விளையாட்டு போட்டிகள் .30 th SEPTEMBER-2025
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 4x100 மீ., தொடர் ஓட்டத்தில் பவித்ரா, நந்தினி, அக்சயா, ஏஞ்சல் சில்வியா அடங்கிய தமிழக பெண்கள் அணி (45.76 வினாடி) வெண்கலம் வென்றது.
ஜூனியர் பெண்கள் ஹாக்கி 3வது போட்டிகான்பெராவில், இந்திய அணி 1-0 என ஆஸ்திரேலியாவை (21 வயது) வீழ்த்தி, முதல் வெற்றி பெற்றது. இந்திய அணிக்குசிவாச் (32வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.
இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜப்பானின் டகேரு யூஜுகி ஜோடி ஜப்பான் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் 4-6, 6-3, 18–16 என அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன், இவான் கிங் ஜோடியை வீழ்த்தியது.
இந்தியாவின் அபய் சிங் ,கத்தார் கிளாசிக் ஸ்குவாஷ் 'ரவுண்டு - 16' போட்டியில் 2-3 (13-11, 5-11, 11-5, 3-11, 3-11) என எகிப்தின் பேர்ஸ் டெசவுகியிடம் போராடி தோல்வியடைந்தார்.
டென்னிஸ் 'பிளே-ஆப்'.'பில்லி ஜீன் கிங்' கோப்பை போட்டியில் (நவ.14-16, பெங்களூரு) பங்கேற்கும் இந்திய அணிக்கு சஹாஜா, ஸ்ரீவள்ளி, அங்கிதா ரெய்னா, ரியா பாட்யா, பிரார்த்தனா தேர்வாகினர். வைதேகி சவுத்ரி மாற்று வீராங்கனையாக இடம் பிடித்தார்.
0
Leave a Reply