விளையாட்டு போட்டிகள் . 3rd SEPTEMBER 2025
இன்று 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர்உஸ்பெகிஸ்தானில் துவங்குகிறது. இதில் 'டாப்-2' இடம் பெறும் வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங் கேற்க தகுதி பெறலாம். இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா உட்பட 10 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் வைஷாலி, ஹரிகா, வந்திகா விளையாட உள்ளனர்.
செப். 7ல் டில்லியில் தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் தொடர், 13 ஆண்டுக்குப் பின் துவங்குகிறது. நடப்பு தேசிய சாம்பியன் தியா, காமன்வெல்த்தில்தங்கம் வென்ற சத்யன், ஹர்மீத் தேசாய் உட்பட மொத்தம் 2958 பேர் பங்கேற்கின்றனர். டில்லியின் மணிகா பத்ரா, சர்வதேச அட்டவணை காரணமாக இதில் பங்கேற்கவில்லை.
இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட்போர்டு 'ஸ்பான்சர்' ஒப்பந்தத்தில் இருந்து 'டிரீம் லெவன்' விலகியது. விண்ணப்பங்களை சமர்பிக்க செப். 16, கடைசி தேதியாக, அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய 'ஸ்பான்சர்' ஏல அறிவிப்பு வெளியானது.
இந்தியா சார்பில் 'சீனியர்' பிரிவில் பங்கேற்ற நிஷா, சம்ருதி,ஹங்கேரியின் புடாபெஸ்டில் ரிதமிக் ஜிம்னாஸ்டிக் 6,7வது இடம் பிடித்தனர் .
0
Leave a Reply