களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் கோலி 2016-19 காலக்கட்டத்தில் ரன் மழை பொழிந்தார். சமீபத்திய போட்டிகளில் 'ஆப்-ஸ்டம்ப்பிற்கு' வெளியே வீசும் பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். இவரது பலவீனம் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அம்பலமானது. இதையடுத்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்தார்.வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவரது சேவை, அணிக்கு தேவை என இந்திய கிரிக்கெட் போர்டு கருதியது. இதனால், ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டது.இந்த சமயத்தில் டெஸ்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டியில் இருந்து கோலியும் நேற்று விடைபெற்றார். இது, இந்திய அணியில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. டெஸ்ட் அரங்கில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் பட்டியலில் கோலி முதலிடம். இதுவரை 68 டெஸ்டில், 5864 ரன் (20 சதம், 18 அரைசதம்) குவித்துள்ளார். இந்திய கேப்டன் பட்டியலில் டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றி பெற்றுத் தந்த விராத் கோலி முதலிடம். இவரது தலைமையிலான இந்திய அணி, 68 டெஸ்டில், 40 வெற்றி (58.82% வெற்றி சதவீதம்), 11 'டிரா', 17 தோல்வியை பதிவு செய்துள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் தோனி (27 வெற்றி, 60 டெஸ்ட்), கங்குலி (21 வெற்றி, 49 டெஸ்ட்) உள்ளனர். * கோலி தலைமையில் இந்திய அணி, 43 மாதம் (2016 அக்., -2020 மே) டெஸ்ட் அணி தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தில் இருந்தது
பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ் தொடர், சர்வதேச செஸ் கூட் டமைப்பு சார்பில் 6 கட்டமாக நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 'டாப்-2 இடம் பெறுபவர்கள், கேண்டிடேட்ஸ் தொடரில் (உலக கோப்பை தகுதி போட்டி) பங்கேற்க தகுதி பெறலாம். இதன் கடைசி, 6வது தொடர் ஆஸ்திரியா வில் நடக்கிறது.இதன் 6வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, ஆஸ்திரியாவின் ஆல்கா படேல்கா மோதினர். இதன் 39 வது நகர்த்தலில் வைஷாலி வெற்றி பெற்றார். ஆறு சுற்று முடிவில் உக்ரைனின் அனா முஜிசக் (4.5) முதலிடத்தில் உள்ளார். சீனாவின் ஜு ஜினெர் (4.0), இந்திய வீராங்கனை வைஷாலி (4.0) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்
ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் இத்தாலியில் ,இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் 'சீனியர்' வீரர் போபண்ணா, செக் குடியரசின் ஆடம் பவ்லாசெக் ஜோடி, குரோஷியாவின் நிகோலா மெக்டிக், நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை போபண்ணா ஜோடி 4-6 என கோட்டை விட்டது. இரண்டாவது செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதை போபண்ணா ஜோடி 7-6 என வசப்படுத்தியது. பின் நடந்த 'சூப்பர் டை பிரேக்கரை' போபண்ணா ஜோடி 10-4 என எளிதாக வசப்படுத்தியது.ஒரு மணி நேரம், 44 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 4-6, 7-6, 10-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது.
உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 2 சீனாவின் ஷாங்காய் நகரில் , பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு, அரையிறுதியில் இந்தியாவின் மதுரா,துருக்கி யின் ஹசல் போருனை 143-141 என வீழ்த்தினார்.பைனலில் மதுரா, அமெரிக்காவின் கார்சனை சந்தித்தார். மதுரா 139-138 என வெற்றி பெற்று, உலக கோப்பை வில்வித்தையில் முதல் தங்கம் கைப்பற்றினார். காம்பவுண்டு ஆண்கள் அணிகளுக்கான பைனலில் அபிஷேக் வர்மா, ரிஷாப் யாதவ், ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற இந்திய அணி, செபாஸ்டியன், லுாயிஸ், ரோட்ரிகோ அடங்கிய மெக்சிகோ அணியை சந்தித்தது. இதில் இந்திய அணி 232-228 என வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது.பெண்களுக்கான பைனலில் மதுரா, ஜோதி, சிகிதா இடம் பெற்ற இந்திய அணி, 222-234 என மெக்சிகோவிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. கலப்பு அணி போட்டியில் இந்தியாவின் மதுரா, அபிஷேக் ஜோடி, 144– 142 ,வெண்கலம் வசப்படுத்தியது. உலக கோப்பை வில்வித்தை 'ஸ்டேஜ்-2' சீனாவின் ஷாங்காய் நகரில்,பெண்கள் தனிநபர் 'ரிகர்வ்' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் - தீபிகா குமாரி, தென் கொரியாவின் லிம் சிஹியோன் -மோதினர். இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என, 7 பதக்கம் கிடைத்தது.
