25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


விளையாட்டு (SPORTS)

Jul 05, 2025

கிராண்ட் செஸ் மூன்றாவது தொடரில் குகேஷ் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தார்.

 குரோஷியாவில் கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது மூன்றாவது தொடர். உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' முறையில் போட்டி நடக்கிறது.4, 5வது சுற்றில் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக், அமெரிக்காவின் பேபியானோவை வென்றார்.6வது சுற்றில் குகேஷ், கார்ல்சனை எதிர்கொண்டார். குகேஷ், துவக்கத்தில் பின் தங்கினார். 35வது நகர்த்தலில் கார்ல்சன் செய்த தவறை பயன்படுத்திய குகேஷ், ஆதிக்கம் செலுத்தினார்.வேறு வழியில்லாத நிலையில் 49 நகர்த்தலில் கார்ல்சன் தோல்வியை ஒப்புக் கொண்டார். இத்தொடரில் குகேஷ் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தார்.முன்னதாக நடந்த பிரக்ஞானந்தா-கார்ல்சன் மோதல், 74வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முதல் 6 சுற்று முடிவில் குகேஷ் (10 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். போலந்தில் ஜான் டுடா (8), அமெரிக்காவின் வெஸ்லே (7.0), கார்ல்சன் (6.0) அடுத்த 3 இடத்தில் உள்ளனர். பிரக்ஞானந்தா (5.0) 7வது இடத்துக்கு முன்னேறினார்.செஸ் பெண்கள் உலக கோப்பையில் (ஜூலை 5-29) ஜார்ஜியாவில், இந்தியாவின் ஹம்பி, ஹரிகா, வைஷாலி, திவ்யா, பத்மினி ராத் உள்ளிட்ட 9 பேர் பங்கேற்கின்றனர். 

Jul 05, 2025

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிஇங்கிலாந்து சென்று உள்ள இந்திய அணி, வலுவான முன்னிலை நோக்கி முன் னேறுகிறது. சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தினார் .இந்தியாவின் முகமது சிராஜ், டெஸ்ட் அரங்கில்  2வது முறையாக ஒரு இன்னிங்சில் 6 விக்கெட் சாய்த்தார். இதற்கு முன், கடந்த ஆண்டு கேப்டவுன் டெஸ்டில் (எதிர்: தென் ஆப்ரிக்கா) 9 ஓவரில், 15 ரன் விட்டுக் கொடுத்து, 6 விக்கெட் கைப்பற்றி, தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் 'தகுதிச்சுற்று 2'ல் டி.என்.பி.எல்., 'டி-தொடரின் 9வது 20' சீசன் திண்டுக்கல், சேப்பாக்கம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின் பீல்டிங் தேர்வு செய்தார். சேப்பாக்கம் அணி. 20 ஓவரில் 178/7 ரன் மட்டும் எடுத்தது. திண்டுக்கல் அணி 18.4 ஓவரில் 182/6 ரன் எடுத்து, 4 விக்கெட்டில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.

Jul 05, 2025

டென்னிஸ் ,& பளு தூக்குதல் .

டென்னிஸ் திருச்சியில் தேசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டி நேற்று நடந்தது.சென்னையின் தீப்தி வெங்கடேஷ், தனு ஸ்ரீ சதீஸ் ஜோடி, மேற்கு வங்காளத்தின் ரியா ராய், ' எந்திரக்ஷி பட்டாச்சார்யா ஜோடியை எதிர் கொண்டது. இதில் தமிழக ஜோடி, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் கோவர்தன் சுரேஷ், ஹர்ஷல் நிதன் ஜோடி, கர்நாடகாவின் இஷான் பதாகி, அர்ஜுன் சூரி ஜோடியிடம் 6-2, 4-6, 7-10 என்ற செட் கணக்கில்  வீழ்ந்தது.  பளு தூக்குதல் ., ஆசிய யூத், ஜூனியர் பளுதுாக்குதல் கஜகஸ்தானில்,  சாம்பியன் ஷிப் யூத் பெண்களுக்கான 44 கிலோ பிரிவில் , இந்தியாவின் புங்னிதாரா ,'ஸ்னாட்ச்' பிரிவில் 60, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 81 என, மொத்தம் 141 கி.கி., பளுதுாக்கிய புங்னிதாரா, 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் அதிக பட்சமாக 81 கி.கி., பளு துாக்கிய அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த புங்னிதாரா 17, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.  

