பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இளம் வீராங்கனை மனு பாகர் ,10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநகர் கலப்பு பிரிவில் சரப்ஜோத் சிங் உடன் சேர்ந்து வெண்கலம் வென்றார். சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நூலிழையில் வெண்கலத்தை நழுவவிட்ட இவர் நான்காவது இடம் பிடித்தார். நிறைவு விழாவில் இந்திய ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் உடன் மூவர்ணக்கொடியை ஏந்தி வந்தார்.ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய கொடியை ஏந்தி வந்தது. மறக்க முடியாத அனுபவம். வாழ்நாளில் கிடைத்த அரிய வாய்ப்பு. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன் என தெரிவித்தார் மனுபாகரின் பயிற்சியாளரும், இந்திய முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரருமான ஐஸ்பால் ராணா கூறுகையில் ஒலிம்பிக் போட்டிக்காக மனு பாகர் நீண்ட காலம் பிரேக் எடுக்க திட்டமிட்டுள்ளார். வரும் அக்டோபரில் டில்லியில் சுடுதலில் பங்கேற்க வாய்ப்பு இல்லை. சிறிய ஒய்வுக்கு பின், 2026-ல் நடக்க உள்ள ஆசிய, காமன்வெல்த் போட்டியில் சாதிக்க பயிற்சியை துவக்குவார்.
பாரிஸ் பாராலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8ல் நடக்க உள்ளது. இதில் இந்திய நட்சத்திரங்கள் 25 க்கும் மேல் பதக்கம் வெல்வர். என தலைவர் ஐஜாரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ,ஆமித் ரோஹி தாஸ். சுமித், அபிஷேக், சஞ்சய் உள்ளிட்ட வீரர்கள் நேற்று பாரிசில் இருந்து டில்லி விமான நிலையம் வந்தனர். இவர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சுமித் கூறுகையில் டோக்கியோ பாரிஸ் என தொடர்ந்து இரு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற எங்கள் மீது மக்கள் அன்பை பொழிகின்றனர். இது இந்தியாவில் ஹாக்கி விளையாட்டுக்கும், அதன் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான தருணம். என்றார்.பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற இந்தியாவின் அமன் ஷெராவத் தாயகம் திரும்பினார். இவருக்கு டில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜீலை 26-ல் துவங்கியது. 206 நாடுகளை சேர்ந்த 10,714, பேர் பங்கேற்றனர். நிறைவு விழாவை 80,000 ரசிகர்கள் கண்டு களித்தனர்.இந்தியா சார்பில் வீராங்கனை மனுபாகர், ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் சேர்ந்து மூவர்ணக் கொடியை ஏந்தி வந்தனர். உலகின் சிறந்த இசை கலைஞர்களின் ஆடல், பாடல், சர்க்கஸ் கலைஞர்களின் வித்தை, பாலே நடனம் இடம் பெற்றன..மிஷன் இம்பாசிபிள் புகழ் ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ டாம் குருஸ் மிரட்டினார். 62 வயதான இவர் துடிப்பான இளைஞர் போல சாகசம் நிகழ்த்தினார். 'ஸ்டேட் டி பிரான்ஸ்' மைதான மேற்கூரையில் தோன்றினார்.160 அடி உயரத்தில் இருந்து கயிறு கட்டியவாறு, நிறைவு விழா மேடைக்கு துல்லியமாக குதித்தார். இவரை பாத்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பின் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோனா பைல்சிடம் இருந்து ஒலிம்பிக் கொடியை பெற்றார்.