13- வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி,
13- வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டி, அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.
மொத்தம் 28 லீக் ஆட்டம் உள்பட 31 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்தியாவில் பெங்களூரு, இந்தூர்,கவுகாத்தி,விசாகப்பட்டினத்திலும், இலங்கையில் கொழும்பு நகரிலும் போட்டிகள் நடக்கின்றன.
12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் இந்த பெண்கள் கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா. இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
செப்டம்பர் 30-ந்தேதி பெங்களூருவில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது.
0
Leave a Reply