யு.எஸ்., ஓபன் 'சூப்பர் 300’ பாட்மின்டன் தொடர் நியூயார்க்கில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, கனடாவின் பிரையன் யங் மோதினர். மொத்தம் 47 நிமிடம் நீடித்த போட்டியில் ஆயுஷ் 21-18, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக 'வேர்ல்டு டூர்' பட்டம் வென்றார். 20,யு.எஸ்., ஓபன் ஒற்றையரில் பட்டம் வென்ற ,இந்திய வீரரானா கர்நாடகாவை சேர்ந்த ஆயுஷ் 2வது இந்திய வீரரானார். நடப்பு சீசனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய முதல் இந்தியரானார் ஆயுஷ்.பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் தான்வி சர்மா 16, அமெரிக்காவின் பெய் வென் ஜாங் 34, மோதினர்.முதல் செட்டை 11-21 என இழந்த தான்வி, 2வது செட்டை 21-16 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ண யிக்கும் 3வது செட்டில் தான்வி, 10-21,. முடிவில் தான்வி 11-21, 21-16, 10-21 என்ற கணக்கில் -தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.
கிரிக்கெட் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண் டர்சன்-சச்சின் டிராபி) பங்கேற்ற இங்கிலாந்து சென்று உள்ள இந்திய அணி லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் தோல்வியடைந்தது.பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் நாளை துவங்குகிறது. இங்கு இந்தியா பங்கேற்ற 8 டெஸ்டில் 7ல் இங்கிலாந்திடம் தோற்றது. ஒரு போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து 'லெவன்' அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. கோல்ப்இந்திய வீராங்கனைகளான வாணி கபூர் 6வது, திக்ஷா தாகர் 8வது இடம்,ஜெர்மன் மாஸ்டர்ஸ் தொடரில் பிடித்தனர். சிங்கப்பூரின் ஷானன் டான் சாம்பியன் பட்டம் வென்றார். துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் ,டேராடூனில் நடந்த தேசிய தகுதி போட்டிக்கான சுபாஷ் சிஹாக்கை (245.3 புள்ளி) வீழ்த்திய சவுரப் சவுத்ரி (245.7) முதலிடம் பிடித்தார்.
நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட் டியில் திண்டுக்கல், நத்தம் என். பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் திருப்பூர், நெல்லை அணிகள் மோதின.திருப்பூர் அணி ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நெல்லை அணி களமிறங்கியது. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவுலிங்' தேர்வு செய்தார் திருப்பூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. நெல்லை அணி 19.4 ஓவரில் 113 ரன்னுக்கு தோல்வி யடைந்தது. இரவு போட்டி திண்டுக்கல், திருச்சி 'நடப்பு சாம்பியன்' அணிகள் மோதின. திண்டுக்கல் அணி ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது. திருச்சி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற, வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த திண்டுக்கல் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்தது.
கால்பந்து பெண்களுக்கான ஆசிய கோப்பை கால் பந்து 21வது சீசன்ஆஸ்திரேலியாவில், அடுத்த ஆண்டு(மார்ச் 121). மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான் என 4 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 8 இடங்களுக்கு தகுதிச் சுற்று நடக்கிறது. இதில் 34 அணிகள், 8 பிரிவுகளாக விளையாடுகின்றன. இந்திய அணி 'பி' பிரிவில் தாய்லாந்து, மங்கோலியா, ஈராக், திமோர்லெஸ்தே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதற்கான போட்டிகள் தாய்லாந்தில் நடக்கிறது. முதல் போட்டியில் மங்கோலியாவை வீழ்த்திய இந்தியா, 2வது போட்டியில் திமோர்-லெஸ்தே அணியை சந்தித்தது, துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது குத்துசண்டை 'எலைட்' பெண்கள் தொடருக்கான காலிறுதியில் (48-51 கிலோ) ஐதராபாத்தில் தெலுங்கானாவின் நிகாத் ஜரீன் 5-0 என கல்பனாவை வீழ்த்தினார்.துப்பாக்கி சுடுதல்10 மீ., 'ஏர் பிஸ்டல்' டேராடூனில் நடக்கும் தேசிய தகுதி போட்டிக்கான ,பைனலில் மனு பாகரை (244,5 புள்ளி) வீழ்த்திய சுருச்சி இந்தர் சிங் (245.6) முதலிடம் பிடித்தார்.
