இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., கிரிக்கெட்உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன்இன்று துவங்குகிறது.
ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, இங்கிலாந்துஎன, மொத்தம் 8 அணிகள்பங்கேற்கின்றன.ஒவ்வொருஅணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் போட்டியில் விளையாடும்.லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (அக். 29, 30) முன்னேறும். இதில் வெற்றி பெறும் அணிகள், நவ. 2ல் நடக்கவுள்ள பைனலில் விளையாடும்.
இந்திய அணி, தனது முதல் போட்டியில் (இடம்: கவுகாத்தி) இன்று இலங்கையை சந்திக்கின்றது. அதன்பின் பாகிஸ்தான் (அக். 5, கொழும்பு), தென் ஆப்ரிக்கா (அக். 9, விசாகப்பட்டனம்), ஆஸ்திரேலியா (அக். 12, விசாகப்பட்டனம்), இங்கிலாந்து (அக். 19, இந்துார்), நியூசிலாந்து (அக். 23, நவி மும்பை), வங்கதேசத்தை (அக். 26, நவி மும்பை) எதிர்கொள்கிறது.
இந்திய அணிக்கு சாதகமாக சொந்த மண்ணில் ஹர் மன்பிரீத் கவுர் தலைமையில் உலகின் 'நம்பர் -3' இந்திய அணி,களமிறங்குகிறது.
0
Leave a Reply