25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


யு.எஸ். ஓபன்: அரையிறுதிக்கு ரிபாகினா, கோகோ காப் முன்னேற்றம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யு.எஸ். ஓபன்: அரையிறுதிக்கு ரிபாகினா, கோகோ காப் முன்னேற்றம்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, சீனாவின் கின்வென் ஜெங் மோதினர்.

முதல் செட்டை 3-6 என இழந்த ரிபாகினா, இரண்டாவது செட்டை 6-1 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என வென்றார்.

இரண்டு மணி நேரம், 14 நிமிடங்கள் நீடித்த போட்டியில் அசத்திய ரிபாகினா, 3-6, 6-1, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ். ஓபனில் முதல்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப், ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவாவை எதிர்கொண்டார். இரண்டு மணி நேரம், 19 நிமிடங்கள் நீடித்த போட்டியில் கோகோ காப் 2-6, 7-6, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இத்தொடரில் 2வது முறையாக (2023, 2026) அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஸ்வெரேவ் அசத்தல்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், நெதர்லாந்தின் போடிக் வான் டி ஜாண்ட்சுல்ப் மோதினர்.

அபாரமாக ஆடிய ஸ்வெரேவ் 6-2, 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 3வது முறையாக (2020, 2021, 2026) அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் கரன் கச்சனோவ், பெல்ஜியத்தின் அலெக்சாண்டர் பிளாக்ஸ் மோதினர். இதில் கச்சனோவ் 6-2, 7-5, 3-2 என முன்னிலையில் இருந்தபோது, காயம் காரணமாக பெல்ஜியம் வீரர் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து கச்சனோவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News