இந்தியா ஆசிய கோப்பை வில்வித்தையில் அதிக புள்ளி எடுத்து உலக சாதனை படைத்தது.
தாய்லாந்தில் ஆசிய கோப்பை வில்வித்தை 'ரேங்கிங்' தொடர் (21 வயதுக்குட்பட்ட) நடக்கிறது. ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவு தகு திச்சுற்று நடந்தது. இந்தியாவின் குஷால் தலால் (712 புள்ளி), கணேஷ் மணிரத்னம் (711), மானவ் கணேஷ்ராவ் (706) இணைந்து மொத்தம் 2129 புள்ளி எடுத்து, புதிய உலக சாதனை படைத்தனர். இதற்கு முன், இதே கூட்டணி, 2024ல் 2111 புள்ளிஎடுத்திருந்தது.
தொடர்ந்து அணிகளுக்கான பிரிவில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்திய 5-3 என்ற அணி கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.
'ரிகர்வ்' கலப்பு அணிகளுக்கான பிரிவு அரை யிறுதியில் இந்தியாவின் பசந்தி, விஷ்ணு ஜோடி, மலேசியாவின் ஹரிஸ்யா, ஈவன்ரிச் ஜோடியை சந்தித்தது. போட்டி 4-4 என சமனில் முடிய, இந்திய அணி 'ஷூட் ஆப்' முறையில் 19-17 பெற்று, என வெற்றி பைனலுக்கு முன்னேறியது.
'ரிகர்வ்' அணிகளுக்கான ஆண்கள் அரை யிறுதியில் இந்தியாவின் விஷ்ணு, கோல்டி, ராகுல் ஜோடி வெற்றி பெற்றது.
0
Leave a Reply