பாரிசின் 'ஸ்டேட்டி பிரான்ஸ் மைதானத்தில் ஒலிம்பிக் போட்டிக்கான நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடந்தன. வானவேடிக்கையில் மைதானம்.ஜொலித்தது பாரிசில் ஒலிம்பிக் போட்டிக்கான நிறைவு விழா நடந்தது. கிராமி விருது வென்ற கேப்ரியலா சர்மியன்டோ வில்சன் (எச்.இ.ஆர்) அமெரிக்க தேசிய கீதத்தை பாடினார்.லாஸ் ஏஞ்சல்சில் 2028-ல் ஒலிம்பிக் நடக்கவுள்ளது. இதற்கான கொடியை லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ், அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்சியம் வழங்கினார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்கள் வென்றன.பாரிஸ் ஒலிம்பிக்கில் 8 போட்டியில் இந்தியா நான்காவது இடம் பிடித்து பதக்கத்தை இழந்தது ..பளுதூக்குதலில் மீராபாய் சானு 1 கிலோ குறைவாக தூக்கியதால் வெண்கலம் நழுவியது.துப்பாக்கி சுடுதலில் மனுபாகர் 25 மீட்டர் பிஸ்டல் அர்ஜீன் 10 மீட்டர் ஏர் ரைபிள் 4வது இடம் பிடித்தனர்.வில்வித்தையில் திராஜ், அன்கீதா ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வீழ்ந்தது.லக்சயா சென் பாட்மின்ட் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோற்றார். மகேஷ்வரி, அனன்ஜீத் சிங் ஜோடி துப்பாக்கி சுடுதல் 1 புள்ளி வித்தியாசத்தில் வெண்கலத்தை இழந்தது.இந்தியா பதக்கப்பட்டியலில் 71 வது இடம் பிடித்தது. இதன்மூலம் ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் 3-வது முறையாக 71 வது இடம் பெற்றது.
பாரீஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான வாலிபால் பைனலில் அமெரிக்கா, இத்தாலி, அணிகள் மோதின ஆபாரமாக ஆடிய இத்தாலி அணி 3-0, 25-18, 25-20, 25-17, என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக தங்கம் வென்றது.பாரிஸ் ஒலிம்பிக்கில் பிரேக்டான்ஸ் போட்டி அறிமுகமானது ஆண்களுக்கான பைனலில் கனடாவின் பில் விசார்டு, பிரான்சின் டான் டேனிய மோதினர். இதில் கலக்கிய பிரேசில் பில் விசார்டு 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான மாரத்தான் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 2 மணி நேரம் 22 நிமிடம் 55 வினாடியில் கடந்த நெதர்லாந்தின் சிபான் ஹசன், பதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார்பெண்களுக்கான கூடைப்பந்து பைனலில் அமெரிக்கா, பிரான்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டியில் அமெரிக்க அணி 67-66, 15-9, 10-16, 20- 18, 22-23 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றது.ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வரலாற்றில் 37 தங்கம், 21 வெள்ளி, 8 வெண்கலம் என 66 பதக்கம் வென்ற சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.பாரிஸ் ஒலிம்பிக்கில் 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என 126 பதக்கம் வென்ற அமெரிக்கா முதலிடம் பிடித்தது. சீனா 40 தங்கம் வென்ற போதும் 27 வெள்ளி, 24 வெண்கலம் கைப்பற்றியதால் 91 பதக்கம் 2-வது இடம் பிடித்தது. போட்டியை நடத்திய பிரான்ஸ் 5-வது இடம் பெற்றது.