யூத் ஒருநாள் கிரிக்கெட் தொடர்5 போட்டிகள் கொண்ட யூத் ஒருநாள் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ள இளம் இந்திய அணி (19 வயது),. முதல் போட்டி நேற்று பிரைட்டன் நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் 174 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி 24 ஓவரில் 178/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் (12 புள்ளி), திருப்பூர் (8), திண்டுக் கல் (8) அணிகள் கோவை, சேலம், நெல்லையில் நடந்த லீக் போட்டிகளின் முடிவில் , அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்துக்கு சேலம் புள்ளி), திருச்சி (6 (4), நெல்லை (4), மதுரை (4) அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. -கோவை அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.'பிளே-ஆப்' போட்டிகள், கடைசி கட்ட லீக் சுற்று, இன்று முதல் திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடக்கவுள்ளன. இன்று நடக்கும் லீக் போட்டியில் சேப்பாக்கம் மதுரை, கோவை சேலம் அணிகள் மோதுகின்றன. நாளை நடக்கவுள்ள லீக் போட்டியில் திருப்பூர் - நெல்லை, திண்டுக்கல்- திருச்சி அணிகள் விளையாடுகின்றன.புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று-1, ஜூலை 1ல் நடக்கிறது. மூன்றாவது, 4வது இடம் பிடிக்கும் அணி கள் மோதும் 'எலிமினேட்டர்' போட்டி, ஜூலை 2ல் நடக்கவுள்ளது.ஜூலை 4ல், தகுதிச்சுற்று-2 நடத்தப்படுகிறது. பைனல், ஜூலை 6-ல் நடக்கவுள்ளது.
மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக் ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்ற உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் உலக செஸ் கோப்பை தொடர் நடந்தது. எட்டு சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தான் வீரர்கள் நாடிர்பெக் (5.5), சிந்தரோவ் (5.0), பிரக் ஞானந்தா (4.5), அர்ஜுன் (45) முதல் 4 இடத்தில் இருந்தனர்.9வது, கடைசி சுற்றில் அர்ஜுன் அரவிந்த் மோதிய போட்டி 'டிரா' ஆனது. நாடிர்பெக்கிற்கு எதிரான போட்டியில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இதன் 49 வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தாவுக்கு ரூ.17.10 லட்சம் பரிசு கிடைத்தது. அர்ஜுன் ரு. 6 லட்சம் (5வது), அரவிந்த் ரூ. 1.7 லட்சம் (10) பெற்றனர்.
எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் ,சென்னையில், இந்தியா மாஸ்டர்ஸ் ஹாக்கி முதல் சீசன், நேற்று நடந்த ஆண்களுக்கான பைனலில் தமிழகம், மகாராஷ்டிரா அணிகள் மோதின. இதில் தமிழக அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை வென்றது.தமிழகம் முத்துசெல்வன் சார்பில் (30வது நிமிடம்), சுதர்ஷன் (34), கவுதமன் (36), தாமரைக் கண்ணன் (40), ராமதாஸ் (52) தலா ஒரு கோல் அடித்தனர்.பெண்களுக்கான பைனலில் ஒடிசா அணி 1-0 என, பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஸ்குவாஷ் ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் நடந்த ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் அபேசிங், வேலவன் செந்தில்குமார் ஜோடிஇரண்டாவது முறையாக தங்கம் வென்றது. பெண்கள் இரட்டையரில் இத்தொடரின் 'நம்பர்-2' ஜோடி, இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங்ஜோடி, 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற மலேசியாவின் அய்னா அமனி,இ ஜின்இங் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 8-11 என கோட்டை விட்ட இந்திய ஜோடி, அடுத்த இருசெட்டுகளை 11-9, 11-10 என போராடி,முடிவில் இந்திய ஜோடி 2-1 என வென்று, தங்கம் கைப்பற்றியது.கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் 'நம்பர்-1' இந்தியாவின் அபே சிங், அனாஹத் சிங் ஜோடி,'நம்பர்-2'ஆக உள்ள மலேசியாவின் அர்னால்டு, சண்டாரை ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி 2-0 என (11-9, 11-7) வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றியது.ஆசிய அல்லது உலகஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடரில், மூன்று பிரிவிலும் தங்கம் கைப்பற்றிய முதல் அணி என இந்தியா புதிய வரலாறு படைத்ததுதமிழ்நாடு கிரிக்கெட் போட்டி டி.என்.பி.எல்., லீக் நெல்லையில் நேற்று நடந்த போட்டியில் நெல்லை, 'நடப்பு சாம்பியன்' திண்டுக்கல் அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த நெல்லை அணி20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்எடுத்தது. திண்டுக்கல் அணி 18.4 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 180 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹாக்கி சென்னை, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் இந்தியா மாஸ்டர்ஸ் ஹாக்கி தொடரின் முதல் பதிப்பு நடக்கிறது.