மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனல் விதர்பா அணி 3வது முறையாக ரஞ்சி கோப்பை வென்றது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனல் நடக் கிறது. இதில் விதர்பா, கேரளா அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் விதர்பா 379, கேரளா 342 ரன் எடுத்தன.
நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை துவக்கிய விதர்பா அணிக்கு ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 249 ரன் எடுத்து, 286 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
விதர்பா அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 375 ரன் எடுத்திருந்த போது, இரு அணி கேப்டன்களும் கடைசி நாள் ஆட்டத்தை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். தர்ஷன் (51), யாஷ் தாக்கூர் (8) அவுட்டா காமல் இருந்தனர். கேரளா சார்பில் ஆதித்யா சர்வதே 4 விக்கெட் கைப்பற்றினார்.
இதனையடுத்து போட்டி 'டிரா' என அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் 37 ரன் முன் னிலை பெற்ற விதர்பா அணி 3வது முறையாக ரஞ்சி கோப்பை வென்றது. ஆட்ட நாயகன் விருதை விதர்பா அணியின் டேனிஷ் மலேவர். வென்றார். தொடர் நாய கன் விருதை விதர்பா சுழற்பந்துவீச்சாளர் ஹர்ஷ் துபே (69 விக்கெட்) கைப்பற்றினார்.
0
Leave a Reply