ருமேனியாவில் கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசனில், இரண்டாவது தொடர், மூன்றாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் மோதினர். 33வது நகர்த்தலில் முந்தினார் பிரக்ஞானந்தா. 61வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்க ளுக்கான 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடர், 6 கட்டமாக நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் தமிழகத்தின் வைஷாலி பங்கேற்கிறார். இதன் 4வது சுற்றில் வைஷாலி, உக்ரைனின் மரியா முசிசுக் மோதினர். வைஷாலி, 35வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.நான்கு சுற்றுகளின் முடிவில் வைஷாலி, 3.0 புள் ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். உக்ரைனின் அனா முசீசுக் (3.5 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் வைஷாலி இந்தியா சார்பில் பங்கேற்கிறார். இதன் 5வது சுற்றில் வைஷாலி, சீனாவின் ஜினர் ஜு மோதினர். இதில் விளையாடிய வைஷாலி, 59வது நகர்த்தலில் தோல்வி யடைந்தார்.ஐந்து சுற்றுகளின் முடிவில் வைஷாலி, 3.0 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார்.ஐக்கிய அரபு எமி ரேட்சில் (யு.ஏ.இ.,) ஆசிய தனிநபர் 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. கார்த்திகேயன் 4 வது இடம் பிடித்தார்.
பாட்மின்டன் ஜப்பான் வீராங்கனை டோமோகா மியாசாகிதைபே ஓபன் ஒற்றையர் பைனலில் 21-12, 20-22, 21-14 என தாய்லாந்தின் பிட்சாமனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பளுதுாக்குதல் ஆசிய சாம்பியன்ஷிப் 64 கிலோ எடைப் பிரிவில் சீனாவில் இந்திய வீராங்கனை நிருபமா தேவி (206 கிலோ) 4வது இடம் பிடித்து வெண்கல வாய்ப்பை இழந்தார்
கொழும்புவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி, தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்றன. நேற்று, கொழும்புவில் நடந்த பைனலில் இந் தியா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 'பேட டிங்' தேர்வு செய்தார். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 342 ரன் எடுத்தது. முத்தரப்பு ஒருநாள் தொடரின் பைனலில் இந்திய பெண்கள் அணி இலங்கையை வீழ்த்தி, கோப்பை வென்றது.இலங்கை அணி 48.2 ஓவரில் 245 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வி யடைந்தது.
செஸ் ஆசிய 'கான்டினென்டல்' செஸ் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), 2வது சுற்றில் இந்தியாவின் இனியன், சீனாவின் ஷிசூவாங் மோதினர். இனியன் 53வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் முரளி கார்த்திகேயன், சீனாவின் லுலூ யபிங்கை வென்றார். இந்தியாவின் அபிஜீத் குப்தா, சகவீரர் செந்தில் மாறனை தோற்கடித்தார். இந்தியாவின் பிரனேஷ், சீனாவின் ஜியாங்ருய் காங்கை வீழ்த்தினார். இந்தியாவின் நிஹால் சரின், ரஷ்யாவின் நிகிதா மாட்டினியனை வென்றார்.மற்ற 2வது சுற்று போட்டிகளை இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, சேதுராமன், அஸ்வத், பிரணவ் ஆனந்த் உள்ளிட்டோர் 'டிரா' செய்தனர்.பெண்கள் பிரிவில் நடந்த 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் வந்திகா அகர்வால், பிரியங்கா, ரக்ஷிதா, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தனர். வில்வித்தை உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 சீனாவின் ஷாங்காய் நகரில் ரிகர்வ் ஆண் கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பார்த் சுஷாந்த், காலிறுதியில் தென் கொரியாவின் கிம் ஜேதியோக்கை சந்தித்தார். இதில், சுஷாந்த், 6-2 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அடானு 2-6 என தென் கொரிய வீரர் கிம் ஊஜினி டம் தோல்வியடைந்தார். அரையிறுதியில் சுஷாந்த்-ஊஜின் மோத உள்ளனர் பெண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரி, சீனாவின் லி ஜியாமனை எதிர் கொண்டார். இதில் தீபிகா குமாரி 6-2 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில் தென் கொரியாவின் லிம் ஷியோனை சந்திக்க உள்ளார். டென்னிஸ்ஐ.