷ் (80 கிலோ) வெற்றி பெற்றனர். இந்தியாவுக்குஇத்தொடரில் 43 பதக்கம் உறுதியானது. இதில்  17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 18 பதக்கம்,15 வயதுக்குட்பட் டோர் பிரிவில் 25 பதக்கம் வென்றனர்.

Apr 27, 2025

ஆசிய யோகாசன போட்டியில்,  87 பதக்கம்  வென்ற இந்தியா.

ஆசியயோகாசனபோட்டிசாம்பியன்ஷிப்  டில்லியில் நடந்தது.இந்தியா,நேபாளம்,இலங்கை,ஜப்பான்,தாய்லாந்து, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், பூடான் உள்ளிட்ட 21 நாடுகள் பங் கேற்றன. இதில் இந்திய நட்சத்திரங்கள் 83 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என, மொத்தம் 87 பதக்கங்களை அள்ளினர்.

Apr 25, 2025

25TH APRIL IPL MATCH CHENNAI - HYDERABAD

APRIL 24-ம் தேதி  சென்னையில், ஐதராபாத் சென்னை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 154/10 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ஐதராபாத் அணி 155/5 ரன்கள்  எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக HARSHAL PATEL தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Apr 25, 2025

25TH APRIL விளையாட்டு போட்டிகள் 

உலக டேபிள் டென்னிஸ்  டுனிசியாவில் உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர். பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று நடந்தது. தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறிய இந்தியாவின் தியா சிட்டாலே, இத் தொடரின் 'நம்பர் -7' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 'நம்பர்-1' வீராங்கனை பத்ராவை சந்தித்தார்.தியா முதல் செட்டை 12-10 என கைப்பற்றினார். அடுத்த இரு செட்டை மணிகா 11–5, 11–9 வசப்படுத்தினார். கடைசி இரு செட்டில் தியா 11-4, 11-4 என ,முடிவில் தியா 3-2 என்ற செட் கணக்கில் மணிகாவை வீழ்த்தினார்.டென்னிஸ் துருக்கியில் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் ஒற்றையர் பிரிவு இந்தியாவின் காலிறுதியில் வைஷ் ணவி, பெல்ஜியத்தின் அமேலி வான் இம்பேமோதினர். வைஷ்ணவி6,1, இதில்6,3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, அமெரிக்காவின் இண்டியா ஹவுட்டன் ஜோடி, பெல்ஜியத்தின் அமேலி வான் இம்பே, காட் கோபஸ் ஜோடியை கொண்டது. இதில் வைஷ்ணவி ஜோடி 5-7, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.

Apr 24, 2025

24TH APRIL IPL MATCH BENGALORE - RAJASTHAN

APRIL 24-ம் தேதி  பெங்களூரில், ராஜஸ்தான், பெங்களூர்,  அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 205/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான்  அணி 194/9 ரன்கள்  எடுத்து தோல்வி அடைந்து, பெங்களூர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக JOSH HAZLEWOOD  தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1 2 ... 146 147 148 149 150 151 152 ... 175 176

AD's



More News