சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி .
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடக்கின்றன.நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதின. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஷார்ட், ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதில் கூப்பர் கொனாலி, தன்வீர் சங்கா இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 264 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. துவக்கத்தில் திணறிய இந்திய அணி சுப்மன் கில் (8) ஏமாற் றினார். இரண்டு முறை 'கேட்ச்' வாய்ப்பில் இருந்து தப்பிய கேப்டன் ரோகித் சர்மா (28), கொனாலி வலையில் சிக்கினார். இந்தியா 8 ஓவரில் 42/2 ரன் எடுத்தது. கோலி, ஸ்ரேயாஸ் சேர்ந்து , 'ரிஸ்க்' எடுக்காமல் அழகாக ரன் சேர்த்தனர். ஜாம்பா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கோலி 53 பந்தில், ஒருநாள் அரங்கில் 74வது அரைசதம் எட்டினார்.
கடைசி கட்டத்தில் ராகுல், ஹர்திக் பாண்ட்யா மிரட்டினர். ஜாம்பா ஓவரில் வரிசையாக இரண்டு இமாலய சிக்சர் விளாசிய பாண்ட்யா பதட்டத்தை தணித்தார். பாண்ட்யா28 ரன் எடுத்தார். மேக்ஸ் வெல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ராகுல், வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 48.1ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply