மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாராட தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாராட தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் டில்லியில்,பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் ('டி12') தகுதிச் சுற்றில் இந்தியாவின் சிம்ரன் சர்மா பங்கேற் றார். இலக்கை 12.13 வினாடியில் கடந்த இவர், முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார். இன்று அரையிறுதி நடக்கிறது.
இந்தியாவின் ஷர்மிளா பெண்களுக்கான குண்டு எறிதல் (‘எப்57') பைனலில் பங்கேற்றார். அதிகபட்சமாக 10.03 மீ., குண்டு எறிந்த இவர், 5வது இடம் பிடித்தார்.
இந்திய வீராங்கனை அமிஷா ரவாத்,குண்டு எறிதல் 'எப்46' பிரிவு பைனலில் விளையாடி 10.11 மீ., எறிந்து 9வது இடம் பிடித்தார்.
இந்தியா சார்பில் ஹேனி ஆண்களுக்கான வட்டு எறிதல் ('எப்37') பைனலில் களமிறங் கினார். அதிகபட்சமாக 51.22 மீ மட்டும் வட்டு எறிந்த இவர், 4வது இடம் பிடித்தார்.
0
Leave a Reply