25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ராஷ்மிகா-கபில் ஜோடிஉலக துப்பாக்கி சுடுதலில்  'தங்கம், வென்றனர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஷ்மிகா-கபில் ஜோடிஉலக துப்பாக்கி சுடுதலில்  'தங்கம், வென்றனர்

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ் டல' / 'ஷாட்கன்') தொடர் டில்லியில்,  10 மீ., ''ஏர் பிஸ்டல்' கலப்பு அணிகளுக்கான தகுதிச் சுற்றில் இந்தியாவின் ராஷ்மிகா சாகல் - கபில் (582.15 புள்ளி), வன்ஷிகா சவுத்ரி - ஜோனாதன் கவின் ஆண்டனி (578.20) ஜோடிகள்முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.

பைனலில் ராஷ்மிகா -கபில் ஜோடி 16-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம், வன்ஷிகா - ஜோனா தன் ஜோடி வெள்ளி வென்றனர். 

இந்தியாவின் பெண்களுக்கான 'ஸ்கீட்' பிரிவு தகுதிச் சுற்றில் மான்சி ரகுவன்ஷி (117 புள்ளி), தில்லான் ரைசா (112.6), அக்ரிமா கன்வார் (111) முறையே 1, 3, 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். அடுத்து நடந்த பைனலில் தில் லான் ரைசா, 51 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.மான்சி (41) வெண்கலம் கைப்பற்றினார்.

இந்தியா இதுவரை 3 தங்கம்,5 வெள்ளி, 3 வெண்கலம் என, 11 பதக்கம் கைப்பற்றிமுதலிடத்தில் நீடிக்கிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News