Jul 04, 2025

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதல் இன்னிங்சில் 887 ரன் குவித்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்('ஆண்டர்சன் சச்சின் டிராபி') பங்கேற்கிறது.முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்ஹாமில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 310/5 ரன் எடுத்திருந்தது. சுப்மன் கில் (114), ஜடேஜா (41) அவுட்டாகாமல் இருந்தனர்.நேற்று,2ம் நாள் ஆட்டம் நடந்தது. வோக்ஸ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஜடேஜா. டெஸ்ட் அரங்கில் தனது 23வது அரைசதத்தை பதிவு செய்த ஜடேஜா, ஸ்டோக்ஸ் வீசிய 92வது ஓவரில் வரிசையாக2 பவுண்டரி அடித்தார். பஷிர் வீசிய 107வது ஓவரில் ஜடேஜா, கில் தலாஒரு சிக்சர் விளாச,13 ரன் கிடைத்தது. ஆறாவது விக்கெட்டுக்கு203 ரன் சேர்த்த போது ஜோஷ் டங் வீசிய 'பவுன்சரில்' ஜடேஜா (89) ஆட்டமிழந்தார்.ஏழாவது விக்கெட்டுக்கு144 ரன் சேர்த்த போது ஜோ ரூட்'சுழலில்' வாஷிங்டன் சுந்தர்(42) போல்டானார். அபாரமாக ஆடிய சுப்மன் கில் (269 ரன்,387 பந்து , 3x6, 30x4), ஜோஷ் டங் 'வேகத்தில்வெளியேறினார்.ஆறாவது விக்கெட்டுக்கு சுப்மன், ஜடேஜா ஜோடி 203 ரன் சேர்த்தது. இங்கிலாந்து மண்ணில் பேட்டிங் வரிசையில்6வது அல்லது அதற்கு கீழான இடத்தில் களமிறங்கி அதிக ரன் சேர்த்த 3வது இந்திய ஜோடியானது. கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார்., இந்திய அணி முதல் இன்னிங்சில் 887 ரன் குவித்தது.இளம் இந்திய அணி வெற்றி  19 வயதுக் குட்பட்ட இந்திய அணி,இங்கிலாந்து சென்று,5 போட்டி கொண்ட யூத் ஒருநாள் தொடரில் பங்கேற்க,முதல் இரு போட்டி முடிவில் தொடர் 1-1 என இருந்தது.மூன்றாவது போட்டி நார்தாம்ப்டனில் நடந்தது.மழை காரண மாக போட்டி தலா 40 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இங்கிலாந்து அணிக்கு டாகின்ஸ் (62),இசாக் (41) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. மேயஸ் (31), ஆல்பர்ட் (21) உதவி னர். கேப்டன் தாமஸ் ரியு (76) அவுட்டாகாமல் இருந்தார்.இங்கிலாந்து அணி40 ஓவரில்268/6 ரன்எடுத்தது. இந்தியா சார்பில் கனிஷ்க்3 விக்கெட் சாய்த்தார்.இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி,கேப்டன் அபிக்யான் (12) ஜோடி துவக்கம் தந்தது.சிக்சர் மழை பொழிந்த வைபவ், 20 பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 31 பந்தில்86 ரன்(9:6,6×4) எடுத்து அவுட்டானார். இந்திய அணி34.3 ஓவரில்274/6 ரன் எடுத்து,4 விக்கெட் டில் வெற்றி பெற்றது. தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.யூத் ஒருநாள் அரங்கில் (19 வயது ) ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என வைபவ் (9) சாதனை படைத்தார். 

Jul 04, 2025

கிராண்ட் செஸ் மூன்றாவது தொடரில் குகேஷ் பிரக்ஞானந்தாவை வென்றார் .

 10வது சீசன் (மொத்தம் 3 தொடர்). கிராண்ட் செஸ் தொடரின் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடக்கிறது.உலக சாம்பியன், இந்தியாவின்குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' முறையில் போட்டி நடக்கிறது.முதல் நாளில் 3 சுற்று நடந்தன. முதல் சுற்றில் குகேஷ், போலந்தின் ஜான்டுடாவிடம் தோல்வியடைந்தார். குகேஷ், அடுத்த சுற்றில் பிரான்சின் அலிரே சாவை வென்றார். 3வது சுற்றில் குகேஷ் - பிரக்ஞானந்தா மோதினார்.குகேஷ், 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.முதல் 3 சுற்று முடிவில் கார்ல்சன் (4.0), ஜான் டுடா (4.0), அமெரிக்காவின் வெஸ்லே (4.0), குகேஷ் (4.0) 'டாப் -4' இடங்களில் உள்ளனர். முதல் இரு சுற்றில் 'டிரா' செய்த பிரக்ஞானந்தா (2.0) கடைசி இடத்தில் (10) உள்ளார்.ஜூனியர் செஸ்: இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம்7 பதக்கம் கைப்பற்றியது. இந்தியா அபாரம்ஜார்ஜியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக் கான உலக கோப்பை ஜூனியர் ,சர்வதேச செஸ் கூட்ட மைப்பு ('பிடே') சார்பில் ('கேடட்') தொடர் நடந்தது.  10 வயதுக்கு உட்பட்டோருக்கான ஓபன் பிரிவில் பைனலில் இந்தியாவின் சர்பர்தோ மானி தங்கப்பதக்கம் வென்றார்.பெண்கள்பிரிவு.(10 வயது) பைனலில் இந்தியாவின் திவி பிஜேஷ், சீனாவின் ஜிஹான் செனை வீழ்த்தி, தங்கம் கைப்பற்றினார். வெண்கலப் பதக்கத்துக் கான போட்டியில் இந்தியாவின் ஷர்வானிகா (தமிழகம்), ரஷ்யாவின் வோல்கோவாவை வென்றார். 

