25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


விளையாட்டு (SPORTS)

Sep 08, 2025

அரினா சபலென்காவுக்கு  யு.எஸ்., ஓபன் டென்னிசில் கோப்பையுடன், ரூ.44 கோடி பரிசு வழங்கப்பட்டது.

நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் - டென்னிஸ் தொடர் நியூயார்க்கில், பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் 'நம்பர்-1' - பெலாரசின் அரினா சப லென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா ('நம்பர் -9) மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய சபலென்கா, 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 7-6 என வென்றார்.6-3, 7-6 ஒரு மணி நேரம், 34 நிமிடம் நீடித்த போட்டி யில் சபலென்கா 6-3, 7-6, என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று,  சாம்பியன் பட்டத்தை யு. எஸ்., ஓபனில் தொடர்ந்து 2வது முறையாக வென்ற,சபலென்காவுக்கு கோப்பையுடன், ரூ.44 கோடி பரிசு வழங்கப்பட்டது. 

Sep 08, 2025

இந்தியா ஆசிய ஹாக்கி சாம்பியன் பைனலில் தென் கொரியாவைவென்று பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

ஆசிய கோப்பை ஹாக்கி பீஹாரின் ராஜ்கிர் நகரில் ,நேற்று நடந்த  12வது சீசன் பைனலில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. ஆட்டம் துவங்கிய 31வது வினாடியில் ஒரு கோல் அடித்த சுக்ஜீத் சிங் இந்தியாவுக்கு விரைவாக முன்னிலை பெற்றுத்தந்தார்.இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 8 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.ஆசிய கோப்பை வென்ற இந்தியா, அடுத்த ஆண்டு (ஆக. 14-30) பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

Sep 08, 2025

தமிழக வீராங்கனை வைஷாலி கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்று, 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

 'பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி தொடர் ஓபன் மற்றும் பெண்கள் என இரு பிரிவில் நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள், அடுத்த ஆண்டு நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.நேற்று முன்தினம் இரவு நடந்த ஓபன் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த குகேஷ், ஸ்பெனின் டேனியல் யூபாவை எதிர்கொண்டு ஆடிய குகேஷ் 35-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி 65-வது நகர்த்தலில் ஆன்டன் டெம்சென்கோவை (சுலோவேனியா) வென்றார். தமிழக வீரர்பிரக்ஞானந்தா 65-வது நகர்த்தலில் போரிஸ் ஜெல்பாண்டை (இஸ்ரேல்) தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றார். விதித் குஜ ராத்தி (இந்தியா)- அலெக்சாண்டர் பிரெட்கே (செர்பியா), கார்த்தி கேயன் முரளி-திவ்யா தேஷ்முக் (இருவரும் இந்தியா) இடையிலான ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.தமிழக வீராங்கனை ஆர்.வைஷாலி ,பெண்கள் பிரிவின் 3-வது சுற்றில் 38-வது நகர்த்த லில் ஒல்கா படேல்காவை (ஆஸ்திரியா) தோற்கடித்து , வெற்றியை பதிவு செய்தார். அத்துடன் அவர் தனது பிரிவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். 

Sep 06, 2025

இந்திய வீராங்கனைகள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில்  அபாரம்.

உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தின் லிவர் பூல் நகரில்,  65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில்10 வீரர், 10 வீராங்கனைகள் என மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் சாக்சி சவுத்ரி  பெண்களுக்கான 54 கிலோ எடைப் பிரிவு முதல் சுற்றில் சீனியர் அரங்கில் களமிறங்கிய உக்ரைனின் விக்டோரியாவை எதிர் கொண்டார். முதல் சுற்றில் சாக்சி முன்னிலை பெற்றார்.  விக்டோரியா இரண்டாவது சுற்றில் சாக்சியின் குத்துக்களை சமாளிக்க முடியாமல் திணறினார் போட்டியை நிறுத்திய நடுவர்கள், சாக்சி வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

Sep 06, 2025

வெற்றியுடன் துவக்கிய இந்திய பெண்கள் ஹாக்கி அணி.