முதல் அரையிறுதிப் போட்டியில் தமிழக ஆண்கள் அணி, சண்டிகர் அணியை 3,0 என்ற கோல் கணக்கில், வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா அணி,4,1 என்ற கோல் கணக்கில், ஒடிசா அணியை வீழ்த்தியது.நேற்று நடந்த பெண்களுக்கான முதல் அரையிறுதியில், தமிழக அணி1,4 எனஒடிசாவிடம் வீழ்ந்தது. இரண்டாவது அரையிறுதியில் ஹரியானா 3-0 என பஞ்சாப் அணியை வீழ்த்தியது.இன்று மதியம் 2:00 மணிக்கு( பெண்கள்), மாலை 4:00 மணிக்கு(ஆண்கள்) இறுதிப் போட்டிகள் நடக்க உள்ளன.மல்யுத்தம் 17 வயதுக்குட்பட்ட நட்சத்திரங்களுக்கான ஆசியமல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் வியட்நாமில்பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' பிரிவு போட்டிகள் நடந்தன.43 கிலோபிரிவு பைனலில் இந்தியாவின் ரச்சனா,9,0 என ஜப்பானின் மிராஹிகாசியை வீழ்த்தி, தங்கம் கைப்பற்றினார். 46 கிலோபைனலில் இந்தியாவின் ருடுஜா,10,0 எனஉஸ்பெகிஸ்தானின் மஷ் ஹுராவை வீழ்த்தினார். 57கிலோ பைனலில் கஜகஸ்தானின் உஸ்மனோவாவை நாக் அவுட்' செய்து, இந்தியாவின் மோனி, தங்கம் கைப்பற்றினார்.மற்றொரு பைனலில்(65 கிலோ) இந்தியாவின் அஷ்வினி,2,0 என சீனாவின் இகிங் ஜியாவைவென்றார்.. 69கிலோ பைனலில் இந்தியாவின் மணிஷா, 8-0 என சீனாவின் ஜியாகி ஜுவை வென்றார்..தவிர, சேஷ்தா (40), டினா புனியா (61), காஜல் (73) வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர். அஞ்சலி (49), சாரிகா (53), வெண் கலம் வென்றனர். இந்தியா 5 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கம் வென்று, ஒட்டு மொத்த சாம்பியன் ஆனது. ஸ்னுாக்கர்இலங்கையில் நடந்த ஆசிய '6-ரெட்' சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவின் பராஸ் குப்தா 2-6 என மலேசியாவின் தோர் சுவான் லியோங்கிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.
தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி டி.என்.பி.எல்., லீக் போட்டியில் நெல்லையில் நேற்று மதுரை, திருச்சி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருச்சி அணி கேப்டன் சுரேஷ் குமார் 'பவுலிங்' தேர்வு செய்தார். மதுரை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 131 ரன் எடுத்தது. திருச்சி அணி 18.1 ஓவரில் 137/6 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாக்கி ஜெர்மனியில், நான்கு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஜூனியர் ஹாக்கி தொடரில், இந்தியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் அணிகள் மோதின.முதல் போட்டியில் ஜெர்மனியிடம் வீழ்ந்த இந்தியா, பின் எழுச்சி கண்டு 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்றது. மூன்றாவது போட்டியில் ஸ்பெயினுக்கு எதிராக தோல்விய டைந்தது.மூன்றாவது இடத் துக்கான போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 3வது இடம் பிடித்தது.ஸ்குவாஷ் மலேசியாவில் ஆசிய ஸ்குவாஷ் இரட் டையர் சாம்பியன்ஷிப் தொடரில் ,ஆண்கள் இரட்டையரில் நடப்பு சாம்பியன், இந்தியாவின் அபேசிங், வேலவன் செந்தில்குமார் ஜோடி, அரையிறு தியில் ஹாங்காங்கின் சிம் வாங், மின் ஹாங் டங் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 11–5 என கைப்பற்றிய இந்திய ஜோடி, அடுத்த செட்டை யும் 11-9 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.துப்பாக்கி சுடுதல் ஆசிய சாம்பியன்ஷிப் உலக கோப்பை டேராடூனில் நடக்கும் ,தொடருக்கான தேசிய தகுதி போட்டியில் இந்தியாவின் அனிஷ் (25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்') முதலிடம். செஸ் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்ஸ் ,மும்பை தொடரின், 9வது சுற்றில் ஜார்ஜியாவின் லாவினை வீழ்த்திய இந்தியாவின் லலித் பாபு, 8.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ('ஆண் டர்சன்-சச்சின்'டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லீட்சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 471, இங்கிலாந்து 465 ரன் எடுத்தன. இரண் டாவது இன்னிங்சில் இந்தியா 364 ரன் எடுக்க, இங்கிலாந்துக்கு 371 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று ஐந்தாவுது நாள் ஆட்டம் நடந்தது இன்னிங்சில் 373/5 ரன் எடுத்து இங்கிலாந்து அணி வென்றது.தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி டி.என்.பி.எல்., லீக் போட்டியில் நெல்லையில் நேற்று, திருப்பூர், கோவை, அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி, பீல்டிங் தேர்வு செய்தது. கோவை அணி 41/1 ரன் எடுத்திருந்தது. திருப்பூர் அணி 16.5 ஓவரில் 140/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கோவை அணி 5வது (6ல்) தோல்வியை சந்தித்தது. 'பிளே ஆப்' வாய்ப்பை திருப்பூர் அணி உறுதி செய்தது.