சோயா தயிர் கிரேவி
தேவையான பொருட்கள் - தயிர் 1 கப், சோயா 1 கப், வெங்காயம் 1 பொடியாக வெட்டியது, மல்லித்தூள் 1 ஸ்பூன், மிளகாய் தூள் ஒன்றரை ஸ்பூன், கடலை மாவு 2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் அரை சிட்டிகை, கரம் மசாலா தூள் அரை ஸ்பூன், பேஸ்ட் 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு. பட்டை, கிராம்பு, ஏலக்காய் 1, சீரகம் சிறிதளவு, வெண்ணெய் 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன், மல்லி தழை சிறிதளவு.
செய்முறை -ஒரு மிக்ஸிஜாரில் தயிர், வெங்காயம், மல்லித்தூள், மிளகாய்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வழுவழுவென்று அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியில் தேங்காய் எண்ணெய், வெண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பெருஞ்சீரகம், சேர்த்து நன்றாக வதக்கவும். பின் அரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கி, கடலை மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து விட்டு இதை 5 முதல் 7 நிமிடம் மூடி வைக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், வெண்ணீரில் ஊற வைத்த சோயாவை பிழிந்து சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு, மல்லி இலை சேர்த்து இறக்கி வைக்கவும். சோயா தயிர் கிரேவி தயார்.
0
Leave a Reply