விளையாட்டு போட்டிகள் 3.10.2025
புனே அணி, சென்னையில் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூருவை 'டை பிரேக்கரில்' வீழ்த்தியது.
தேசிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவு டில்லியில் ,அரையிறுதியில் தமிழக வீரர் மணிஷ் 1-6, 6-1, 7-6 என்ற செட் கணக்கில் ரயில்வே அணியின் நிதின் குமார் சின்ஹாவை வீழ்த்தினார்.
ஜூனியர் பெண்கள் (21 வயது) ஹாக்கி 5வது போட்டியில் கான்பெராவில், இந்திய அணி 4-5 என்ற கோல் கணக்கில் கான்பெரா சில் அணியிடம் தோல்வியடைந்தது.
சீனியர் பெண்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சட்டீஸ்கரில் மோனிஷா 2 கோல் அடித்து கைகொடுக்க தமிழக அணி 2-0 என, சட்டீஸ்கரை வீழ்த்தியது.
இரட்டையர் பிரிவு சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின் மானவ் தாக்கர், மானுஷ் ஷா ஜோடி 1-3 (6-11, 7-11, 11-9, 9-11) என, சீனாவின் ஜோ கிஹாவோ, சென் ஜுன் சாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
0
Leave a Reply