விளையாட்டுபோட்டிகள் 16 TH JUNE
குத்துச்சண்டை
நியூயார்க்கில் நடந்த தொழில்முறை போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், மெக்சிகோவின் ஜோசு சில்வா மோதினர். இதில் நிஷாந்த் 60-54 என. வெற்றி பெற்றார்.
ஹாக்கி
வரும் டிச. 1-13ல் ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 11வது சீசன் சிலியில் நடக்கவுள்ளது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி, 'சி' பிரிவில் ஜெர்மனி, அயர்லாந்து, நமீபியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக பெல்ஜியம் சென்றுள்ள ஜூனியர் இந்திய பெண்கள் அணி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளுடன் 5 போட்டிகளில்
விளையாடுகிறது. பெல்ஜியத்துக்கு எதிரான 3 போட்டியிலும் வென்ற இந்தியா, 4வது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. நந்தினி (8வது நிமி டம்), துணை கேப்டன் ஹினா பானோ (14வது) தலா ஒரு கோல் அடித்தனர்.
டேபிள் டென்னிஸ்
ஆமதாபாத்தில் (குஜராத்) அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வதுசீசன்நடந்தது. நேற்று நடந்த பைனலில் மும்பை, ஜெய்ப்பூர் அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் மும்பையின் லிலியன் பார்டெட் 2-1 என ஜெய்ப்பூரின் கனக்ஜாவை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ஜெய்ப்பூரின் ஸ்ரீஜா அகுலா 1-2 என மும்பையின் பெர்னாடெட் சோக்சிடம் தோல்வியடைந்தார். கலப்பு இரட்டையர் போட்டியில் மும்பையின் ஆகாஷ் பால், பெர்னா டெட் சோக்ஸ் ஜோடி 3-0 என ஜெய்ப்பூரின் ஜீத் சந் திரா, பிரிட் ஏர்லேண்ட் ஜோடியை வென்றது. ஆண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் ஜீத் சந்திரா (ஜெய்ப் பூர்) 2-1 என அபினந்தை (மும்பை) வீழ்த்தினார்.
நான்கு போட்டிகளின் முடிவில் மும்பை அணி 8-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றது.
மல்யுத்தம்
கிர்கிஸ்தானில் நடக்கவுள்ள ஜூனியர் (20 வயது) ஆசிய சாம்பியன்ஷிப் (ஜூலை 5-13) போட்டிக்கு இந்திய வீராங்கனை மான்சி லேதர் (68 கிலோ) தகுதிபெற்றார்.
0
Leave a Reply