MAY 8TH விளையாட்டு போட்டிகள்
பாட்மின்டன்
'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் சீனதைபேயில்நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி மோதினர். இதில் ஆயுஷ் ஷெட்டி 21,16,15,21,21,17 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் 13,21,9,21 என இந்தோனேஷியாவின் முகமது ஜாகி உபைதில்லாவிடம் தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சீனதைபேயின் லின் சிஹ்யுன் மோதினர்.உன்னதி 21-12, 21-7 என வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
வில்வித்தை
உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 சீனாவின் ஷாங்காய் நகரில்பெண்களுக்கான காம்பவுண்டு தனிநபர் பிரிவு போட்டி காலிறுதியில் இந்தியாவின் மதுரா,ஜோதி மோதினர். இதில் மதுரா 142,141 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் ரிஷாப், டென்மார்க்கின் மதியாஸ் மோதினர். இப்போட்டி 147–147 என சமன் ஆனது. பின்நடந்த 'ஷூட் ஆப்பில்' ரிஷாப் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான பிரிவில் தீபிகாகுமாரி, அன்கிதா, அன்ஷிகா இடம்பெற்ற இந்திய அணி, நேரடியாக இரண்டாவது சுற்றில் பங்கேற்றது. இதில் மெக்சிகோவிடம், 'ஷூட் ஆப்' முறையில் 4-5 எனதோற்று வெளியேறியது.
கிரிக்கெட்
ஐந்து முறை கோப்பை வென்ற சென்னை அணி, இம்முறை சறுக்கியது. அடுத்த ஆண்டுக்கான சிறந்த அணியை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. எஞ்சிய போட்டிகளில் இளம்வீரர்களுக்குவாய்ப்பு அளிக்கப்படலாம். அஷ்வின், விஜய் சங்கர்,ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா போன்ற அனுபவ வீரர்கள் ஏமாற்றினர்.இளம் நட்சத்திரங்களான ஆயுஷ் மாத்ரே,டிவால்ட் பிரவிஸ், உர்வில் படேல் நம்பிக்கை தந்தனர். அதிரடியாக பேட் செய்து, சென்னை அணிக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருப்பதை உறுதி செய்தனர்.
0
Leave a Reply