சதுரகிரி அருள்மிகு சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலுக்கு தாணிப்பாறை பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தாணிப்பாறை பீட் மலைப்பகுதியில் 10.08.2026 அன்று காட்டுத்தீ பரவியது. தற்போது அந்தத் தீ முழுவதும் அணைக்கப்பட்டுவிட்டது என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே 12.08.2026 மற்றும் 13.08.2026 ஆகிய இரண்டு நாட்கள் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோயில் செல்வதற்கு தாணிப்பாறை பாதை வழியாக மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S.,அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
0
Leave a Reply