ஒலிம்பிக் தடகளத்தில் 400 மீட்டர் தடை ஓட்டத்தின் பைனல் நடந்தது. இதில் அசத்திய அமெரிக்காவின் மெக்லாக்லின் லாவ் ரோன் 50.37 வினாடி நேரத்தில் வந்து, புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார். இம்மகிழ்ச்சியில் மெக்லாக்லின்.பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஒட்டத்தின் பைனல் நடந்தது. இதில் போட்ஸ் வானா வீரர் லெட்சில் டெபோகோ (19.46 வினாடி) தங்கம் வென்றார் .அமெரிக்காவின் கென்னத் பெத்நாரெக் (19.82 வினாடி )முறையே வெள்ளி, வெண்கலம், கைப்பற்றினர். பைனலில் (200 மீட்டர் ஒட்டம்) இலக்கை அடைந்த பின் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் மைதானத்தில் அப்படியே சரிந்தார். மூச்சு திணறிய இவருக்கு உடனடியாக மருத்துவ முதலுதவி அளிக்கப்பட்டது. பின் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார். சமீபத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இவருக்கு இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தனிமைப்படுத்தப்பட்ட இவர் மாஸ்க் அணிந்திருந்தார். விதிமுறைப்படி 200 மீட்டர் ஒட்டத்தில் பங்கேற்று வெண்கலம் வென்றார்.பிரான்ஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டி நடக்கிறது. 100 மீட்டர் தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஒட்டம் என மொத்தம் 7 போட்டி கொண்டது. ஒட்டு மொத்த போட்டிகள் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் டாப் 3 வீராங்கனைகளுக்கு பதக்கம் கிடைக்கும்.முதல் 5 போட்டி முடிவில் உலக சாம்பியன் பிரிட்டனின் கேத்தரினா, முதலிடத்தில் இருந்தார். அடுத்து நடந்த ஈட்டி எறிதலில் இவர் 45.49 மீட்டர் தூரம் மட்டும் எறிய 11 வது இடம் தான் கிடைத்தது. இதையடுத்து ஒட்டுமொத்தமாக 5803 புள்ளி எடுத்த கேத்தரினா, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.பெல்ஜியத்தின் நவிசாட்டோவ் தியம், ஈட்டி எறிதலில் முதலிடம் 54.04 மீட்டர் பெற்றார். இவர் மொத்தம் (5924) புள்ளி எடுத்து முதலிடத்துக்கு முன்னேறினர். மூன்றாவது இடத்தில் சுவிட்சர்லாந்தின் அன்னிக் (5694 )உள்ளார்.இன்று கடைசி போட்டியாக 800 மீட்டர் ஒட்டம் நடக்கிறது. இதில் சாதித்தால் கேத்தரீனா, முதலிடம் பெற்று தங்கம் வெல்லலாம்.
வீரர்கள் சார்பில் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் தேர்வு செய்யப்பட்டார். தனது கடைசி தொடரில் பங்கேற்ற ஸ்ரீஜேஷ்,ஒலிம்பிக்கில் இந்தியா தொடர்ச்சியாக 2வது வெண்கலம் வெல்ல உதவினார். இதனையடுத்து நிறைவு விழா அணிவகுப்பில் மனு பாகர், ஸ்ரீஜேஷ் ஜோடி இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி வருவர்.
.பிரான்சில் பாரிஸ்ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பைனலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, கிரனாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் உட்பட 12 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரருக்கும் தலா 3 வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் வாய்ப்பில் நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் தவறு செய்தனர்.இரண்டாவது வாய்ப்பில் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் எறிந்து முதலிடம் பிடிக்க, நீரஜ் சோப்ராவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 2வது வாய்ப்பில் 89.45 மீட்டர் எறிந்த நீரஜ் சோப்ரா 3 வது வாய்ப்பில் மீண்டும் தவறு செய்ய 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார் . முதல் 8 இடம் பிடித்த வீரர்களுக்கு மீண்டும் தலா 3 வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் மூன்று வாய்ப்புகளிலும் நீரஜ் சோப்ரா தவறு செய்ய டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்ற தங்கப்பதக்கத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார் நீரஜ் சோப்ரா.