கிரிக்கெட் முதல் டெஸ்ட் ஆமதாபாத்தின் மோடி மைதானத்தில் நடக்கிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் முதல் நாள் முடிவில் 121/2 ரன் எடுத்து, 41 ரன் பின்தங்கியிருந்தது.நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஒரு பக்கம் அனுபவ மில்லா, வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் கைவலிக்க பந்துவீசுவதும் மறுபக்கம் நல்ல 'பார்மில்' உள்ள இந்திய பேட்டர்கள் சிறப்பாக ஆடுவதும் தொடர்ந்தது.
கே.எல்.ராகுல், கேப்டன் சுப்மன் கில், மூன்றாவது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்தனர். அடுத்து களம் இறங்கிய ராகுல் 100 ரன்னும், ஜுரல் 125, ரன்னும், ஜடேஜா 104 ரன்னும் எடுத்து மூன்று சதத்தை கொண்டாடினர்.
286 ரன் முன்னிலையில் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 448/5 ரன் எடுத்தது.
விரைவாக ரன் சேர்த்தால், இன்று இந்திய பேட்டர்கள் இன்னிங்ஸ் வெற்றி பெறலாம்.
0
Leave a Reply