டி.எப்., ஜார்ஜியாவில் நடக்கும் தொடரின், ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா 5-7, 3-6 என்ற கணக்கில் ஜார்ஜியாவின் சோபியாவிடம் தோல்வியடைந்தார். பாட்மின்டன் 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் சீனதைபேயில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியா வின் ஆயுஷ் ஷெட்டி, கனடாவின் பிரையன் யாங் மோதினர். இதில், ஆயுஷ் 16-21, 21-19, 21-14 T வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சீனதைபேயின் யி-டிங் ஹுவாங் மோதி னர். உன்னதி 21-8, 19-21, 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ்,6வது தொடர் ஆஸ்திரியாவில் நடக்கிறது. இந்தியா சார்பில் வைஷாலி(85 புள்ளி) பங்கேற்கிறார். முதல் சுற்றில் வைஷாலி, பல்கேரியாவின் சலிமோவாவை வென்றார்.இதில் 'டாப்-2' இடம் பெறுபவர்கள், கேண்டி டேட்ஸ் தொடரில் (உலக கோப்பை தகுதி போட்டி) பங்கேற்க தகுதி பெறலாம்.இரண்டாவது சுற்றில் வைஷாலி, ஜார்ஜியாவின் லேலாவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் வைஷாலி. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இவர், போட்டியின் 39 வதுநகர்த்தலில் வெற்றி பெற்றார். இரண்டு சுற்று முடிவில் தலா இரு புள்ளி பெற்ற சீனாவின் டான்ஜோங்கி, வைஷாலி 'டாப்-2' இடத்தில் உள்ளனர். ஆண்கள் கிராண்ட் செஸ் தொடரின் 10வதுசீசன் 6 தொடர் முடிவில், புள்ளிப்பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறலாம்.இதன் இரண்டாவது தொடர் ருமேனியாவில் நடக்கிறது.இந்தியாவின் பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் குகேஷ், அமெரிக்காவின் சோ வெஸ்லே, பேபியானோ காருணா உட்பட 10பேர் பங்கேற்கின்றனர்.முதல் சுற்றில் இந்திய வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா மோதினர். இப்போட்டி முடிவில் 35 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
பாட்மின்டன் 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் சீனதைபேயில்நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி மோதினர். இதில் ஆயுஷ் ஷெட்டி 21,16,15,21,21,17 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் 13,21,9,21 என இந்தோனேஷியாவின் முகமது ஜாகி உபைதில்லாவிடம் தோல்வியடைந்தார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சீனதைபேயின் லின் சிஹ்யுன் மோதினர்.உன்னதி 21-12, 21-7 என வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். வில்வித்தை உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 சீனாவின் ஷாங்காய் நகரில்பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு போட்டி காலிறுதியில் இந்தியாவின் மதுரா,ஜோதி மோதினர். இதில் மதுரா 142,141 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் ரிஷாப், டென்மார்க்கின் மதியாஸ் மோதினர். இப்போட்டி 147–147 என சமன் ஆனது. பின்நடந்த 'ஷூட் ஆப்பில்' ரிஷாப் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். பெண்களுக்கான பிரிவில் தீபிகாகுமாரி, அன்கிதா, அன்ஷிகா இடம்பெற்ற இந்திய அணி, நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்றது. இதில் மெக்சிகோவிடம், 'ஷூட் ஆப்' முறையில் 4-5 எனதோற்று வெளியேறியது. கிரிக்கெட் ஐந்து முறை கோப்பை வென்ற சென்னை அணி, இம்முறை சறுக்கியது. அடுத்த ஆண்டுக்கான சிறந்த அணியை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. எஞ்சிய போட்டிகளில் இளம்வீரர்களுக்குவாய்ப்பு அளிக்கப்படலாம். அஷ்வின், விஜய் சங்கர்,ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா போன்ற அனுபவ வீரர்கள் ஏமாற்றினர்.இளம் நட்சத்திரங்களான ஆயுஷ் மாத்ரே,டிவால்ட் பிரவிஸ், உர்வில் படேல் நம்பிக்கை தந்தனர். அதிரடியாக பேட் செய்து, சென்னை அணிக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருப்பதை உறுதி செய்தனர்.