நீரஜ் சோப்ரா கூறுகையில் போட்டியின்போது காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் மட்டும் கவனமாக இருந்தேன். இதனால் வேகமாக ஒடவில்லை. கடந்த ஆண்டு ஆப்பரேஷன் செய்து கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக வேண்டியிருந்ததால் சற்று யோசித்தேன்.விளையாட்டில் காயத்தை லேசாக கருதிவிடக் கூடாது. உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே நீண்ட நாட்கள் எந்த ஒரு விளையாட்டிலும் பங்கேற்க முடியும். எனது பயிற்சியாளர் குழுவினருடன் ஆலோசித்து ஆப்பரேஷன் செய்வது குறித்து முடிவு செய்ய உள்ளேன் என்றார்.பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் சர்வதேச அரங்கில் நீரஜ் சோப்ரா மீண்டும் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவர் பதக்கம் வென்றதால் இந்தியா பெருமை கொள்கிறது. என தெரிவித்திருந்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 65 வீரர் 45 வீராங்கனை என மொத்தம் 110 பேர் 16 போட்டிகளில் களமிறங்கினர். டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற நிலையில் இம்முறை இந்தியா எப்படியும் இரட்டை இலக்க பதக்கங்கள் பெறும் என நம்பப்பட்டது. மாறாக நாளை போட்டி முடியவுள்ள நிலையில் இந்தியாவுக்கு 5 பதக்கம் மட்டுமே கிடைத்தன. ஈட்டி எறிதலில் நீரஜ்சோப்ரா வெள்ளி, ஹாக்கி வெண்கலம், துப்பாக்கி சுடுதலில் மனுபாகர், ஸ்வப்னில் கலப்பு இரட்டையரில் மனுபாகர் சரப்ஜோத் சிங், வெண்கலம் கைப்பற்றினர்.பாரிஸ் ஒலிம்பிக்கில் தடகள போட்டிக்கான 400 மீட்டர் தொடர் ஒட்டம் நடந்தது. பெண்கள் பிரிவில் 8 அணிகள் 2 பிரிவுகளாக தகுதிச் சுற்றில் பங்கேற்றன. பி பிரிவில் களமிறங்கிய இந்திய அணியில் சுபா வெங்கடேஷன், ஜோதிகா ஸ்ரீ தண்டி, வித்யா ராம் ராஜ் பூவம்மா ராஜீ இடம் பெற்றிருந்தனர்.ஒட்டு மொத்தமாக 15 வது இடத்தை கைப்பற்றி பைனல் வாய்ப்பை இழந்தது.ஆண்களுக்கான பிரிவில் 8 அணிகள் இரு பிரிவுகளாக தகுதிச்சுற்றில் விளையாடின. பி பிரிவில் விளையாடிய இந்திய அணியில் முகமது அஜ்மல் முகமது அனாஸ், ராஜேஷ் ரமேஷ், அமோஜ் ஜேக்கப் இடம் பிடித்திருந்தனர். பந்தய தூரத்தை 3 நிமிடம் 00.58 வினாடியில் கடந்து 4வது இடம் பிடித்த இந்தியா, ஒட்டு மொத்தமாக 10 வது இடத்தை கைப்பற்றி பைனலுக்கு தகுதி பெறத்தவறியது
பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் நேற்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, ஸ்பெயின் அணிகள் மோதின. 9வது நிமிடம் ஸ்பெயின் வீரர் ஜோஸ் மரியா அடித்த பந்தை, இந்திய அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்து கைகொடுத்தார்.29வது நிமிடம் இந்தியாவுக்கு கிடைத்த பொனால்டி கார்னர் வாய்ப்பை அமித் தோஹிதாஸ் வீணடித்தார். முதல் பாதி முடிய 21 வினாடி இருந்த போது மீண்டும் பொனால்டி கார்னர் கிடைத்தது. இம்முறை கேப்டன் ஹர்மன்பிரீத்சிங் துல்லியமாக அடித்து கோலாக மாற்றினார். முதல் பகுதியில் போட்டி 1-1 என சமனில் இருந்தது.இரண்டாவது பாதியில் போட்டியின் 33 வது நிமிடம் மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பு வந்தது. மீண்டும் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. கோல் அடிக்க முயற்சித்தனர் ஸ்பெயின் வீரார்கள். இருப்பினும் சீனியர் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷை தாண்டி, கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் வெண்கலப்பதக்கம் கைப்பற்றியது. வெண்கலம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய ஹாக்கி அணியினர்.