 பெண்களுக்கான ஆசிய கோப்பையில் ,ஹாக்கி தொடரை இந்திய பெண்கள் அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 11-0 என, தாய்லாந்தை வீழ்த்தியது.பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் சீனாவின் ஹாங்சோவ் நகரில்,  நடக்கிறது.‘நடப்பு சாம்பியன்' ஜப்பான், இந்தியா, சீனா உள்ளிட்ட 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'ஏ' பிரிவில் சீனா, சீனதைபே, மலேசியா, தென் கொரியா, 'பி' பிரிவில் இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' லீக் போட்டியில், உலகின் 'நம்பர் -9' இந்தியா, தாய்லாந்து (30வது இடம் அணிகள் மோதின.துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள் ,ஆட்டநேர முடிவில் 11-0 என்ற கணக்கில்  வெற்றி பெற்றனர்.

Sep 06, 2025

'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடரில் வைஷாலி வெற்றி பெற்றார்.

உஸ்பெகிஸ்தானில் 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானில் , 'டாப்-2' இடம் பெறும்வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம். இந்தியாவின் வைஷாலி, நெதர்லாந்தின் எலைன் ரோபெர்சை எதிர் கொண்டார். வைஷாலி, 22 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

Sep 05, 2025

'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடரில் குகேஷ், வைஷாலி வெற்றி !

உஸ்பெகிஸ்தானில் 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் நேற்று உஸ்பெகிஸ்தானில் 'டாப்-2' இடம் பெறும் வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள 'கேண்டி டேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம். இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ்,  உலக கோப்பை  வென்ற திவ்யா, பிரக்ஞானந்தா உட்பட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். முதல் சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. குகேஷ், பிரான்சின் பாக்ராட்டை எதிர்த்து, விளையாடிய குகேஷ், 45வது நகர்த்தலில் வெற்றி.அமெரிக்காவின் ஜெப்ரி ஜியாங், இந்தியாவின் பிரக்ஞானந்தா,  மோதி ,விளையாடிய பிரக்ஞானந்தா, 31வது நகர்த்தலில் ''டிரா' செய்தார். இந்தியாவின் வைஷாலி, பெண்கள் பிரிவில், உஸ்பெகிஸ்தானின் குல்ருக்பெஹினை சந்தித்து,விளையாடிய வைஷாலி, 56 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 

Sep 05, 2025

சீனாவில் சர்வதேச மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதியில் தான்யா.

 சர்வதேச மாஸ்டர்ஸ் சர்வதேச மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் சீனாவில் ,சர்வதேச மாஸ்டர்ஸ். 2வது சுற்றில்  இந்தியாவின் தான்யா ஹேம்நாத், தைவானின் யு வெய் ஹுவாங்கை எதிர்கொண்டார்.முதல் செட்டில் தான்யா 11-12 என பின்தங்கினார். அடுத்து தான்யா, தொடர்ந்து 10 புள்ளி எடுக்க, முதல் செட்டை 21-12 வசப்படுத்தினார். 2வது செட்டிலும் 5–10 என பின்தங்கிய தான்யா, பின் 21-18 என கைப்பற்றி னார். முடிவில் தான்யா 21-12, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். 

Sep 05, 2025

ஆசிய கோப்பை கால்பந்து தொடர்  இந்தியா வெற்றி .

23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர்,  சவுதி அரேபியாவில் ,வரும் 2026, ஜன. 7-25 நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் 44 அணிகள் பங்கேற்கின்றன. 11 இடங்களில் போட்டிகள் நடக்கின்றன. இந்திய அணி 'எச்' பிரிவில் கத்தார், பஹ்ரைன், புருனேய் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.இப்போட்டிகள்  கத்தாரின் தோகாவில் நடக்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் பஹ்ரைனை சந்தித்தது.  இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

Sep 05, 2025

ஆசிய கோப்பை ஹாக்கி.

ஆசிய கோப்பை ஹாக்கி சீனாவின் ஹாங்சோவ் ,11வது சீசன்இன்று துவங்குகிறது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஜப்பான், மலேசியா உள்ளிட்ட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் விளை யாடுகின்றன.ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஒவ்வொரு அணி யும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை 'ரவுண்டு-ராபின்' முறையில் மோதும். முடிவில் 'டாப்-2' இடம் பிடிக்கும் அணிகள் பைனலில் (செப். 14) விளையாடும். 

1 2 ... 33 34 35 36 37 38 39 ... 96 97

AD's



More News