Jul 03, 2025

தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி .JULY 2 ND

தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி .JULY 2 NDடி. என் பி.எல்., 'டி-20' தொடரின் 9வது சீசன் தமிழக கிரிக்கெட் சங் கத்தின் சார்பில் நடக்கிறது. தகுதிச்சுற்று 1ல் வெற்றி பெற்ற திருப்பூர் அணி பைனலுக்கு முன்னேறியது. நேற்று, திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் திண்டுக்கல், திருச்சி அணிகள் மோதின. திருச்சி அணி, 20 ஓவரில் 140/9 ரன் எடுத்தது, திண்டுக்கல் அணி 16.4 ஓவரில் 143/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நாளை நடக்கும் தகுதிச்சுற்று 2ல் சேப்பாக்கம் - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் இங்கிலாந்து,இந்திய அணி 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. நேற்று, 2வது டெஸ்ட் பர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் துவங்கியது.  இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (‘ஆண்டர்சன்-சச்சின் டிராபி) பங்கேற்கிறது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ், 'பவுலிங்' தேர்வு செய்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 310 ரன் எடுத்திருந்தது. சுப்மன் கில் (114), ஜடேஜா (41) அவுட்டாகாமல் இருந்தனர். 

Jul 03, 2025

விளையாட்டு போட்டிகள்.JULY 2ND

கால்பந்து 2026,மார்ச் 1/26ல் ஆஸ்திரேலியாவில்(12 அணிகள்) நடக்கவுள்ளபெண்களுக்கான ஆசிய கோப்பை கால் பந்து தொடரின். நடப்பு சாம்பியன் சீனா, தென்கொரியா,ஜப்பான், ஆஸ்திரேலியா என4 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன. மீதமுள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று நடக்கிறது. 34 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.தாய்லாந்து, மங்கோலியா, ஈராக், திமோர்-லெஸ்தே அணிகளுடன் இந்திய அணி'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டியில் மங்கோலியா(13,0), திமோர்லெஸ்தே(4,0) அணிகளை வென்ற இந்தியா, நேற்று மூன்றாவது போட்டியில் இராக்கை எதிர்கொண்டது. இந்திய அணி 5,0என்ற கோல் கணக்கில் இந்தியாவெற்றி பெற்றது. 3 போட்டியில் 9புள்ளியுடன் முதலிடத்தில் பட்டியலில் உள்ளது. ஜூலை 5ல் நடக்கவுள்ள கடைசி போட்டியில் தாய்லாந்தை(6) வென்றால்,22 ஆண்டுக்குப்பின் ஆசியகோப்பை தொடருக்கு தகுதி பெறலாம்.   வில்வித்தை,  ஆசிய 'பேர் பவ்' வில்வித்தை சாம்பியன் ஷிப்தாய்லாந்தின் பாங்காக்கில் இன்று துவங்கி. ஜூலை6 வரைநடக்கவுள்ளது. இத்தொடரில் ஜப்பான், இந்தியா, மலேசியா, சீனா உட்பட 13 நாடுகளை சேர்ந்த 407 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில்,சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு, சேலம், விநாயகா மிஷன் கல்லூரி மாணவர் சஞ்சய் உட்பட 7 பேர் கலந்து கொள்கின்றனர். துப்பாக்கி சுடுதல், டேராடூனில் நடந்ததுப்பாக்கி சுடுதல் தேசிய தகுதி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அஞ்சும், சவுரப் சவுத்தரி, மெகுலி கோஷ் ஆகியோர் மீண்டும்  தேர்வாகி இந்தியாவுக்காக விளையாட உள்ள னர். பாட்மின்டன் இந்தியாவின் ஸ்ரீகாந்த்  கனடா ஓபன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில்18-21, 21-19, 21-14 என்ற கணக்கில் சகவீரர் பிரியான்ஷு ரஜாவத்தை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். 

