இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான12வது சீசன் உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப்பில்இந்தியா இரண்டு பதக்கம் வென்றது.
மாற்றுத்திறனாளிகளுக் கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன்இந்தியாவில் நேற்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப். 46 பிரிவு பைனல் நடந்தது. இந்தியாவின் ரிங்கு சிங், நான்காவது வாய்ப்பில் அதிகபட்சம் 66.37 மீ., எறிந்து, சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
இப்பிரிவில் உலக சாதனை (2023ல்) படைத்த இந்தியாவின் சுந்தர் சிங் குர் ஜார், ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சம் 64.76 மீ., துாரம் எறிந்தார். இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிவென்றார்.
இந்தியாவின் தயவந்தி.பெண்களுக்கான 64 வட்டு எறிதலில் 27.94 துாரம் எறிந்துநான்காவது இடம் பெற, வெண்கல வாய்ப்பு நழுவி, ஆசிய அளவில் இது சிறந்த தூரம் ஆனது. ஆண்கள் குண்டு எறிதல் (எப் 40) போட்டியில் ரஷ்யாவின் டெனிஸ் ஜினெஸ்டிலவ், 3, 4வது வாய்ப்பில் 11.85, 11.92 மீ., துாரம் எறிந்து அடுத்தடுத்து புதிய உலக சாதனை படைத்து, தங்கம் வென்றார்.
0
Leave a Reply