விராத் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் .
களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் கோலி 2016-19 காலக்கட்டத்தில் ரன் மழை பொழிந்தார். சமீபத்திய போட்டிகளில் 'ஆப்-ஸ்டம்ப்பிற்கு' வெளியே வீசும் பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். இவரது பலவீனம் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அம்பலமானது. இதையடுத்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்தார்.வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவரது சேவை, அணிக்கு தேவை என இந்திய கிரிக்கெட் போர்டு கருதியது. இதனால், ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டது.
இந்த சமயத்தில் டெஸ்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டியில் இருந்து கோலியும் நேற்று விடைபெற்றார். இது, இந்திய அணியில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. டெஸ்ட் அரங்கில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் பட்டியலில் கோலி முதலிடம். இதுவரை 68 டெஸ்டில், 5864 ரன் (20 சதம், 18 அரைசதம்) குவித்துள்ளார்.
இந்திய கேப்டன் பட்டியலில் டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றி பெற்றுத் தந்த விராத் கோலி முதலிடம். இவரது தலைமையிலான இந்திய அணி, 68 டெஸ்டில், 40 வெற்றி (58.82% வெற்றி சதவீதம்), 11 'டிரா', 17 தோல்வியை பதிவு செய்துள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் தோனி (27 வெற்றி, 60 டெஸ்ட்), கங்குலி (21 வெற்றி, 49 டெஸ்ட்) உள்ளனர். * கோலி தலைமையில் இந்திய அணி, 43 மாதம் (2016 அக்., -2020 மே) டெஸ்ட் அணி தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தில் இருந்தது
0
Leave a Reply