Jul 02, 2025

டேபிள் டென்னிஸ் 1989முதல் நடத்தப்படும் ஆசிய"யூத்"பெண்கள் பிரிவில் கோப்பை வென்ற முதல் இந்தியர் என சாதித்தார் திவ்யான்ஷி .

ஆசிய 'யூத்'டேபிள் டென்னிஸ்சாம்பியன்ஷிப்29வதுசீசன்உஸ்பெகிஸ்தானில். 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் 14 வயது, இந்தியாவின் திவ்யான்ஷி, சீனாவின் ஜிலிங்லியுவை சந்தித்தார். முதல் 6செட்டுகளை இருவரும் மாறிமாறி கைப்பற்ற, 3–3 என ஆனது. 7வது, கடைசி செட்டை திவ்யான்ஷி 11-9 என வென்றார். திவ்யான்ஷி 4-3 என (10-12, 11-9, 11-6, 10-12, 11-9, 5-11, 11-9) பெற்றார்.இவர் 4,2 என்ற கணக்கில் 8,11/(13,11,/12,10,/11,8/,9,11, /11,8) வெற்றி பெற்றார். காலிறுதி, அரையிறுதி, பைனல் எனதொடர்ந்து மூன்று போட்டியில் சீன வீராங்கனைகளை சாய்த்த திவ்யான்ஷி, சாம்பியன் ஆனார். பெண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சின்ட்ரல்லா, ஹாசினி ஜோடி13 எனஜப்பானின் சாச்சி, மாவோ ஜோடியிடம் தோற்றது.ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் அன்குர், அபிநந்த் ஜோடி3-2 எனமலேசிய ஜோடியிடம் (ருய்ஜெ, ஏ சிம்) தோற்றது.

Jul 02, 2025

பர்மிங்ஹாமில் எட்ஜ் பாஸ்டன் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து, இரண்டாவது கிரிக்கெட்  டெஸ்ட் இன்று துவங்குகிறது.

  பர்மிங்ஹாமில்  எட்ஜ் பாஸ்டன் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து, இரண்டாவது கிரிக்கெட்  டெஸ்ட் இன்று துவங்குகிறது.  பர்மிங்ஹாம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியாஇங்கிலாந்து 8டெஸ்டில் மோதின. இந்தியா 7ல்தோல்வி. ஒரு போட்டி 'டிரா' ஆனது.எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம்எளிதாக ரன் எடுக்க, பேட்டர்களின் சொர்க்க பூமி. துவக்கத்தில் 'வேகம்,3வதுநாளில் இருந்து சுழற் பந்துவீச்சு எடுபடும்.பர்மிங்ஹாமில் முதல் 3 நாள் வெப்பமான வானிலை காணப்படும். கடைசி 2 நாளில் மழைக்கு வாய்ப்பு உண்டு. தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி டி.என். பி.எல்.,'டி-20' தொடரின் 9வது சீசன் தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த நேற்று ‘தகுதிச்சுற்று 1'ல் சேப்பாக்கம், திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்'வென்ற சேப்பாக்கம் அணிபீல்டிங் தேர்வு செய்தது.திருப்பூர் அணி 20ஓவரில் 202/5 ரன் எடுத்தது. சேப்பாக்கம் அணி 16.1 ஓவரில் 123 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. இந்த போட்டியில், திருப்பூர் அணி பைனலுக்கு, முன்னேறியது. 

Jul 01, 2025

இந்தியாவுக்கு டேபிள் டென்னிசில் 3 பதக்கம்.

ஆசிய 'யூத்' டேபிள் டென்னிஸ் சாம்பியன் ஷிப் 29வது சீசன் உஸ்பெகிஸ்தானில்,  15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் அணிகளுக்கான பைனலில் இந்தியா, சீனா மோதின. சாஹில் ரவாத், ரித்விக் குப்தா, ஆதித்யா தாஸ் அடங்கிய இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஆசிய யூத் தொடரில் முதன்முறையாக வெள்ளி வென்று வரலாறு படைத்தது இந்தியா.19 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. அபினந்த் பிரதிவதி, அங்கூர் பட்டா சார்ஜீ, பிரியானுஜ் பட்டா சார்யா அடங்கிய இந்திய அணி 2-3 என போராடி தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றியது.  19 வயதுக்குட்பட்ட கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் அங்கூர் பட்டா சார்ஜீ, தனீஷா ஜோடி 2-3 என தென்கொரியாவின் கிம் கயோன், பார்க் கஹியோன் ஜோடியிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.இது வரை இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 3 பதக்கம் கிடைத்துள்ளது.

1 2 ... 52 53 54 55 56 57 58 ... 95 96

AD's



More News