ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் சீனாவை வீழ்த்தியது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணி ,அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 14-வது நிமிடத்தில் ஜீக்ராஜ் துல்லியமாக பந்தை பாஸ் செய்தார். இதை கச்சிதமாக பெற்ற சுக்ஜீத் சிங் முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்க சீன வீரர்கள் முயற்சித்தனர். ஆனால் இந்தியாவின் புதிய கோல் கீப்பர் கிருஷ்ணன் பதக் அலர்ட் ஆக இருந்தார் எதிரணியின் வாய்ப்புகளை துடிப்பாக தடுத்தார். இறுதியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.
0
Leave a Reply