ஜோகோவிச் ஒரு சீசனின் யு.எஸ்., ஓபன்: 4 கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் காலிறுதிக்கு முன்னேறிய மூத்த வீரரானார்.
யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின்ஜான்லெனார்டு ஸ்டிரப் மோதினர். போட்டியின் போது கழுத்து, வலது தோள்பட்டைபகுதியில் ஏற்பட்ட வலிக்கு முதலுதவி எடுத்துக் கொண்ட ஜோகோவிச் 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். கிராண்ட் ஸ்லாம் அரங்கில் 64வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார். தவிர இவர், ஒரு சீசனின் 4 கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் காலிறுதிக்கு முன்னேறிய மூத்த வீரரானார்.
உலகின் 'நம்பர்-1' பெலா ரசின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சா
பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் மோதினர்.இதில் 6-1, 6-4 சபலென்கா என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-1, 6-2 என, சகவீராங்கனை ஆன்லியை மற்ற 4வது சுற்று போட்டிகளில் வீழ்த்தினார். செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா 1–6, 7–6, 6-3 என, அமெரிக்காவின் டெய்லர்டவுன்சென்ட்டை தோற்கடித்தார்.
0
Leave a Reply