இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் ஆமதாபாத்தில் இன்றுதுவங்குகிறது.
இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் இன்று துவங்குகிறது.
அணியில் பல்வேறு மாற்றங்கள் வந்து விட்டன. ரோகித், கோலி, சுழல்ஜாம்பவான் அஷ்வின் ஓய்வு பெற்று விட்டனர்.சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியினர் செயல்பட சிறப்பாக காத்திருக்கின்றனர் புதிய கேப்டன் சுப்மன் கில், தலைமையில் இந்திய அணி, வழக்கம் போல ஆதிக்கம்செலுத்துகிறது. இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் (2-2) செய்தது.
0
Leave a Reply