25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு போட்டிகள் 21st february
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் 21st february

மாற்றுத்திறனாளிகளுக்கான 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 3 நாட்கள் நடந்தது. 

இதில் நாடு முழுவதும் இருந்து 1,476 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் டி.11 பிரிவில் அரியானா வீரர் அன்குர் தமா 18 நிமிடம் 22.29 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 

வட்டு எறிதலில் எப்.55 பிரிவில் தமிழகவீரர் முத்துராஜா (36.20 மீட்டர்) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 

பெண்களுக்கானஈட்டி எறிதலில் எப்.53 பிரிவில் அரியானா வீராங்கனை காஞ்சன் லகானியும் (8.39 மீட் டர்), எப்.54 பிரிவில் தமிழக வீராங்கனை கீர்த்திகாவும் (11.87 மீட்டர்) தங்கப்பதக்கம்  பெற்றனர்.

போட்டி முடிவில் அரியானா 49 தங்கம், 32 வெள்ளி, 25 வெண்கலம் என 106 பதக்கங்களுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்

தமிழ்நாடு 17 தங்கம், 18 வெள்ளி, 21வெண்கலம் என 56 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது. 

பரிசளிப்பு விழாவில் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி பொதுச்செயலாளர் ஜெயவந்த் குண்டு ஹமனவார், பொருளாளர் சுனில் பிரதான், துணைத் தலைவர் சந்திரசேகர், தமிழ் நாடு பாரா ஸ்போர்ட்ஸ் சங்க பொதுச்செயலாளர் கிருபாகரராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News