சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் 6 கட்டமாக நடத்தப்பட்ட பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ்தொடரில், வைஷாலி 'டாப்-2' இடத்தில் உள்ளார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ்,6வது தொடர் ஆஸ்திரியாவில் நடக்கிறது. இந்தியா சார்பில் வைஷாலி(85 புள்ளி) பங்கேற்கிறார். முதல் சுற்றில் வைஷாலி, பல்கேரியாவின் சலிமோவாவை வென்றார்.இதில் 'டாப்-2' இடம் பெறுபவர்கள், கேண்டி டேட்ஸ் தொடரில் (உலக கோப்பை தகுதி போட்டி) பங்கேற்க தகுதி பெறலாம்.
இரண்டாவது சுற்றில் வைஷாலி, ஜார்ஜியாவின் லேலாவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் வைஷாலி. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இவர், போட்டியின் 39 வதுநகர்த்தலில் வெற்றி பெற்றார். இரண்டு சுற்று முடிவில் தலா இரு புள்ளி பெற்ற சீனாவின் டான்ஜோங்கி, வைஷாலி 'டாப்-2' இடத்தில் உள்ளனர்.
ஆண்கள்
கிராண்ட் செஸ் தொடரின் 10வதுசீசன் 6 தொடர் முடிவில், புள்ளிப்பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறலாம்.இதன் இரண்டாவது தொடர் ருமேனியாவில் நடக்கிறது.இந்தியாவின் பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் குகேஷ், அமெரிக்காவின் சோ வெஸ்லே, பேபியானோ காருணா உட்பட 10பேர் பங்கேற்கின்றனர்.முதல் சுற்றில் இந்திய வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா மோதினர். இப்போட்டி முடிவில் 35 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
0
Leave a Reply