விராட் கோலியின் சாதனைகள்
ஐ.சி.சி., ஒருநாள் தொடரில் (உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ) அதிக அரைசதம் அடித்த இந்திய வீரர்களில் சச்சினை (23) முந்தினார் கோலி. இவர் 24 அரைசதம் அடித்துள்ளார். ரோகித் (18) 3வது இடத்தில் உள்ளார்.
நேற்று அரைசதம் விளாசிய கோலி, ஒருநாள் அரங்கில் 'சேஸ்' செய்யும் போது 8000 ரன் (159 இன்னிங்ஸ்) எட்டிய உலகின் 2வது வீரரானார். சராசரி 64.54 வைத்துள்ள ஒரே வீரர் இவர் தான். முதலிடத்தில் சச்சின் (8,720 ரன், சராசரி 42.33, 232 இன்னிங்ஸ்)) உள்ளார்.
ஒருநாள் அரங்கில் சேஸ் செய்த போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர்களில் சச்சினுடன் (242 போட்டி, 69 அரைசதம்) இணைந்து முதலிடம் பிடித்தார் கோலி.
ஒருநாள் அரங்கில் அதிக 'கேட்ச்' பிடித்த பீல்டர் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் கோலி (161 கேட்ச், 301 போட்டி). நேற்று 2 கேட்ச் பிடித்த இவர், ஆஸ்திரேலியாவின் பாண்டிங்கை (160, 375 போட்டி) முந்தினார். முதலிடத்தில் ஜெயவர்தனா (இலங்கை, 218, 448 போட்டி) உள்ளார்.
.ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று 50வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார் கோலி. சச்சின் (71), தோனிக்கு (55) அடுத்து இம்மைல் கல்லை எட்டிய மூன்றாவது இந்திய வீரரானார்.
0
Leave a Reply