பெண்களுக்கான புரோ லீக்6வதுசீசன் (2024-25) ஹாக்கி: இந்தியாவெற்றி
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோலீக் 6வது சீசன்(2024,25) நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒடிசா மாநிலம் புவனேஸ் வரில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஒலிம்பிக், உலக சாம்பியன் நெதர்லாந்து அணிகள் மோதின.
போட்டி துவங்கிய 17,28 வது நிமிடத்தில் நெதர் லாந்தின் கேப்டன் பியன் சாண்டர்ஸ்,வான்டர் பேதலா ஒரு கோல்அடிக்க முதல் பாதியில் இந்திய அணி 0,2என பின் தங்கியது.இரண்டாவது பாதியில் போட்டியின் 35வதுநிமிடத்தில் இந்தியாவின் தீபிகா, ஒருபீல்டு கோல் அடித்தார். அடுத்த 8வது நிமிடம் பல்ஜீத் கவுர்(43)தன் பங்கிற்கு ஒருகோல் அடித்தார். முடிவில்போட்டி 2,2 என்ற கணக்கில் சமன்ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது. இரு அணிகளுக்கும் தலாஐந்து வாய்ப்பு தரப்பட்டன. முதல், மூன்றாவது வாய்ப்பில் தீபிகா,மும்தாஜ்கோல் அடித்தனர். பியூட்டி, பல்ஜீத் வாய்ப்புகளை வீணடித்தனர்.
நெதர்லாந்து சார்பில் மார்ஜீன் வின் மட்டும் ஒருகோல் அடித்தார். மற்றநான்கு வீராங்கனைகள் வாய்ப்பை இந்திய கோல் கீப்பர் சவிதா தடுத்து முடிவில். இந்திய அணி 2,1என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.நெதர்லாந்தை வென்ற, இந்திய வீராங் கனைகள் ஒவ்வொருவருக்கும் ரூ1லட்சம்,பயிற்சியாளர்களுக்குரூபாய்50,000பரிசுஅறிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply