வில்வித்தை .may10 th and 11th
உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 2 சீனாவின் ஷாங்காய் நகரில் , பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு, அரையிறுதியில் இந்தியாவின் மதுரா,துருக்கி யின் ஹசல் போருனை 143-141 என வீழ்த்தினார்.
பைனலில் மதுரா, அமெரிக்காவின் கார்சனை சந்தித்தார். மதுரா 139-138 என வெற்றி பெற்று, உலக கோப்பை வில்வித்தையில் முதல் தங்கம் கைப்பற்றினார்.
காம்பவுண்டு ஆண்கள் அணிகளுக்கான பைனலில் அபிஷேக் வர்மா, ரிஷாப் யாதவ், ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற இந்திய அணி, செபாஸ்டியன், லுாயிஸ், ரோட்ரிகோ அடங்கிய மெக்சிகோ அணியை சந்தித்தது. இதில் இந்திய அணி 232-228 என வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது.
பெண்களுக்கான பைனலில் மதுரா, ஜோதி, சிகிதா இடம் பெற்ற இந்திய அணி, 222-234 என மெக்சிகோவிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. கலப்பு அணி போட்டியில் இந்தியாவின் மதுரா, அபிஷேக் ஜோடி, 144– 142 ,வெண்கலம் வசப்படுத்தியது.
உலக கோப்பை வில்வித்தை 'ஸ்டேஜ்-2' சீனாவின் ஷாங்காய் நகரில்,பெண்கள் தனிநபர் 'ரிகர்வ்' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் - தீபிகா குமாரி, தென் கொரியாவின் லிம் சிஹியோன் -மோதினர். இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என, 7 பதக்கம் கிடைத்தது.
0
Leave a Reply