உலக பாரா தடகளத்தில் சிம்ரன், நிஷாத் ‘தங்கம் வென்றனர்.பதக்கப் பட்டியலில் 4வது இடம்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன் ஷிப் 12வது சீசன் டில்லியில் ,பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் (டி 12, பார்வைக் குறைபாடு) பைனல் நடந்தது. இந்தியாவின் சிம்ரன் சர்மா 11.95 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப் பற்றினார். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் சிம்ரன் வென்ற இரண்டாவது தங்கம் (2024, 2025) இது.
இந்தியாவின் நிஷாத் குமார் (டி 47, வலது கை பாதிப்பு ) ஆண்களுக்கான (2.14 மீ.,) உயரம் தாண்டுலில் தங்கம் வென்றார்.
இந்தியாவின் பிரீத்தி பெண்களுக்கான (டி 35) 200 மீ., ஓட்டத்தில் (30.03 வினாடி), இந்தியாவின் பர் தீப் குமார் (46.63 மீ.,), ஆண்க ளுக்கான வட்டு எறிதலில் (எப் 64) வெண்கலப் பதக்கம் வென்றனர்.
உலக பாரா தடகளத்தில் நேற்று ஒரே நாளில் இந்தியா 2 தங்கம், 2 வெண்கலம் என 4 பதக்கம் வென்றது.
இதுவரை இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கம் வென்று, பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.
0
Leave a Reply